துரியோதனனுடனே (இக்கர்ணனைச்) சேரச் செய்யாதிருப்பேன்; சென்று உயிர் ஒழிக்கும் ஆறு செருவினை விளைத்து - (போர்க்களத்திற்) போய் உயிரைமாய்த்துக் கொள்ளும்படி போரை மூட்டிவிட்டு, பின்னை - அதன்பின்பு,இன்று - இப்பொழுது, எனக்கு -, உரைத்தாய் - (நீ இந்தச் செய்தியைக்)கூறினாய்; ஐயா - ஐயனே! என் நினைந்து என் செய்தாய் - என்ன எண்ணமெண்ணி என்ன காரியஞ் செய்தாய்? (எ - று.) இது தகுதியன்று என்றபடி.
தெரியல் - விளங்குதல்; விளங்கும் மாலைக்குத் தொழிலாகுபெயர். அவனுடன் நணுக என்றும் பதம் பிரிக்கலாம். ஐயா என்று மருகனைக் கூறினது, அன்புபற்றிவந்த மரபுவழுவமைதி. ஈற்று ஏகாரம் இரக்கம்.(219) 160. | கான்பட்டகனலிற்பாயுங்கடுங்கணைவிலக்கினேனேல் வான்பட்டபுரவித்தேரோன்மகன்படுமகவான்மைந்தன் தான்பட்டுமடியுஞ்சென்றுதடாதினியிருந்தேனாகில் யான்பட்டகொடுமைநன்றென்றென்பட்டாளிரங்கிவீழ்ந்தாள். |
(இ -ள்.) கான் - காண்டவவனத்திலே, பட்ட - பற்றின, கனலின் - அக்கினியினின்றும், பாயும் - (வெளிப்பட்டுச்) செல்லலுற்ற, கடுங்கணை - கொடிய நாகாஸ்திரத்தை, விலக்கினேன் ஏல் - (மறுபடி அருச்சுனன்மேற் பிரயோகிக்காதபடி கர்ணனைத்) தடுத்தேனானால், வான்பட்ட புரவி தேரோன் மகன் படும் - ஆகாயத்திற்செல்லுகின்ற குதிரையைப் பூட்டிய தேரையுடைய சூரியனது குமாரனான கர்ணன் இறப்பான்; இனி சென்று தடாது இருந்தேன் ஆகில் - இப்பொழுது போய் (அந்த அஸ்திரத்தை)த் தடுக்காமலிருந்தேனானால், மகவான் மைந்தன் தான் பட்டு மடியும் - இந்திரகுமாரனான அருச்சுனன் தான்அந்த அஸ்திரம்பட்டு இறப்பான்; [இங்ஙனம் இருவகையிலும் எனக்குத் தீதாய்முடிகிறது]; (ஆதலால்), யான் பட்டகொடுமை - நான் அடைந்த கொடிய நிலைமை, நன்று - நன்றாயுள்ளது! என்று - என்று சொல்லி, (குந்திதேவி), என்பட்டாள் - என்ன பாடுபட்டாள்? (எனின்), இரங்கி வீழ்ந்தாள் - புலம்பிக்கொண்டு கீழே விழுந்திட்டாள்; (எ - று.) கான்பட்ட கனலின்பாயும் என்பதற்கு - காட்டுத்தீப்போல உக்கிரமாகப் பாய்கிற என்றும் உரைக்கலாம். என்பட்டாள் என்பது, மிகுந்த துன்பமடைந்தாள் என்பதை விளக்கும். நன்று - தீது என்றபடி : பிறகுறிப்பு. (220) 161.-இதுவும், அடுத்தகவியும்- கண்ணன் சிலகூறிக் குந்தியைத் தேற்றுதல். தேக்குந்தியகிலுஞ்சாந்துஞ்சிந்துநீர்நதிசூழ்செல்வக் கோக்குந்தியரசன்பாவைகுலைந்தழுங்கொடுமைகண்டு மீக்குந்தியுறிகடோறும்வெண்ணெயுந்தயிருமுண்ட வாக்குந்திமலரோன்பின்னுமனத்தளர்வகற்றினானே. |
|