பக்கம் எண் :

224பாரதம்உத்தியோக பருவம்

     (இ -ள்.) தந்தையும் - பிதாவான திருதராட்டிரனும், தம்பிமாரும் -
தம்பியரான (துச்சாதனன் முதலிய) தொண்ணூற்றொன்பதின்மரும், கன்னனும்-,
சகுனி தானும்-, சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர் தாமும் -
மனத்திலே ஐயந்திரிபற அறிந்த கல்வியையும் சிறந்த நுண்ணறிவையுமுடைய
மந்திரிகளும்,- முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் -
சிறந்தபாம்புக்கொடியை உயரஎடுத்த துரியோதனராசனது கட்டளையினால்,
முழுதும் எண்ணி மந்திரம் இருப்பான் - நன்றாக ஆராய்ந்து ஆலோசனை
செய்திருக்கும்பொருட்டு, ஓர் மண்டபம் வந்து குறுகினார் - ஒரு
மண்டபத்தைவந்து அடைந்தார்கள்; (எ - று.)

    ஏவலால் வந்து குறுகினார் என இயையும், இருப்பான் - பானீற்று
எதிர்கால வினையெச்சம்.  கல்வியாலும் செழுமதியாலும் தாம் தெளிந்த
பொருள்களைத் துரியோதனனிடத்து அச்சத்தால் வெளிக்கூறாது
நிற்பரென்பதுதோன்ற, 'சிந்தையிற் றெளிந்த கல்விச் செழுமதி யமைச்சர்'
என்றார்.  முந்துஉயர்த்த என இயைத்து, முன்னிடத்திலே உயர எடுத்த
என்றும் உரைப்பர்.                                       (229)

170.-துரியோதனன்மற்றையோரை வினாவுதல்.

தீதறுமதிவல்லோரைச்செழுமதிகுடையானோக்கிப்
பாதவவனத்திற்போனபாண்டவர்தம்மைமீண்டு
மேதகவழைத்துநாடுவேண்டுமினென்றுமூட்டும்
யாதவன்றனித்துவந்தானென்செய்வதியம்புமென்றான்.

     (இ -ள்.) செழு மதி குடையான் - கலைநிறைந்த பூர்ணசந்திரன்
போன்றவெண்கொற்றக் குடையையுடைய துரியோதனன், - தீது அறு மதி
வல்லோரைநோக்கி - குற்றமற்ற அறிவில்வல்ல தந்தை முதலியோரைப்
பார்த்து, 'பாதவம் வனத்தில்போன - மரங்களையுடைய காட்டிற்குச்சென்ற,
பாண்டவர் தம்மை - பாண்டவர்களை, மேதக அழைத்து -
மேன்மையாகக்கூப்பிட்டு, நாடு மீண்டும்வேண்டுமின் என்று -
(உங்கள்நாட்டை)மறுபடி விரும்பிக்கேளுங்களென்று சொல்லி, மூட்டும் -
கலகத்தையுண்டாக்குகிற, யாதவன் - யதுகுலத்தவனாகிய கண்ணன், தனித்து
வந்தான் - தனியனாக இங்கு வந்துள்ளான்; என் செய்வது - (நாம்
இப்பொழுது) என்னசெய்யத்தக்கது? இயம்பும் - சொல்லுங்கள்', என்றான் -
என்று கூறினான்;

    பாதபம் - வடசொல்; காலால் நீரைக்குடிப்பதென்று பொருள்; பாதம் -
அடி: "நின்று, தளரா வளர்தெங்கு தாளுண்டுநீரைத், தலையாலே தான்
தருதலால்" என்பதுங் காண்க.  மேதக - மேன்மையென்னும் பண்பினடி.(230)

171.-திருதராட்டிரன்'கண்ணனைக் கொல்லவேண்டும்' என்று
கூறுதல்.

பொரும்படைமைந்தன்கூறத்தந்தையும்பொருந்தச்சொல்வான்
இரும்புலிவலையிற்பட்டால்விடுவரோவெயினரானோர்