கள் ஐவர்ஆம் - பிரதானமாய் இவர்களைப்பெற்ற பிதாக்கள் ஐந்துபேராம்; (இங்ஙனமிருக்க), பின்னை - பின்பு, ஆசைகொடு - விருப்பங்கொண்டு, குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் - குருகுலத்துக்குரிய பாத்தியதையை அடைந்தவராவார்களாம்: இவர்கள் ஐவரும் - இப்பாண்டவர் ஐந்துபேரும், ஒருபிறப்பில் - ஒரு சன்மத்திலே, ஓர் மின்னை - ஒரு பெண்ணை, பரிவினோடு -அன்புடனே, தனித் தனி விரும்புவார் ஆம் - (மணஞ்செய்துகொண்டு)தனித்தனி காதலிப்பாராம்; அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது -அவர்களோடு ஒப்ப ஒரு குலத்திற் பிறந்த அரசனென்று சொல்வது, என்னைஆம்- (தாய்தந்தை குலத்துரிமை மணஞ்செய்தல் முதலிய எவற்றிலும் ஒருகுற்றமுமில்லாத) என்னையாம்: அம்ம - ஆச்சரியம்! இவை என் கொல் ஆம்- இவைகள் என்ன அநீதியாம்! (எ - று.)
இதில், ஆம் எனப் பலவிடத்தும் வந்த சொல் - அலட்சியந் தோன்ற நிற்கும்; "கைத்தோடுஞ் சிறைகற்போயை, வைத்தோ னின்னுயிர்வாழ்வானாம், பொய்த்தோர்வில்லிகள் போவாராம், இத் தோடொப்பதி யாதுண்டே" எனக் கம்பராமாயணத்திற் போல. அன்னையர் இருவர் - குந்தியும், மாத்திரியும், தந்தையர் ஐவர் - யமன்,வாயு, இந்திரன், அசுவிநீ தேவரிருவர் என்பவர். மின் - பெண்ணுக்கு உவமையாகுபெயர். பேருக்குத் தந்தையான பாண்டு அப்பிரதானனென்று, 'முதலளித்த தந்தையர்' என்றான். வளர்த்தவன் பாண்டுவாயினும், பெற்றவர் வேறுபல ரென்க. மூத்தவன் இளையவன் என்னும் முறைமையைப் பார்த்தல் முதலியன ஒருகுலத்திற் பிறந்தவர்களுக்கன்றோ? இவர்கட்கும் குருகுலத்துக்கும்என்ன சம்பந்தமென முதலுக்கே சுழிவைக்கத் தொடங்கி, தன்னை அவர்க்குஉடன்பிறந்தவனென்பதும் அகௌரவமென வெறுக்கிறான். (184) 125.-கண்ணன்அவ்விடத்தினின்று புறப்பட்டு விதுரன் மாளிகையை யடைதல். ஞாலமுற்றுமுடையவன்மொழிந்திட நகைத்துவண்டுவரை நாதனுஞ், சாலமுற்றுமினியவர்கருத்தெனநினைந்து பேரவை தணந்து போய்க், கோலமுற்றசிலை விதுரன்வாழ்வுபெறு கோயில் சென்று நனிகுறுகினான், சீலமற்றவர் சினந்தபோது மொருதீதிலாதவர் செயிர்ப்பரோ. |
(இ -ள்.) ஞாலம் முற்றும் உடையவன் - நிலவுலகமுழுவதையுந் தனதாகவுடைய துரியோதனன், மொழிந்திட-(இவ்வாறு) சொல்ல, -வள் துவரை நாதனும் - அழகிய துவாரகாபுரிக்குத் தலைவனான கண்ணபிரானும்,-நகைத்து -(அவனது பேதைமைச் செருக்கை நோக்கிச்) சிரித்து, இனி அவர்கருத்து சாலமுற்றும் என நினைந்து-இனிமேல் அப்பாண்டவர்களது எண்ணம் முடிவுபெறுமென்று எண்ணி, பேர் அவை தணந்துபோய் - பெரிய அச்சபையைநீங்கிப் புறப்பட்டு, கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வுபெறு கோயில் - அழகுமிகுந்த வில்லையுடைய விதுரன் வாழ்தலைப்பெற்ற திருமாளி |