பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 195

130.ஈண்டவர்க்குதவியாயதூதெனவிசைப்பவற்குலகமெங்கணும்,
நீண்டவற் குதவியாயினேனென நினைத்து
                           நீயெனையடர்த்தியே,
மாண்டவர்க்குதவியாய பேரறமுமிசையுமாண்மையும்
                                  வளர்த்திடும்,
பாண்டவர்க்குதவியாகிலென்னைமுடிமன்னரானவர்
                                   பழிப்பரோ.

     (இ -ள்.) ஈண்டு - இவ்விடத்தில், அவர்க்கு - அப்பாண்டவர் களுக்கு,
உதவி ஆய - துணையான, தூது என - தூதனென்று, இசைப்பவற்கு -
சொல்லப்பட்டவனாகிய, உலகம் எங்கணும் நீண்டவற்கு -
எல்லாவுலகங்களிலும்(திரிவிக்கிரமனாய்) நீண்டு வளர்ந்த கண்ணபிரானுக்கு,
உதவி ஆயினேன் -விருந்து உதவுதல் செய்பவனானேன், என - என்று,
நினைத்து,- நீ -, எனை -என்னை, அடர்த்தியே - (நிந்தனை சொல்லி)
வருத்துகிறாயே; (இங்ஙனமன்றி),மாண்டவர்க்கு - (அறிவு குணம்
செயல்களில்) மாட்சிமைப்பட்டவர் களான,உதவி ஆய பேர் அறமும்
இசையும் ஆண்மையும் வளர்த்திடும் பாண்டவர்க்கு- (இம்மைமறுமைகளில்)
உதவுவதான சிறந்த தருமத்தையும் கீர்த்தியையும்பராக்கிரமத்தையும்
அபிவிருத்திசெய்யுந் தன்மையுள்ள அப்பாண்டவர்களுக்கே,
உதவி ஆகில் - (யான் வெளிப்படையாகப் போரில்) துணைவனானால்,
முடிமன்னர் ஆனவர் என்னை பழிப்பரோ - கிரீடாதிபதிகளான அரசர்கள்
என்னை நிந்திப்பார்களோ? [நிந்தியார் என்றபடி]; (எ - று.)

    "பாண்டவதூதனுக்கு உதவினதற்கு, நீ இப்பொழுது என்னைப்
பழித்திட்டாயே; அப்பாண்டவர்க்கே உதவினாலும் குற்றமுண்டோ?"
என்றான்.இரண்டும் குற்றமாகாமைக்கு, 'இவன், பரிசுத்தரான பாண்டவர்க்குத்
தூதன்:துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்யுந் திருமால்:  அவர்கள்,
எவ்வாற்றானுஞ் சிறந்தவர்' என ஏற்ற அடைமொழி கொடுத்து விளக்கினான்.
இசைப்பவற்கு, நீண்டவற்கு என்பனவும், மாண்டவர்க்கு, பாண்டவர்க்கு
என்பனவும் ஒருபொருட் பலபெயர்கள்.  உலகமெங்கணும் நீண்டவற்கு
என்றது,உன்னைவிட எத்தனையோ மடங்கு பலபராக்கிரமங்களிற்
சிறந்தவனும்யோக்கியனும் திரிலோகாதிபதியுமாகிய அசுரராசனான மாவலி,
தேவர்களதுஅரசைக் கவர்ந்து ஒரு கணப்பொழுதில் எம்பெருமானாற்
பட்டபாட்டைக்கருதுவாயெனக் குறிப்பித்தபடியாம்; இனி, இத்தொடரில்,
பகவானதுஸர்வாந்தர்யாமித்துவம், ஜகச்சரீரத்துவம், சௌலப்பியம் முதலிய
திருக்கலியாண குணங்கள் விளங்குமாறுங் காண்க.  மாண்டவர்க்கு உதவியாய
என்பதற்கு - நல்லோர்களுக்குச் சகாயரான என்றும், மாண் தவர்க்கு எனப்
பிரித்து - சிறந்த தவத்தைச் செய்யும் முனிவர்களுக்கு உதவுபவரான என்றும்
பொருள் கொள்ளலாம்.  இனி, இந்த அடைமொழியை அறம்
முதலியவற்றிற்குச்சேர்ப்பினும் அமையும்.                     (190)

131.சொல்லிரண்டு புகலேனினிச்சமரினின்றுவெங்கணை
                                தொடேனெனா,
வில்லிரண்டினு முயர்ந்தவில்லதனை வேறிரண்டு
                               படவெட்டினான்,
மல்லிரண்டினையு மிருவராகிமுன்மலைந்தகாளமுகில்