எழுத்துப்பேறுஎன்றும், து-சாரியை, உகரம்கெட்ட தென்றுங் கூறுவர். (209) 150.- கண்ணன் குந்திக்குநடந்த வரலாறு கூறுதல். நின்பெரும்புதல்வர்சொல்லநெடும்புனனாடுவேண்டி வன்புடையரசர்கோமான்மனக்கருத்தறியவந்தேன் றென்புலவேந்தன்வெஃகச்செருத்தொழில்புரிவனென்றான் என்பலசொல்லினாளையெதிர்க்கவேயியைந்ததென்றான். |
இ -ள்.) (அதுகேட்டுக் கண்ணன் குந்தியை நோக்கி), 'நின் பெரும்புதல்வர் சொல்ல-உனது சிறந்த புத்திரர்கள் சொல்லியனுப்ப, நெடும்புனல் நாடு வேண்டி - மிக்க நீர்வளமுள்ள குருநாட்டின் பாகத்தைப் பெற விரும்பி, வன்பு உடை அரசர் கோமான் மனம் கருத்து அறிய - வலிமையுடைய ராஜராஜனான துரியோதனனது உள்ளத்தின் எண்ணத்தை அறியும் பொருட்டு, வந்தேன் - (யான் இங்கு) வந்தேன்; (அதற்கு அவன்), தென் புலம் வேந்தன் வெஃக - தெற்குத் திக்குக்குத் தலைவனான யமன் (உயிர்களை) விரும்பும்படி, செரு தொழில் புரிவன் என்றான் - போர்த்தொழிலைச் செய்வே னென்று சொன்னான்; பல சொல்லின் என் - பலவார்த்தைகளைச் சொன்னதனால் என்ன பயன்? [ஒன்றுமில்லை யென்றபடி]:நாளை எதிர்க்கவே இயைந்தது - இனி விரைவில் (இருதிறத்தாரும்) எதிர்த்துப்போர்செய்யவே நேர்ந்தது,' என்றான் - என்று கூறியருளினான்; (எ - று.)
வன்பு- சிறிதுங் கருணையில்லாமல் அநீதியிற் செல்லுங் கல் நெஞ்சின் தன்மையையுங் குறிக்கும். வன்புடை யரசர் - துச்சாதனன் கர்ணன் சகுனி திரிகர்த்தன் முதலியோராய், அவர்கட்கெல்லாந் தலைவனென்றுமாம். அஷ்டதிக்குப் பாலகருள் தெற்குத் திக்குத் தலைவன்; கூற்றுவன். சாமம் முதலிய முதல்மூன்று உபாயங்களைக் குறித்துப் பலவார்த்தைகளைக் கூறி ஒன்றும் பயன்படாமற் போனமையும், 'என்பல சொல்லின்' என்றதிற்பெறப்படும். (210) 151.- அது கேட்டுக் குந்தி வருந்துதல். என்றலுங்குந்திசாலவிரங்கினளெதிர்ந்தபோரில் வென்றிடுவார்கள்யாரோவிதியினாலமர்க்களத்தில் பொன்றிடுவார்கள்யாரோவென்றுளம்புலர்ந்துநொந்தாள் அன்றவடன்னைத்தேற்றியாழியானுரைக்கலுற்றான். |
(இ -ள்.) என்றலும் - என்று (கண்ணன்) அருளிச்செய்த வளவிலே, குந்தி -, சால இரங்கினள் - மிகவும் இரக்கமுற்றவளாய், 'எதிர்ந்த போரில் - இனிச் சமீபிக்க இருக்கின்ற யுத்தத்தில், வென்றிடுவார்கள் யாரோ - சயித்திடுபவர் யாரோ? விதியினால் - ஊழ்வினையால், அமர் களத்தில் யுத்தகளத்திலே, பொன்றிடுவார்கள் யாரோ - அழிந்திடுபவர்கள் யாரோ? என்று - என்று சொல்லி, உளம் புலர்ந்து - மனம்வாடி, நொந்தாள் - வருந்தினாள்; அன்று - அப்பொழுது, |