பக்கம் எண் :

192பாரதம்உத்தியோக பருவம்

கையை,சென்று நனி குறுகினான் - போய்த் தகுதியாக அடைந்தான்; சீலம்
அற்றவர் சினந்தபோதும் - நல்லொழுக்கமில்லாதவர்கள் கோபங்கொண்ட
காலத்திலும், ஒரு தீது இலாதவர் - சிறிதுந் துர்க்குணமில்லாத பெரியோர்கள்,
செயிர்ப்பரோ - (எதிரில்) கோபிப்பார்களோ?  (எ - று.)

    துர்க்குணமுடைய துரியோதனன் இங்ஙனங் கோபங்கொண்டதற்குச்
சற்குணநிதியான கண்ணன் எதிராகச் சிறிதுஞ் சீறினானில்லை யென்ற
சிறப்புப்பொருளை, நான்காமடியிற் கூறிய பொதுப்பொருளால்
விளங்கவைத்ததனால், வேற்றுப்பொருள்வைப்பணி.                (185)

126.-கண்ணனுக்குவிருந்திட்டதுபற்றி விதுரனைத்
துரியோதனன் சினந்து கூறுதல்.

கரிந்துமாலைசருகாகவும் புதியகமலவாண்முகம்வெயர்க்கவுந்
திருந்துகண்ணிணை சிவக்கவுங் கொடியசெய்யவாயிதழ் துடிக்கவும்
இருந்தபேரவையினெடிதுயிர்த்திடு மிராசராசனவனுக்கிவன்
விருந்துசெய்தவுறவென் கொலென்றரசரெதிர் விதுரனை விளம்புவான்.

     (இ -ள்.) மாலை - (தான் தரித்த) பூமாலைகள், கரிந்து சருகு
ஆகவும் -கருகி உலர்ந்து போகவும்,-புதிய கமலம் வாள் முகம் -
அன்றலர்ந்தசெந்தாமரை மலர்போன்ற ஒளியையுடைய தனது முகம்,
வெயர்க்கவும் -வேர்வையடையவும்,- திருந்து கண் இணை சிவக்கவும் -
அழகாகவுள்ளஇரண்டு கண்களும் செந்நிறமடையவும்,-கொடிய செய்ய வாய்
இதழ் துடிக்கவும்- கொடுஞ் சொற்களைச் சொல்லுந் தன்மையுள்ள சிவந்த
தன் வாயின்உதடுகள் துடிக்கவும்,- இருந்த பேர் அவையில் நெடிது
உயிர்த்திடும் -வீற்றிருந்த பெரியசபையிலே (அளவிறந்த கோபத்தாற்)
பெருமூச்சு விடுகிற,இராசராசன் - துரியோதனன்,- (கண்ணன் சென்ற பின்பு),
- அவனுக்கு இவன்விருந்துசெய்த உறவு என்கொல் என்று -
'அக்கண்ணனுக்கு இவ்விதுரன்விருந்துபசாரஞ் செய்தற்கு உரிய சம்பந்தம்
யாதோ?' என்று சொல்லி, அரசர்எதிர் - (அங்கிருந்த) அரசர்களது
முன்னிலையில், விதுரனை விளம்புவான் -விதுரனை (நிந்தித்து)ப்
பேசுபவனானான்; (எ - று.)

    இக்கவியிற் கூறிய செயல் பலவும் - தீராப் பெருங்கோபத்தின் காரியம்,
சொல்லின் கொடுமையை வாயின்மேலேற்றிக் கூறினார், இவனுக்கும்
அவனுக்கும் நெருங்கின உறவில்லை யென்பான், 'என்கொல்'என்றான்.(186)

127.-இதுவும், மேற்கவியும் -துரியோதனன் விதுரனைப்
பழித்துக் கூறுதல்.

வன்பினாலவனி வௌவவென்றுகொலென்மனையிலுண்டியை
                                      மறுத்தவன்,   
தன்பதாகினியொடினிதருந்தும்வகை தன்னிலின்ன
                                   முதியற்றினான்,
என்பிதாவொடுபிறந்து மின்றளவுமென்கையோதனமருந்தியும்,
அன்புதானுடைய னல்லனென்பகை தனக்கு முற்ற
                                 பகை யல்லனோ.