பக்கம் எண் :

234பாரதம்உத்தியோக பருவம்

கவும்,[தடகயல் - பெரிய கயல்மீன்கள்போற் பிறழுந்தன்மையனவான
கண்கள்,தொடர்ந்து ஒளிர் உதயம் ராகம் தோடு உற நெருங்கி -
நெடுந்தூரம் விடாதுசென்றுவிளங்குகின்ற உதயகாலத்துச் சூரியனையொத்த
செந்நிறத்தையுடைய(இரத்தினங்களாலாகிய) தோடென்னுங் காதணியை
அளாவும்படி சமீபித்து,மேல்மேல் அடர்ந்து - (அக்காதுகளின்) மேலே
மேலே நெருங்கி, அரி பரந்து- சிவந்த இரேகைகள் பரவப்பெற்று, காமன்
ஆகமம் வேதம் பாட -மன்மதனது சாஸ்திரங்களையும் வேதத்தையும்
வெளிக்கூறுமாறு, மலைந்துஉலாவ - (பக்கங்களிற்) சென்று சஞ்சரிக்கவும்],
தாமரை முகமும் -தாமரைமலர்களின் மேலிடங்களும், காதல் மடந்தையர்
முகமும் - அன்புள்ளமகளிரது முகங்களும், சேர - ஒரு சேர, மணம் பெற
-நறுமணத்தைப்பெறும்படி, மலர்ந்த - மலர்ந்தன; (எ - று.)

    இப்பாட்டு - சூரியோதயகாலத்தில் தாமரை மலர்தலும், பெண்கள்
கண்விழித்து முகமலர்தலும் ஆகிய இரண்டுதன்மைகள் நிகழ்தலை
ஒன்றோடொன்று உபமான உபமேயத்தன்மைபடச் சிலேடை வகையோடு
வருணித்தது; சிலேடைஉவமையணி. தாமரைமேற் செல்லுகையில், ஆகமம்
- மரம்.  அகமம் - வடசொல், நடத்த லில்லாததென்று பொருள்.  வேதம் -
பேதம் என்பதன் விகாரம்; காமன் ஆகமவேதம்பாட என்றது - இரவில்
தாமரைகுவிந்திருத்தலால் அங்குநின்று மற்றை விருட்சவருக்கங்களிற் சென்று
சேர்ந்தவண்டுகள் பகலில் தாமரைமலர்தலை அங்கு நின்று நோக்கி
மகிழ்ச்சியாற் பாட்டுப்பாட என்றபடி.  தடம் கயல் எனப்பிரித்து, தடாகத்திற்
கயல்களென்றுமாம்.  உதயம் ராகம் தோடு உற எனப்பிரித்து, உதய
காலத்துக்குரிய செந்நிறத்தையுடைய பூவிதழ்களிலே பொருந்த என்றும்
உரைப்பர்.  இனி, முகத்தின்மேற்செல்லுகையில், கண்கள் சிறியனவல்லாமல்
பெரியனவாகப்பரவிநீண்டிருத்தலை, கவிகள், கண்கள் காதுகளை
அளாவியுள்ளன என்று வருணித்தல் மரபு.  பெண்களுக்குக் கண்களிற் சில
சிவந்த ரேகைகள் பரவியிருத்தல் உத்தமவிலக்கணம்.  பெண்கள் கண்கள்
காமனாகம வேதம் பாட என்றது, இங்கிதப் பார்வைகளால் [குறிப்பு
நோக்கத்தால்] ஆடவர்களை அழைத்தல் பேசுதல் மகிழ்வித்தல் முதலியன
செய்வதை.  கயல் - கண்களுக்கு உவமையாகுபெயர்.
உத்தமசாதிப்பெண்களது முகம் பரிமளமுடைத்தாயிருக்குமென்பது நூல்
மரபாதலால், 'மணம்பெற' எனப்பட்டது.  இனி, மணம்பெற என்பதற்கு -
மங்களகரமாக என்று உரைத்தலுமொன்று.  மலைந்து உலாவுதல் - பிறழ்ந்து
பலவாறு நோக்குதல்.                                      (249)

186.-அரசர் யாவரும்துரியோதன னரண்மனைசேர்தலும்,
கண்ணன் எழுந்து காலைக்கடன் முடித்தலும்.

இருந்துயிலுணர்ந்துவேந்தர்யாவருமிரவிற்சற்றும்
வருந்துயிலிலாதகண்ணான்வாழ்பெருங்கோயில்புக்கார்
பெருந்துயிலநந்தபோகம்பேரணைதுறந்தமாலும்
அருந்துயிலெழுந்துகாலையருங்கடன்முறையிற்செய்தான்.