பக்கம் எண் :

194பாரதம்உத்தியோக பருவம்

அல்ல -(ஒருவனுக்கு உரியவரல்லாமல் பொருள் கொடுப்பவரெல்
லோர்க்கும்)பொதுப்பட்ட விலைமகளிர்க்கு உலகத்தில் இவ் வியல்புகள்
புதிதானவையல்ல[தொன்று தொட்டுள்ளவை]; (ஆதலால்), அவர் புதல்வன்
ஆம் விதுரன் -அப்படிப்பட்டவர்களுள் ஒருதாசியினது புத்திரனாகிய விதுரன்,
இன்று -இப்பொழுது, அவனொடு - (புதிதாய் வந்த) கண்ணனுடனே, உறவு
கொண்டது- (பழையவனான என்னிடம் அன்பைவிட்டு) நண்பு
பாராட்டினதாகிய, ஓர்வியப்பை - ஒரு அதிசயத்தை, என் சொலி வெறுப்பதே
- என்னசொற்சொல்லி வெறுக்கவேண்டுவது? (எ - று.)- இது, அல்ல -
ஒருமைப்பன்மை மயக்கம்.

    வெறுக்கக் காரணமில்லை; தாயின் குணம் மகனைத் தொடர்ந்தது எனப்
பழித்தான்.  பாண்டவர்க்கு இராச்சியம் வந்தால் தனக்கு அதிக செல்வாக்கு
இருக்குமென்று இங்ஙனஞ் செய்தான்போலுமெனக் கருதினான்.      (188)

129.- இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்: விதுரன் தக்க
மறுமொழி கூறி வில்லை முறித்துப் போகடுதல்.

இன்னவாறிவனுரைத்த போதவனெழுந்திருந்துவசையென்னைநீ,
சொன்னவாய்குருதிசோரவாள்கொடு துளைத்துநின்
                               முடிதுணிப்பன் யான்,
மன்னவாகுருகுலத்திலேயொருவன் மைந்தனாருயிரை
                                     வௌவினான்,
என்னவானவர் நகைப்பரே யெனையுரைத்த
                                நாவுடனிருத்தியோ.

     (இ -.ள்.), இன்ன ஆறு - இந்தப்படி, இவன் - துரியோதனன்,
உரைத்தபோது - சொன்னபொழுது, அவன் - விதுரன், எழுந்திருந்து-
வருத்தத்தோடு)எழுந்துநின்று, நீ என்னை வசைசொன்னவாய் - நீ என்னைப்
பழிமொழிகூறின வாயில், குருதி சோர - இரத்தம் பெருகும்படி, யான் -,
வாள்கொடுதுளைத்து - (அதனை என்) வாளாயுதத்தால் துளை செய்து, நின்
முடிதுணிப்பன் - உனது தலையையும் வெட்டிடவல்லேன்; மன்னவா -
அரசனே! குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான்
என்ன -(சிறந்த) குரு வமிசத்திலே ஒருத்தன் புதல்வனது அருமையான
உயிரைக்கவர்ந்தானென்று, வானவர் நகைப்பரே- (இவ்வுலகத்தாரேயன்றித்)
தேவர்கள்(பரிகசித்துச்) சிரிப்பார்களே; [அதற்கே ஆலோசிக்கிறே னென்ற
படி]; எனைஉரைத்த நாவுடன் இருத்தியோ - (இல்லாவிடின்) என்னை
(நிந்தித்து)க் கூறினநாக்கோடு (இன்னும் நீ) வாழ்ந்திருப்பாயோ? (எ - று.)-
'எழுந்திருந்து' என்பதுமேல்131 - ஆங் கவியோடு இயையும்.

  'மன்னவாழ்குருகுலம்' என்ற பாடத்துக்கு-(தொன்றுதொட்டு) நிலைபெற
வாழுங் குருமர பென்க.  உயிரைவௌவுதல் - உடம்பினின்று ஒழித்தல்.
இவ்வுலகத்தில் பலர் துரியோதனனோடொப்ப நீதியறியாதவராதலால்,
அவரையொழித்து, வானவரையே கூறினார். மன்னவா என்றது அரசச்
செல்வச்செருக்கினாலன்றோ நீ இவ்வாறு குளறினதென உணர்த்தற்கு.  (189)