"சினமென்னுஞ் சேர்ந்தாரைக்கொல்லி யினமென்னு, மேமப் புணையைச் சுடும்" என்ற நீதிப்படி துரியோதனனது மனத்திற் பொருந்தின கோபாக்கினி இனி அவனைக்கெடுப்பதேயன்றி அவனுக்கு உறுதிமொழி கூறும் நல்லினமான என்னை அகற்றுதலுஞ் செய்தது என்பார் 'மனக்கடுங்கனலினான்' என்றும், தான் அறியாமல் தவறிச் சொன்னதன்று, வேண்டுமென்று அடத்தோடு சொன்னது என்பார் 'தன்மனத்தினாலுரைத்த' என்றுங் கூறினார். கோபத்தைக் கடுங்கனல் என உருவகப்படுத்தின விதப்பு - உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த விடத்தையே, இந்நெருப்புச் சேராதவிடத்தையுஞ் சுடுமென்னும் வேற்றுமைதோன்ற நின்றது. இறுத்தது - தொழிற்பெயர், வினைமுற்றாய் நின்றது; இதனை, வடநூலார் பாவேப்பிரயோக மென்பர். (204) 145.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: கண்ணன் விதுரனை நோக்கிக் கூறுவன. மாயனுமகிழ்ந்துநோக்கிமாசுணமுயர்த்தமன்னன் போயருஞ்சேனையோடுபோர்க்களங்குறுகும்போது நீயவனருகுநில்லாதொழியினுன்னேயமைந்தர் தாயமுஞ்செல்வமுற்றுந்தரணியும்பெறுவரன்றே. |
(இ -ள்.) (அதுகேட்டு,) மாயனும் - கண்ணனும்,-மகிழ்ந்து - திருவுள்ளமுகந்தருளி, நோக்கி - (விதுரனைப்) பார்த்து, மாசுணம் உயர்த்த மன்னன் - பாம்புக்கொடியை உயரவெடுத்த துரியோதனராசன், போய் - புறப்பட்டுச் சென்று, அருஞ்சேனையோடு - (பிறரால் வெல்லுதற்கு) அருமையான சேனையுடனே, போர் களம் குறுகும்போது - யுத்தகளத்தை அடையும் பொழுதில், நீ அவன் அருகு நில்லாது ஒழியின் - நீ யொருத்தன் அவனது பக்கத்தில் நிற்காமல் நீங்கினால், உன்நேயம் மைந்தர் - உனது அன்புக்கு உரிய குமாரரான பாண்டவர், அன்றே -அப்பொழுதே, தாயமும் - இராச்சியபாகத்தையும், செல்வம் முற்றும் - மற்றும் பொருளெல்லாவற்றையும், தரணியும் - பூமி முழுவதையும், பெறுவர் - அடைவார்கள்; (எ - று.) - அன்றே - தேற்றமுமாம். இப்பாட்டில், 'நோக்கி' என்பது மேல் 147 - ஆங் கவியில் 'என்றருளி' என்பதோடு குளகமாகத்தொடரும். விரைவில் தனது திருவுள்ளக்கருத்து நிறைவேறு மென்று கண்ணன் மகிழ்ந்து கூறினனென்க. நீ எதிர்ப்பக்கத்தி லிருந்தால் பாண்டவர்க்குப் பகைவெல்லுத லரிதெனக் கண்ணன் விதுரனுக்கு முகமன் கூறினான்.(205) 146. | ஏற்றியநறுநெய்வீசியிந்தனமடுக்கினாலுங் காற்றுவந்துறாதபோதுகடுங்கனல்கதுவவற்றோ நீற்றணிநிமலனன்னநின்கைவில்லிற்றதாயிற் சீற்றவேலரசன்சேனைதென்புலம்படர்கைதிண்ணம். |
(இ -ள்.) நறு நெய் வீசி - நல்லமணமுள்ள நெய்யை மிகுதியாகச் சொரிந்து, இந்தனம் - விறகுகளை, ஏற்றிய - தீப்பற்றவைத் |