பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 215

தையினிடம்மனப்பூர்வமாக அன்பில்லாதவளல்லள் என்பது தோன்ற,
'காதல்நின்புதல்வன்' என்றார்.                                 (214)

155.

பண்புடைக்குமரன்கற்றபடைத்தொழில்பலவுங்கண்டு
நண்புடையுரிமையெல்லாநல்கிமாமுடியுஞ்சூட்டி
வண்பணியுயர்த்தகோமான்வாழ்வவற்களித்தான்மற்றைத்
திண்பரித்தேர்வல்லோரிலவனையார்செயிக்கவல்லார்.

     (இ -ள்.) பண்பு உடை - (இத்தன்மையான) சிறப்பையுடைய, குமரன்-
(உனது) குமாரனான கர்ணன், கற்ற - (பரசுராமரிடத்துக்) கற்றறிந்த, படை
தொழில் பலவும் - ஆயுத வித்தைக ளெல்லாவற்றையும், கண்டு - பார்த்து,
வள் பணி உயர்த்த கோமான் - அழகிய பாம்புக்கொடியை உயர எடுத்து
துரியோதனராசன், அவற்கு - அக் கர்ணனுக்கு, நண்பு - சினேகத்தால், உடை
உரிமை எல்லாம் - தன்னுடைய உரிய அரசாட்சிச் செல்வங்கள் பலவற்றையும்,
நல்கி - கொடுத்து, மா முடியும் சூட்டி - பெரியகிரீடத்தையுந் தரிப்பித்து,
வாழ்வு அளித்தான் - (அங்கதேசத்து இராச்சியாதிபத்தியத்தின்) வாழ்வைக்
கொடுத்திட்டான்; அவனை - அக்கன்னனை, மற்றை திண்பரி தேர்
வல்லோரில் - வலியகுதிரைகளைப்பூட்டிய தேரையுடைய மற்றை வீரர்களில்,
யார் செயிக்க வல்லார் - எவர் வெல்ல வல்லவர்; (எ - று.) 

    கர்ணனது படைத்தொழில் பலவற்றைத் துரியோதனன் கண்டது -
பாண்டவரும் துரியோதனாதியரும் கிருபாசாரியர் துரோணா சாரியர்களிடத்து
வில்வித்தை முதலியவற்றைக் கற்றுப் பயின்று முடிந்தபின், பீஷ்மர் விதுரர்
முதலிய பலரது முன்னிலையில் தம் தமது  அஸ்திரசஸ்திரப்பயிற்சியைக்
காட்டுகையில், கர்ணனும் இடையில் எழுந்துவந்து தனது திறமையைக்
காண்பித்தபொழுதி லென்க.  "அன்று சூதன் மதலை தன்னை
யங்கராசனாக்கினான், மின் தயங்கு முடிகவித்து வேந்தெலாம் வியக்கவே,"
"தானிருந்த வரி முகஞ்செய்தாள்சுமந்த தவிசின்மே, லூனிருந்த
படையினானையுடனிருத்தி வண்டுசூழ், தேனிருந்த மாலைவாகு சிகரமீது
தெண்டிரைக்,கானிருந்த மண்டலங் கருத்தினா லிருத்தினான்" என்றார் கீழ்
ஆதிபருவத்தில்.  ஜயிக்க என்பது மோனைத்தொடை நோக்கி, செயிக்க
வெனத்திரிந்தது.                                           (215)

156.

அந்தநின்மைந்தன்றானேயருஞ்சிலைவிசயனோடு
வந்தெதிர்மலையநின்றானுறவுமற்றறியமாட்டான்
சிந்தையினையந்தீரவிதனைநீதெளியச்சொல்லிக்
கொந்தவிழ்லங்கலானைக்கூட்டுகவிரைவினம்மா.

     (இ -ள்.) அந்த நின் மைந்தன் தானே - அப்படிப்பட்ட உனது
புத்திரனான கர்ணனே, அருஞ் சிலை விசயனோடு - அருமையான வில்
வித்தை வல்ல அருச்சுனனுடனே, வந்து எதிர் மலைய நின்றான் - வந்து
எதிர்த்துப் போர்செய்ய இருக்கிறான்; உறவு மற்று அறிய மாட்டான் -
(அருச்சுனன் தனக்குத் தம்பி யென்ற) பந்துத்துவ