பக்கம் எண் :

238பாரதம்உத்தியோக பருவம்

இதுவும், மேற்கவியும் - குளகம்.

     (இ -ள்.) (துரியோதனன் சுட்டிக்காட்டியவண்ணம்), இறைவன் -
கண்ணபிரான், எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே -
அழகையும் ஒளியையுமுடைய இரத்தினங்களைப் பதிக்கப்பெற்ற
அவ்வாசனத்தில் வீற்றிருந்தவளவில், நெறுநெறென - (அந்நிலவறையைமூடிய
மூங்கிற் பிளப்புக்கள்) நெறுநெறு என்று ஒலிபடமுறிய, நிலவறையில் கொடு
புக- (அவ்வாசனம் உள்ளிறங்கித் தன்னை) நிலவறையிற் கொண்டுசெல்ல,-
நெடியவன் - பெருமையுடைய கண்ணன்,- அப்பொழுதே-, மறலி என தகு
நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா - (கொடுமையில்) யமனென்று
சொல்லத்தக்க துரியோதனராசன் செய்த வஞ்சனையைத் திருவுள்ளத்திலறிந்து,
முறுகு சினத்துடன் - மூண்டெழுந்த கோபத்துடனே, அடி அதலத்து உற -
(தனது) திருவடி பாதாளத்தில் செல்லவும், முடி ககனத்து உற - (தனது)
திருமுடி வானத்திற் செல்லவும், (எ - று.)- 'நிமிர்ந்தனன்' என அடுத்த
கவியோடு தொடரும்.

     நெறுநெறென - ஒலிக்குறிப்பு; சப்தாநுகரணம்.  துரியோதனனது
வஞ்சனையினின்று மாயவன் தப்புதற்கு அவன் சூழ்ச்சியை முன்னமே அறிய
வேண்டுவதில்லை யென்பார், 'அப்பொழுதே உணரா' என்றார்.  மறல் -
கொடுமை:  அதனை யுடையவன் மறலி; இ - பெயர்விகுதி:  இனி,
இப்பெயர்க்கு - மறுக்கப்படாதவனென்றும் பொருளுரைக்கப்படும்.  கொடு
நிலவறையில் என எடுத்து, கொடுமையான நிலவறையிலே யென்றும்
உரைக்கலாம்.  'நெடியவன்' என்றது - திரிவிக்கிரமாவதார கதையைச் சுட்டும்;
மேல், 'அடியதலத்துற முடிககனத்துற' என்பதற்கு ஏற்ப வென்க.

    இதுமுதல் முப்பதுகவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று
விளங்காய்ச்சீரும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.               (251)

192.

அஞ்சினமஞ்சினமென்றுவிரைந்துயரண்டர்பணிந்திடவுந்
துஞ்சினமின்றெனவன்பணியின்கிளைதுன்பமுழந்திடவும்
வஞ்சமனங்கொடுவஞ்சகனின்றிடுவஞ்சனைநன்றிதெனா
நெஞ்சில்வெகுண்டுலகொன்றுபடும்படிநின்றுநிமிர்ந்தனனே.

     (இ -ள்.) (கண்ணன்), வஞ்சகன் வஞ்சம் மனம் கொடு இன்று இடு
வஞ்சனை இது நன்றுஎனா - ('பாண்டவரை இராச்சியம்) வஞ்சித்தவனாகிய
துரியோதனன் வஞ்சனையான எண்ணத்தைக்கொண்டு இப்பொழுது செய்த
வஞ்சிப்பு நன்றாயிருந்தது' என்றுகருதி, நெஞ்சில்வெகுண்டு - மனத்திற்
கோபங்கொண்டு,- (தனது வடிவத்தின் பெருமையை நோக்கி), உயர் அண்டர்
அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து பணிந்திடவும் - மேலிடத்திலுள்ள
தேவர்கள் பயந்தோம் பயந்தோமென்று கூறி நமஸ்கரிக்கவும், வல்பணியின்
கிளை இன்று துஞ்சினம் என துன்பம் உழந்திடவும் - (கீழுலகிலிருந்து
பூமியைத் தாங்கும்) வலிய பாம்புவருக்கங்கள் (அப்பெருவடிவத்தின் பாரமிகு