137. | அம்பாத்தவருடன்றுசீறினுமொரம்பிலேயழிவர் திண்ணம்யான், வெம்பணிப்பகழியேவிலாவியுடன் மீளுவானமரில் விசயனோ, விம்பரிற்புகல விருதளத்தினுமெனக்கு நேரொருவரில்லை யென், றும்பர்கற்பகமு நாணவண்மையிலுயர்ந்தவீரனிவை யுரை செய்தான். |
(இ -ள்.) அம்பரத்தவர் - (பூமியிலுள்ள மனிதர்கள் மாத்திரமே யன்றி) ஆகாயத்திலுள்ள தேவர்களும், உடன்று சீறினும் - (என்னுடன்) பகைத்துக் கோபித்தாலும், ஒர் அம்பிலே அழிவர் - (என்னுடைய) ஒரு பாணத்தினாலே அழிவடைவார்கள்; திண்ணம் - (இது) நிச்சயம்; யான்-, அமரில் - யுத்தத்தில், வெம் பணி பகழி ஏவில் - கொடிய நாகாஸ்திரத்தைப் பிரயோகித்தால், விசயன்- அருச்சுனன், ஆவியுடன் மீளுவானோ - உயிருடன் திரும்பிச்செல்வானோ?[செல்லான், இறந்தே ஒழிவனென்றபடி]; இம்பரில் - இவ்வுலகத்திலே, எனக்குநேர் புகல - எனக்கு உவமை யெடுத்துச்சொல்ல, இரு தளத்தினும் ஒருவர்இல்லை - இருதிறத்துச் சேனையிலும் ஒருத்தரும் இல்லை,' என்று இவை -என்று இவ்வார்த்தைகளை, உம்பர் கற்பகமும் நாண வண்மையில் உயர்ந்தவீரன் - தேவர்களது கல்பக விருட்சங்களும் (இவன் கொடைக்குஉவமையாகாமல்) வெட்கமடையும்படி தானகுணத்திலே சிறந்த வீரனானகர்ணன், உரை செய்தான் - சொன்னான்; (எ - று.)
செருக்குடையனாதலால், இங்ஙனம் தற்புகழ்ச்சியும் பரநிந்தையும் செய்தான். காண்டவ தகன காலத்தில் அவ்வனத்தினின்று ஓடுகிற பிராணிகளை அருச்சுனன் அம்பெய்துகொன்று அத்தழலிலே வீழ்த்திவருகிறபொழுது, தக்ஷகனென்னும் நாகராசனது மனைவி தன் குழந்தையாகிய அசுவசேனன் என்னும் சிறுநாகத்தைத் தன்வாயினுள் மறைத்துவைத்துக்கொண்டு ஆகாய மார்க்கத்தில் எழும்ப, அதுகண்டு பார்த்தன்தன்பாணத்தால் அந்த நாக கன்னிகையின் தலையைத் துணித்துவிட, அதன்வாயிலிருந்த நாககுமாரன் வால்மாத்திரம் அறுப்புண்டு பிழைத்தெழுந்து, தன் தாயைக்கொன்ற அவன் மீது கறுக்கொண்டு, அவனுக்குப் பகைவன் யாரென்று விசாரித்து, அஸ்திர வடிவமாகிக் கன்னனையடைந்தனனென்பது, 'பணிப்பகழி' என்பதன் வரலாறு. இதனை அருச்சுனனைக் கொல்லவொட்டாதபடி கண்ணன் தந்திரமாகத் தடுத்துவிடுந்தன்மையை மேல் கன்னபருவத்திற் காண்க. இருதளம் - பாண்டவ சேனையும், கௌரவ சேனையும். கல்பகம் - (நினைத்தமாத்திரத்தில் வேண்டியபொருள்களைக்) கல்பிப்பது என்று பொருள்; கல்பித்தல் - உண்டாகச்செய்தல். (197) 138.-வீடுமன் கர்ணனைக்கண்டித்துக் கூறுதல். திசையனைத்தினும்வளைந்ததானவரை யிரவிவந்ததொரு திசையின்வாய், நிசையெனப்பொருதுவானவர்க் கரசளித்துவந்த விறனீர்மையான், விசையனுக்குநிகர்நீகொலோ கடவுள்வெண்மதிக்குநிகர் |
|