டுள்ள நிலவறைக்கு உவமையாதல் நோக்கி, மைக்கடல் என இல்பொருளுவமை கூறியதாகவுங் கொள்ளலாம். சுழலச் சுழல - அடுக்கு, இடைவிடாமை பற்றியது. பொற்கழல் - பொன்னாலாகிய வீரக்கழலையணிந்த பாத மெனினுமாம். குந்தம் - வடசொல். (259) 200. | முட்டியதொல்குருதிக்கடன்மல்கலின்முட்டிகொள்பல்விரலால் நெட்டுடலம்வகிர்பட்டதனுள்விழநித்தர்செய்கொல்வினையான் மட்டறவல்விறலுற்றெதிர்செல்கவிமைக்கடலெல்லையிலே யிட்டனகல்வரையொத்தனர்வெல்கழலெக்குலமல்லருமே. |
(இ -ள்.) முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் - (அந்த நில வறை முழுவதிலும்) பாய்ந்த பழமையான இரத்தவெள்ளம் நிறைந்ததனால், முட்டிகொள் பல் விரலால் நெடுஉடலம் வகிர்பட்டு அதனுள் விழ - கைப்பிடியாகக்கொண்ட (கண்ணனது) பலவிரல்களால் நீண்ட தம்தம் உடம்பு பிளவுபட்டு அக்குருதிக் கடனுலிள்ளே விழும்படி, நித்தர் செய் - ஆதிமத்தியாந்தரகிதனான அக்கண்ணபிரான் செய்திட்ட, கொல் வினையால் -கொலைத்தொழிலால்,- வெல் கழல் எ குலம் மல்லரும் - வெல்லுதற்கடையாளமான வீரக்கழலையுடைய சிறந்த மல்லர்கள்யாவரும்,- மட்டு அற வல் விறல் உற்று எதிர்செல் கவி - அளவில்லாமல் மிகுந்த வலிமை கொண்டு (இராவணனை) எதிர்த்துச் சென்ற குரங்குகள், மை கடல் எல்லையிலே இட்டன - கரியகடலிலே (அணைகட்டுதற்குப்) போகட்டனவாகிய,கல்வரை - கல்மயமான மலைகளை, ஒத்தனர் - போன்றார்கள்; (எ - று.) சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனை வெல்லுதற்கு இராமபிரான் சேனையாக்கூட்டிக்கொண்டுபோன வாநரவீரர்கள் தென்கடலில் அணை கட்டுதற்பொருட்டுப் பலமலைகளைக்கொணர்ந்து கடலில் இட்டனரென்பது கதை. இரத்தவெள்ளத்துக்கு உவர்நீர்க்கடலும், மல்லர்க்கு மலைகளும் உவமை. முட்டி - முஷ்டி நித்தர் - நித்யர்: வடசொற்கள். (260) 201. | எப்புவிநிற்பனவெக்கிரிநிற்பனவெக்கடனிற்பனவென்றிப் புவனத்துயிர்முற்றுமயக்குறவுட்கினரெய்த்திமையோர், மைப்புயலொத்தொளிர் பச்சைநிறத்தினன்வர்க்கமலர்க்கழலா, லொப்பறமட்குழியுற்றவரைப்படவொத்திமிதித்தலுமே. |
(இ -ள்.) மை - கரிய, புயல் - மேகத்தை, ஒத்து - போன்று, ஒளிர் - விளங்குகின்ற, பச்சை நிறத்தினன் - பசிய திருநிறத்தையுடையவனான கண்ணபிரான், வர்க்கம் மலர் கழலால் - பலவாகிய தாமரைமலர்போன்ற திருவடிகளால், ஒப்பு அற - உவமையில்லாதபடி, மண் குழி உற்றவரை - நிலவறைப்பெரும்பள்ளத்திற் பொருந்திய வீரர்களை, பட - அழியும்படி, ஒத்திமிதித்தலும் - அழுத்தி மிதித்தவளவிலே,- இ புவனத்து உயிர் முற்றும் - இந்தநிலவுலகத்திலுள்ள பிராணிகளெல்லாம்,- 'எ புவி நிற்பன - (இப்பொழுதுஅழியாமல்) எந்தவுலகங்கள் நின்றிடுவன? எ கிரி நிற்பன - எந்த மலைகள்(சலியாது) நிலைநிற்பன? எ கடல் நிற்பன - எந்தக்கடல்கள் |