வீசுகிற ஏழுகடல்களையும், தாவு இயல் உழையும் - தாவிப்பாயுந் தன்மையையுடைய மான்களையும், காதல் சகோரமும் - (நிலாவில்) விருப்பத்தையுடைய சகோர பட்சிகளையும், போன்ற - ஒத்தன; (எ - று.) - மாது, ஓ - ஈற்றசை. இச்செய்யுள், நிலாத்தோற்றத்தில் விரகிகளுக்குத் துன்பமும், மற்றையோர்க்கு இன்பமும் உண்டாதலைக் கூறியது. 'துணைவரைப் பிரிந்தோர்' என்ற சொல்லில் நாயகியரைப்பிரிந்த நாயகரும் அடங்குவராயினும்,பின்வாக்கியத்தில் 'மேவியமகளிர்' என வந்ததை நோக்கி, தலைவரைப்பிரிந்ததலைவியரென்று உரைக்கப்பட்டது. சகோரம் - நிலவை உணவாகக்கொள்வதொரு பறவை விசேஷம்; தூ வியல் நிலவு எனப்பிரித்து, வியல் - பரந்த என்றுமாம்; "வியலென்கிளவி யகலப்பொருட்டே,' என்பர் தொல்காப்பியனார்; அது - உரிச்சொல். உழையென்றது, சந்திரனிடத்துள்ள மானையாகலாம். (227) 168.-இது - கவிக்கூற்று. அரவியலல்குலாருமகிழ்நருமன்புகூர விரவியவமளியெய்திவீதிமாநகரியெங்கும் பரவையினிமிர்ந்தவோதையமர்ந்தபின் பரித்தேர்வேந்தன் இரவிடைச்சூழ்ந்தவண்ணமின்னதென்றியம்புகின்றாம். |
(இ -ள்.) அரவு இயல் அல்குலாரும் - பாம்பின் படம்போன்ற அல்குலையுடைய மகளிர்களும், மகிழ்நரும் - கணவர்களும், அன்பு கூர - அன்பு மிக, விரவிய அமளி எய்தி - பொருந்தினசயனத்தை யடைந்து, வீதி மாநகரி எங்கும் - நெடுந்தெருக்களையுடைய பெரிய அப்பட்டண முழுவதிலும்,பரவையின் நிமிர்ந்த ஓதை - கடலொலிபோல மிகுந்துள்ளதாகிய ஓசைஅமர்ந்த பின் - அடங்கியபின்பு, - இரவு இடை - நடுராத்திரியிலே, பரிதேர்வேந்தன் - குதிரைகளைப் பூட்டுந் தேரையுடைய துரியோதனராசன், சூழ்ந்தவண்ணம் - ஆலோசித்த விதத்தை, இன்னது என்று இயம்புகின்றாம் - இத்தன்மையதென்று கூறத்தொடங்குகிறோம்; (எ - று.) மகிழ்நர் - மகிழ்ச்சியுள்ளவர்; ந் - பெயரிடைநிலை. எய்தி - எய்தவெனச் செயவெனெச்சமாத் திரிக்க. நள்ளிரவில் ஜனங்கள் ஒலி யடங்குதல், இயல்பு. (228) 169.- துரியோதனன்முதலியோர் இரவிற்செய்த சதியாலோசனை. [துரியோதனன் முதலியோர் ஆலோசனைசெய்யச் சபாமண்டபமடைதல்.] தந்தையும்தம்பிமாருங்கன்னனுஞ்சகுனிதானும் சிந்தையிற்றெளிந்தகல்விச்செழுமதியமைச்சர்தாமு முந்தரவுயர்த்தகோமானேவலான்முழுதுமெண்ணி மந்திரமிருப்பான்வந்தோர்மண்டபங்குறுகினாரே. |
|