பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 189

மில்லாதஎனது பிறப்பின் பெருமையையும்,- உணராமலோ-, சபையில்-, இந்த
வாசகம் இயம்பினாய்-(நீ) இவ்வார்த்தைகளைச் சொன்னாய்;(எ- று.)

    மறவாமலும் அறிந்தும் இருப்பாயாயின் இங்ஙனங் கூறாயென்பதாம்.
கோவியரென்ற சொல்லில் - கோபஸ்திரீக ளென்ற பொருள் மாத்திரமேயன்றி,
கோபமுடையவ ரென்ற பொருளுந் தோன்றுமாறு அறிக;
"மாறுகொண்டேயொருகோபிபற்றி, யடிக்கும் பொழுதில்" என்றார்
திருவரங்கத்துமாலையிலும்.                                (181)

122.ஏவிலங்குசிலையைவர்வந்தணுகின்யானயர்ந்தெளி
                                   திருப்பனோ,
கோவிலங்குபொரவஞ்சுமோகரட குஞ்சரங்கள்பகைகொண்ட
                                        கான்,
மேவிலங்குமுன்மலைத்தல்கையறைய வேண்டுமென்றது நின்
                                மேன்மையோ,
நாவிலங்குமெனவெண்ணியோ மிகவுநன்றுநன்றரசர்
                                    ஞாயமே.

     (இ -ள்.) ஏ - அம்புகள், இலங்கு - விளங்கப்பெற்ற, சிலை -
வில்லையுடைய, ஐவர் - பஞ்சபாண்டவர், வந்து அணுகின் - (போருக்கு)
வந்துநெருங்கினால், யான் அயர்ந்து எளிது இருப்பனோ - நான்
சோர்வடைந்துஎளிமையாக இருந்திடுவேனோ? கரடகுஞ்சரங்கள் பகை
கொண்ட கால் -மதயானைகள் விரோதித்து எதிர்த்தலைச் செய்த காலத்து,
கோவிலங்கு - இராசமிருகமாகிய சிங்கம், பொர அஞ்சுமோ - (அவற்றுடன்)
போர்செய்தற்குப்பயப்படுமோ? 'அங்கு மலைத்தல் மேவில் - அவ்விடத்துப்
போர்செய்வதைஉடன்பட்டால், முன் கை அறையவேண்டும் - முன்னே
கையடித்துத்தரவேண்டும்', என்றது- என்று (நீ) கூறினது, நின் மேன்மையோ
- உனதுசெருக்கினாலோ? நா விலங்கும் என எண்ணியோ - (எனது) சொல்
தவறுமென்று கருதியோ? அரசர் ஞாயம் மிகவும் நன்று நன்று - அரசர்களது
நீதிமிக அழகிது! அழகிது!! (எ - று.)

    அரசனாகிய என்னை அரசனாகிய நீ இங்ஙனம் மதித்தது சிறிதுந்
தகாதென்றவாறு.  மிருகேந்திரனான சிங்கமொன்று மதயானைகள்
பலவற்றிற்குப்பயப்படாமல் அவற்றை எளிதில் அழித்தல்போல,
ராஜராஜனான நான்செருக்குக்கொண்ட பாண்டவரைவர்க்கு அஞ்சாமல்
அவர்களை அழித்திடுவேனென்பதாம்.  முன்னிரண்டடி
எடுத்துக்காட்டுவமை:  முதலடி -உபமேயமும், இரண்டாமடி -
உபமானமுமாம்.  ஏ + இலங்கு = ஏவிலங்கு;தனிமொழி யாகிய பெயர்ச்சொல்
ஏகாரத்தின்முன் வகரவுடம்படுமெய்தோன்றிற்று.  குஞ்சரம் -
காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்பதென்று பொருள்;குஞ்சம் - புதர்.  நா -
சொல்லுக்குக் கருவியாகுபெயர்.  நன்று நன்று -அடுக்கு, இகழ்ச்சி பற்றினது;
மிகவும் நன்று நன்று - எதிர்மறையிலக்கணை. ஞாயம் - ந்யாயமென்பதன்
திரிபு.                                                     (182)

123.அளிவருங் குழல்பிடித்து மன்னவையிலைவருக்குமுரி
                               யாளைநான்,
எளிவருந்துகிலுரிந்தபோ தருகிருந்துகண்டவர்களல்ல