பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 193

     (இ -ள்.) (இவ்விதுரன்), வன்பினால் அவனி வௌவ என்று கொல் -
பலாத்காரமாக (எனது) இராச்சியத்தைப் (பாண்டவர்)
பறித்துக்கொள்ளவேண்டுமென்று கருதியோ? என் மனையில் உண்டியை
மறுத்தவன் தன் பதாகினியோடு இனிது அருந்தும் வகை தன் இல் இன்
அமுதுஇயற்றினான் - எனது வீட்டில் உணவு கொள்ளுதலை யொழித்த
கண்ணன்தனது சேனையுடனே இனிமையாக உண்ணும்படி தனது வீட்டில்
(அவனுக்கு)இனிய நல்லுணவை அமைப்பித்தான்; (இவன்), என் பிதாவொடு
பிறந்தும் -எனது தந்தையுடனே ஜனித்தும், இன்று அளவும் என் கை ஓதனம்
அருந்தியும்- இன்றைத்தினம் வரையிலும் எனது கையால் அளிக்கப்பட்ட
அன்னத்தைப்புசித்தும், அன்புதான் உடையன் அல்லன் - (என்னிடத்து)
அன்புடையவனல்லன்; (ஆதலால்), என்பகை தனக்கும் உற்ற பகை
அல்லனோ- எனக்கு நேரிற் பகைவனாக வுள்ளவனினும் (மறைந்து
உட்பகைவனாகவுள்ளஇவன்) மிகுந்த பகையாளியல்லனோ? (எ - று.)

    "பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட்டெவ்வோ, ரெழுபது கோடியுறும்"
என்ற நீதியைக் கருதி, அகப்பகையான இவன் புறப்பகையினுங்
கொடியனென்றான்.  இனி, 'என்பகை தனக்கும் உற்றபகையல்லனோ'
என்பதற்கு - எனக்குப் பகைவனாகவந்த கண்ணனைத் தனக்கும் பொருந்திய
பகைவனாக (என் மனிதனான இவ்விதுரன்) பாவிக்கவேண்டுவது
கடமையன்றோ? என்ற கருத்துப்பட உரைப்பாருமுளர்.   வௌவ - அகரவீற்று
வியங்கோள்.  உண்டி - உண்ணப்படுவது.  பதாகிநீ என்னும் வடசொல்லுக்கு
-கொடியை யுடையதென்று பொருள்; பதாகா - கொடி.  யுதிட்டிரன் முதலிய
ஐவர்க்குப் பாண்டு சொந்தத் தந்தையல்லனெனக் கீழ்க் கூறினனாதலால்,
விதுரனை அவர்கள் தந்தையோடு பிறவாமல் தன் தந்தையோடு மாத்திரம்
பிறந்தவனாகப் பேசினான்.  கையோதனம் என்றது, சுதந்திரத்தை நன்கு
விளக்க.                                                   (187)

128.முதல்விழைந் தொருவனுட னியைந்த பொருள்பற்றியின்
                               புற முயங்கினும்,
அதிகமென்றபொரு ளொருவன்வேறுதரினவனையே
                             யொழியவறிவரோ,
பொதுமடந்தையர் தமக்கு மண்ணிலிதுபுதுமையல்ல

                                                              
வவர்புதல்வனாம்,
விதுரனின்றவனொடுறவுகொண்டதொர் வியப்பையென்
                            சொலிவெறுப்பதே.

     (இ -ள்.) (தாசிகள்), இயைந்த பொருள் பற்றி - (ஒருவன்) மனமிசைந்து
கொடுத்த செல்வத்தைக் கைப்பற்றிக்கொண்டு, ஒருவனுடன் - அவ்வொரு
புருஷனுடனே, முதல் விழைந்து இன்பு உற முயங்கினும் - (அப்பொருள்
காரணமாக) முதலில் விரும்பி இன்பம் மிகக் கூடியிருந்தாலும், (பின்பு), வேறு
ஒருவன் அதிகம் என்ற பொருள் தரின் - வேறொரு புருஷன் அதனினும்
மிகுதியான செல்வத்தைக் கொடுத்தால், அவனையே ஒழிய அறிவரோ-
அவ்விரண்டாமவனைத் தவிர (முன்னவனை ஒரு பொருளாக)
மதிப்பார்களோ?[மதியார்]; பொது மடந்தையர் தமக்கு மண்ணில்
இது புதுமை