பக்கம் எண் :

உலூகன் தூது சருக்கம் 23

போல் -பூனையைப்போல், இருந்த உழி - உள்ளிடத்திலேயிருந்து கொண்டு,
உரைக்கும் - வீரமாகப்பேசுகிற, ஈது - இவ்வார்த்தை, இகலது அன்று -
வலியதாகாது; இருவர்க்கும் - எங்கள் இருதிறத்தார்க்கும், துன்று பூசலில் -
நெருங்கி நேரும் போரில், ஆண்மையும் - பராக்கிரமத்தையும், தோள்
வலிமையும் - புயங்களின் பலத்தையும், காணலாம் -
(இன்னாரிடத்திலுள்ளதென்று வெளிப்படையாகப்) பார்க்கலாம், என்றான் -
என்று கூறினான்; (எ - று.)

     இங்ஙனங்கூறினது,ஆண்மையுந் தோள்வலிமையும் போரில்
தங்களிடத்தே மிக்குவிளங்குமென்றகருத்தால். பூஸு ரன் என்னும்
சொல்லுக்கு - பிரமதேஜசினால் பூமியில் தேவன்போல விளங்குபவனென்று
பொருள்; இது - அந்தணர்க்குச்சிறப்புப்பெயர்: "மேலாத் தேவர்களும்
நிலத்தேவரும் மேவித்தொழும்" என்றார், திருவாய் மொழியிலும்.
துரியோதனனது பெரியவலிய தோள்களுக்கு உவமையாகக்கூறுகிற மகாமேரு
கிரிக்கு 'குங்குமம் பூசியது' என்ற அடைமொழி கொடுத்தது, அத்தோள்கள்
எப்பொழுதும் குங்குமக்கலவைச்சாந்தைப் பூசப்பெற்றுள்ளன வாதலின்.
குங்குமம்பூசிய எழிலுறும்மேரு இரண்டு - இல்பொருளுவமை.
குங்குமமென்னும் மரத்தின்பெயர், அதன் பூவின் குழம்பிற்கு இங்கே
இருமடியாகுபெயர்.  எழிலாவது வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து
மாறியதன்றி இன்னும் வளருமென்பதுபோன்று காட்டுதல் என்றார்
நச்சினார்க்கினியர்; என்றது, புஷ்டி யென்றபடி.  இணை மேரு பூசியது -
ஒருமைப்பன்மை மயக்கம்.  இணை - இரண்டும் ஒன்றோடொன்று ஒத்த
என்றுமாம்.  பொன் - கருவியாகுபெயராய், பொன்னாபரணங்களை யணிந்த
வென்றுங் கொள்ளலாம்.  குரு என்பவன் - சந்திர குலத்தில் பிரசித்திபெற்ற
ஓரரசன்; இவனால் அக்குலம் குருகுலமென்றும், அக்குலத்தவர்
கௌரவரென்றும், அந்நாடு குருநா டென்றுங் கூறப்படும்.  வய -
வலிமையுணர்த்து முரிச்சொல்.  துரியோதனன் பதினாயிரம் யானைபலங்
கொண்டவனாதலால், அவனை 'வயவேந்தன்' என்றார்.  இனி, வயம் எனப்
பிரித்தால், பெயர்ச் சொல்லாய், வெற்றியென்று பொருள்படும்.  காடு முதலிய
இடங்களிலன்றி வீட்டினுள்ளே வசிக்கும் பூனைக்குப் பூசையென்று
பெயராதலால், 'பூசைபோலிருந்துழி' என உவமை கூறப்பட்டது; அதனை
'வெவ்வாய்வெருகினைப் பூசையென்றலும்' என்ற தொல்காப்பியங்கொண்டும்
"கிளர்மாடத்துள்ளுறையும் பூசை" என்ற கம்பராமாயணங்கொண்டும் அறிக.
ஆண்மை - ஆண்தன்மை, பௌருஷம்.  தோள்வலிமை - புஜபலம்.   (13)

விதுரன் துரியோதனனுக்கு நற்புத்திகூறுதல்.

14.

கல்விதூயநெஞ்சிலாதவச்சுயோதனன்கழறியமொழிகேட்டு
வில்விதூரனிவ்வேதியன்மொழிப்படிமேதினிவழங்காமற்
புல்விதூடகரினுமுணர்விலாதவர்புகலும்வாசகங்கேட்கிற்
செல்விதூரியளாய்விடுஞ்சுற்றமுஞ்சேனையுங்கெடுமென்றான்.