பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 237

கண்ணனொருவனை மாத்திரமே உள்ளே வரவிடுங்கள்' என்று
கட்டளையிட்டான்; (எ - று.)

     ஏ -பிரிநிலை; மற்றையரசர்களையுஞ் சேனையையும் விலக்கிற்று.
பறவைப்பொதுப்பெயராகிய வி என்னும் வடசொல் - இங்கே சிறப்பாய்
வண்டை உணர்த்தி, வீ என நீண்டுநின்றது.  வேத்ரம் - வடசொல்;
பிரப்பங்கோல்.                                         (249)

190.-உட்சென்றகண்ணபிரானுக்குத் துரியோதனன்
பொய்யாசனமளித்தல்.

தன்பெருஞ்சேனைநிற்கத்தண்டுழாயலங்கலானும்
இனுபுறுநகைத்துவேந்தரிருந்தபேரவையினெய்த
மின்புணர்துவசநாகவிடாநிகர்மனத்தினானும்
அன்பொடுதிகிரியானையதன்மிசையிருக்கவென்றான்.

     (இ -ள்.) (அத்துரியோதனன் கட்டளையை வாயில்காவலாளர்
கூறியதனால்), தன் பெருஞ்சேனை நிற்க - தனது பெரியசேனை
(உள்ளேசெல்லாது வெளியிலேயே) நிற்க, தண் துழாய் அலங்கலானும் -
குளிர்ந்ததிருத்துழாய் மாலையையுடைய கண்ணனும், இன்பு உற நகைத்து -
(கண்டவர்க்கு) மகிழ்ச்சி யுண்டாம்படி புன்சிரிப்புச்செய்து, வேந்தர் இருந்த
பேர் அவையின் எய்த - (துரியோதனன் முதலிய) அரசர்கள் வீற்றிருந்த
பெரிய சபையினுள்ளே செல்ல, (அப்போது), மின் புணர் துவசம் நாகம்விடம்
நிகர் மனத்தினானும் - ஒளிபொருந்திய கொடியில் பாம்பையும் அப்பாம்பின்
விஷத்தையொத்த [மிகக்கொடிய] கருத்தையுமுடைய துரியோதனனும், திகிரி
யானை - சக்கராயுதத்துக்குரிய கண்ணனை, அன்பொடு - அன்புடனே,
அதன்மிசை இருக்க என்றான் - 'அந்த ஆசனத்தின்மேல் வீற்றிருப்பாயாக'
என்று சொன்னான்; (எ - று.)

    மாயவனாகிய தன்னை வஞ்சிக்க நினைத்த பேதைமையை நோக்கிக்
கண்ணன் நகைத்தான்.  விஷம் தவறாமற் கொல்லுங்கொடுமைக்கு உவமை.
அதன்மிசை - இரவில் வெகுசிரமப்பட்டு அமைத்த பீடத்தின்மேல். 
அன்பொடு- அன்புடையான்போலக் காட்டி வேண்டுமாயின் மிகப் பலரையும்
அழிக்கக்கூடிய ஆற்றலைவிளக்க 'திகிரியான்' என்றார்.              (250)

வேறு.

191.-இதுமுதல் 22 கவிகள் -கண்ணன் விசுவரூபங்
கொள்ளுதலும், அதனால் மற்றையோர்படும் பாடுகளும்
கூறும்.

இறைவனெழிற்கதிர்மணிகளழுத்தியதவிசினிருத்தலுமே
நெறுநெறெனக்கொடுநிலவறையிற்புகநெடியவனப்பொழுதே
மறலியெனத்தகுநிருபனியற்றியவிரகைமனத்துணரா
முறுகுசினத்துடனடியதலத்துறமுடிககனத்துறவே.