பக்கம் எண் :

184பாரதம்உத்தியோக பருவம்

இவர்களும்)அநேக எண்ணங்களை எண்ணினாலென்ன? போய் நகைக்கில்
என் - (மறைவில்) சென்று சிரித்தாலென்ன? உரைத்த உண்மை மொழி
பொய்த்தது என்று அமரர் புகலில் என் - (நான் முன்) சொன்ன வார்த்தை
சத்தியந் தவறிற்றென்று தேவர்கள் சொன்னாலென்ன? வேய் மலர்
தொடையல்- அணிந்த பூமாலையையுடைய, ஐவர் - பஞ்சபாண்டவர்,
என்னுடன்-, வெம்சமர் - கொடிய போரை, மிகைத்து விளைக்கில் -
அதிகமாகச் செய்தால், என்- என்ன? ஈ இருக்கும் இடம் எனினும் - ஈ
தங்குதற்குவேண்டிய அளவுஇடமாயினும், இ புவியில் அரசு அவர்க்கு இனி
யான் கொடேன் - இந்தப்பூமியில் அரசாள அவர்களுக்கு இனி நான்
கொடுக்கமாட்டேன்; (எ - று.)

     என்என்ற வினா, 'அதனால் எனக்கு வருவதொரு தீங்குமில்லை'
என்றஎதிர்மறைப் பொருள்பட நின்றது.  நான்காமடியில் நீ யெனப்பதம்
பிரித்தல்பொருந்தாது.                                      (174)

115.-கண்ணன் மீண்டும்துரியோதனனை வேண்டுதல்.

கார்வழங்குரு மெனச்சினத்தினொடுகண்ணிலான்மதலைகழறவும்
பார்வழங்க நினைவில்லையேலவனிபாதியாயினும் வழங்குவாய்
தார்வழங்குதடமார்பவென்னவதுதானுமன்னவன் மறுக்கவைந்
தூர்வழங்குகெனவுற்றிரந்தனனிவ்வுலகெலா முதவு முந்தியான்.

     (இ -ள்.) (என்று), கண் இலான் மதலை - திருதராட்டிர குமாரன்
[துரியோதனன்], சினத்தினொடு - கோபத்துடனே, கார் வழங்கு உரும் என -
மேகந்தருகிற இடியைப்போல, கழறவும் - (உறுதியாகச்) சொன்ன வளவில்,-
இஉலகு எலாம் உதவும் உந்தியான் - இந்த உலகங்களையும் இவ்வுலகத்து
உயிர்களெல்லாவற்றையும் படைத்தருளுந் திருநாபியையுடைய கண்ணபிரான்,
(துரியோதனனை நோக்கி), 'தார் வழங்கு தடமார்ப - மாலையுலாவப் பெற்ற
பரந்த மார்பையுடையவனே! பார் வழங்க நினைவு இல்லை ஏல் - இராச்சிய
பாகம் முழுவதையுங் கொடுக்கக் கருத்தில்லையானால், அவனி பாதி
ஆயினும்வழங்குவாய் - அவ்விராச்சிய பாகத்திற் பாதியையாயினுங்
கொடுத்திடுவாய்,'என்ன - என்று சொல்ல, அதுதானும் -
அவ்வார்த்தையையும்,  மன்னவன் -துரியோதனன், மறுக்க -
(கொடேனென்று) தடுத்துவிட,- (பிறகு கண்ணன்),'ஐந்து ஊர் வழங்குக என
- ஐந்து ஊரையாயினுங் கொடுப்பாய்' என்று, உற்றுஇரந்தனன் - பொருந்தி
[உடன்பட்டு வணக்கமாக] யாசித்தருளினான்; (எ - று.)

    "ஒருநாலு முகத்தவனோ டுலகீன்றா யென்பரதுன், திருநாபி மலர்ந்த
தல்லால் திருவுளத்தி லுணராயால்" என்பது சித்தாந்தமாதலால், 'உலகெலா
முதவு முந்தியான்' என்றார்.  மார்பு பரந்திருத்தல் - உத்தம விலக்கணம்.
இங்ஙனம் லோபியைச் சென்று யாசிக்க இணங்குதல் அருமைபற்றி, 'உற்று
இரந்தனன்' என்றார்.  உலகங்களையெல்லாந் தனதாகவுடையவன், முன்னே
கொடையாளியான மாவலிபக்கல் மூவடி வேண்டியது போலவுமன்றி,
இப்பொழுது