பக்கம் எண் :

244பாரதம்உத்தியோக பருவம்

மென்றுகருதி, ஆகாயத்தையளாவி உயர்ந்து, சூரியன் முதலிய கிரகங்களும்
நட்சத்திரங்களுஞ் செல்லுகின்ற வழியை யெல்லாம் மறித்துநின்றபொழுது,
தேவர் முனிவர் முதலிய யாவரும் வந்து அதனை யடக்கியருள
வேண்டுமென்றுஅகஸ்தியரைப் பிரார்த்திக்க, அவர் அங்கு எழுந்தருளி,
அப்பொழுதுதம்மைக்கண்டு வணங்கி நின்ற அம்மலையை 'இனி யான்
வடதிசையிலிருந்துதென்திசைக்குச் சென்று மீண்டு வருமளவும் இவ்வாறே
குறுகிக் கிடப்பாய்'என்று சொல்லிக் கையாலமைத்து அடக்கியருளி
அம்மலையின்மேலேறிஅப்பாற் சென்றன ரென்பது.

    உபமேயத்தில் 'மலர்க்கழலாலுந்தி'  என வருதலால், உபமானத்திலும்
'புடைத்திட' என்பதற்கு - காலாலேறிமிதிக்க எனப் பொருள் கொள்ளுதல்
பொருத்தம்.  "யோகமுறு பேருயிர்கள் தாம் உலைவுறாம, லேகுநெறியாதென
மிதித்து அடியினேறி, மேகநெடுமாலைதவழ் விந்தமெனும் விண்தோய்,
நாகமதுநாகமுற நாகமென நின்றான்" என்றார் கம்பரும்.  விந்தம் -
விந்த்யம்:வடசொற்றிரிபு.  'ஒடு' என்னும் மூன்றாமுருபு, ஒப்புப்பொருளில்
வந்தது.அந்தணன் என்ற பொதுப்பெயர், இங்கே இடம்நோக்கிச் சிறப்பாக
அகத்தியரைக் குறித்தது.  வெங்கண் - கொடுந்தன்மையுமாம்.         (258)

199.

அந்தவிடத்தெறிபம்பரமொத்துடலஞ்சுழலச்சுழலக்
குந்தியுறித்தயிருண்டவர்பொற்கழல்கொண்டுசுழற்றுதலான்
முந்தமரர்க்கமுதந்தரமைக்கடன்முன்சுழலச்சுழலு
மந்தரமொத்தனர்குந்தமெடுத்தெதிர்வந்துமலைந்தவரே.

     (இ -ள்.) அந்த இடத்து - அவ்விடத்திலே, எறி பம்பரம் ஒத்து -
வேகமாகவீசியெறியப்பட்ட பம்பரத்தைப் போன்று, உடலம் சுழல சுழல -
உடம்பு இடைவிடாது மிகச்சுழலும்படி, குந்தி உறி தயிர் உண்டவர் -
(உயரமான விடத்திலேறி) உட்கார்ந்து உறியில் வைத்த தயிர்களையெல்லாம்
(இளமையில்) அமுதுசெய்தருளிய கண்ணபிரான், பொன் கழல் கொண்டு -
(தமது) அழகிய திருவடிகளைக்கொண்டு, சுழற்றுதலால் - சுழலச்செய்தலால்,
குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவர் - எறியீட்டிகளை யெடுத்துக்
கொண்டுஎதிரில் வந்து போர்செய்யலுற்ற வீரர்கள்,- முந்து -
முன்னொருகாலத்திலே,அமரர்க்கு அமுதம் தர - தேவர்களுக்கு அமிருதந்
தருகையில், மைகடல்முன் - கரிய பாற்கடலிலே, சுழல - (அக்கடல்
வெள்ளஞ்) சுழிக்கும்படி,சுழலும் - (தான்) சுழன்ற, மந்தரம் - மந்தர
மலையை, ஒத்தனர் -போன்றார்கள்; (எ - று.)

    இதிற்குறித்த கதை, பிரசித்தம்.  திருப்பாற்கடல் வெளுத்த
நிறத்ததாயினும், திருமாலினதுதிருமேனியின் நிழலீட்டாலேகறுத்த
நிறத்ததாகுதலால் 'மைக்கடல்' என்றார்; "நீலக்கடலுள் நெடுங்காலம்
கண்வளர்ந்தான்" "கருந்தண்மாகடற் கண்டுயின்றவன்", "நீலக்கடல்
கடைந்தாய்" என்றார் பெரியாரும்:  "மையாழியிற்றுயிலுமாலனையான்"
எனப்புகழேந்திப்புலவர் கூறியதுங்காண்க; வடமொழியிற் போஜராஜனும்
இவ்வாறுகூறுவன்.  இனி, இருண்