மெய்விளங்கவருகுருநிலத்தினிடைவந்துவெஞ்சமர்விளைக்கவே கைவழங்குகெனநின்றதூணிடையறைந்துரைக்குமிவைகாவலன். |
(இ -ள்.) பொய் வளர்ந்த மொழி மன்னன் - பொய் மிகுந்த சொற்களையுடைய துரியோதனராசன், மற்று இவை புகன்ற பின்பு - இன்னும் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொன்னபின்பு, (கண்ணன்), 'புயவலியினால் - தோள்களின் வலிமையினாலே, ஐவர் தங்கள் அரசும் கொடாமல் - பஞ்சபாண்டவர்களது அரசாட்சியை (அவர்களுக்கு)க் கொடுத்திடாமல், அடல் ஆண்மைகொண்டு - பல பராக்கிரமங்களால், எதிர் அடர்த்தியேல் - (நீ) எதிரிற் போர் செய்வாயானால்,- மெய் விளங்க வரு குருநிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்க - உண்மை விளங்கப்பெற்ற குருக்ஷேத்திரத்திலே வந்து கொடிய போரைச் செய்வதற்கு, கை வழங்குக -கைதட்டிக் கொடுப்பாயாக,' என - என்றுசொல்ல,- காவலன் - துரியோதனராசன், (மிகக்கோபித்து), நின்ற தூணிடை அறைந்து - எதிரில் நின்ற தூணின் மீது கையால்மோதி, இவை உரைக்கும் - இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ - று.) - அவற்றை, மேல் நான்குகவிகளிற் காண்க. முன்சூதாட்டம் முடிந்தகாலத்திற் சொன்ன வார்த்தையின்படி இப்பொழுது. அரசுகொடாமல் பொய்வளர்ந்த மொழிமன்னனானதனால், அவன் வார்த்தையை இப்பொழுது கண்ணன் நம்பாமல் அவனைக் கையால் தன்கையை அடித்துச் சபதஞ்செய்து தரும்படி கேட்டருளினான். 'அடர்த்தியே' என்ற பாடத்துக்கு - 'போர்செய்வாயே' என்று பொருள்; ஏகாரம்- இகழ்ச்சி விளக்கும். அவரவர் பராக்கிரமம் உள்ளது உள்ளபடி அங்குவெளிப்படலாமென்ற கருத்தால் 'மெய்விளங்கவரு' என்ற அடைமொழியைக்குருநிலத்துக்குக் கொடுத்த தென்னலாம். (180) 121.-இதுமுதல் நான்குகவிகள்- ஒருதொடர்; துரியோதனன் பலவாறு பழித்துரைத்தல். புன்பிறப்புடையபொதுவர்தங்களொடு புறவிலானிரைபுரந்திடும் உன்பிறப்பு முரலோடுகோவியருனைப்பிணித்தது மறந்துநீ மன்பிறப்பிலுயர்குருகுலத்தவர்தம்வாய்மைதானுமொருமாசிலா வென்பிறப்பு முணராமலோசபையிலிந்தவாசகமியம்பினாய். |
(இ -ள்.) புல் பிறப்பு உடைய - இழிவான உற்பத்தியையுடைய, பொதுவர் தங்களொடு - இடையர்களுடனே, புறவில் - முல்லை நிலமாகிய காட்டிலே, ஆன் நிரை - பசுக்கூட்டங்களை, புரந்திடும் - மேய்த்திடுகின்ற, உன் - உன்னுடைய, பிறப்பும் - பிறப்பின் இழிவையும், கோவியர் - இடைப்பெண்கள், உனை - உன்னை, உரலோடு - உரலுடனே, பிணித்ததும் - கட்டிவைத்ததையும், நீ மறந்து -, - மன் பிறப்பில் உயர் - இராசகுலங்களிலே சிறந்த, குருகுலத்தவர்தம் - குருகுலத்திற் பிறந்த அரசர்களது, வாய்மை தானும்- சத்தியத்தையும், ஒரு மாசு இலா என் பிறப்பும் - ஒரு குற்றமு |