பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 209

தற்கு,அடுக்கினாலும் - (ஒன்றன்மேலொன்று) பொருந்தவைத்தாலும், காற்று
வந்து உறாதபோது - (ஏற்ற) காற்று (சமயத்துக்கு) வந்து உதவிசெய்யாத
பொழுது, கடுங்கனல் கதுவ வற்றோ - மிகுந்த நெருப்புப் பற்றவல்லதோ?
[அன்றென்றபடி]; நீறு அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆயின்-
விபூதியைத் தரித்த குற்றமற்ற சிவபிரானை யொத்த உனது கையிலுள்ள வில்
முறிந்ததானால், சீற்றம் வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை -
கோபத்தையுடைய வேலாயுதத்தையுடைய துரியோதனராசனது சைனியம்
யமலோகத்துக்குச் செல்லுதல் [அழிதல்], திண்ணம் - நிச்சயம்; (எ - று.)

  பலதுணைக்கருவிகள் அமைந்திருந்தாலும் கனலின் வளர்ச்சிக்குக் காற்றின்
உதவி அவசியமாதல்போல, பலவகை வலிமைகள் அமைந்திருந்தாலும்
துரியோதனனது வெற்றிக்கு ஏற்ற சாதனமான உனது உதவி இல்லாமையால்
அவன் வெல்லற்பாலனல்லன் என்பதாம்.  கூற்றுவனது இடம் தென்திசையி
லுள்ளதாதலின் 'தென்புலம்' என்றும், போரிற் புறங்காட்டாது பகைவராலிறந்து
வீரசுவர்க்கம் பெறுபவரும் யமதரிசனம் பெற்றே செல்ல வேண்டுதலின்
'தென்புலம்படர்கை' என்றும் கூறினார்.  திண்ணம் - திண்மை திட்பம்
என்பனபோல, பண்புப்பெயர்; அம் - விகுதி.  படர்கை - கை விகுதி பெற்ற
தொழிற்பெயர்.  இந்தநம் - வடசொல்.  பகையைத் தவறாது அழிக்கும்
ஆற்றலுக்கு, அழித்தற்கடவுளான உருத்திர மூர்த்தியை உவமைகூறினார்.
முன்னிரண்டடி - பிறிதுமொழித லலங்காரம்.

    ஏற்றிய - செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்காலவினையெச்சம்; இனி,
இறந்தகாலப் பெயரெச்சமாக்கி மிகுதியான எனப்பொருள் கொண்டு,
நெய்யோடுசேர்ப்பினும் அமையும்.  வற்று - வல் என்னும் பண்படியாப்
பிறந்தஒன்றன்பாற் குறிப்புமுற்று; று - விகுதி.  நிமலன் - ஆணவம் மாயை
கன்மமென்னும் மும்மல மற்றவன்.  இருவரும் பரமபாகவதராதலால்,
விதுரனைச் சிவனோடு ஒப்பிட்ட தென்றுங் கூறுவர்.               (206)

147.

பன்னியபுரையில்கேள்விப்பயனுகர்மனத்தாய்நின்னை
மன்னவன்மொழிந்தவெல்லாம்பொறுத்தியென்றருளிமாயோன்
அந்நகர்தன்னில்வண்மையருளழகாண்மைபேசுங்
கன்னனைப்பயந்தகாதற்கன்னிதன்கோயில்புக்கான்.

     (இ -ள்.) 'பன்னிய - சிறப்பித்துச்சொல்லப்பட்ட, புரை இல் -
குற்றமில்லாத, கேள்வி - நூற்கேள்விகளின், பயன் - பிரயோசனமான
தத்துவப்பொருளை, நுகர் - (எப்பொழுதும் சிந்தித்து) அனுபவிக்கிற,
மனத்தாய் -மனத்தையுடைய விதுரனே! நின்னை மன்னவன் மொழிந்த
எல்லாம் -உன்னைத் துரியோதனராசன் கூறியவற்றையெல்லாம், பொறுத்தி-
பொறுத்துக்கொள்வாய்,' என்று அருளி - என்று சொல்லியருளி, மாயோன்-
கண்ணன்,அந்நகர்தன்னில் - அவ்வத்தினாபுரியிலே, வண்மை அருள் அழகு
ஆண்மைபேசும் கன்னனை பயந்த காதல் கன்னிதன் கோயில்புக்கான் -
உதாரகுணம் கருணை