(கரைபுரளாது)நிலைநிற்பன?,' என்று - என்றவாறு, மயக்குஉற - திகைப்பை யடைய, இமையோர் - தேவர்களும், எய்த்து - சோர்ந்து, உட்கினர் - அஞ்சினார்கள்; (எ - று.) வர்க்கம் - கூட்டம்: வடசொல். ஒத்திமிதித்தல் - தாள அடைவுபட மிதித்தலுமாம். 'ஒற்றி' எனவும் பாடம். (261) 202. | கொண்டன்முழக்கெனவம்புவியைக்கடல்கொண்டெழுதற் கெதிருஞ், சண்டமுழக்கெனவன்பவனக்கிளைதந்தமுழக்கெனவே, வண்டினமொய்த்தெழுவண்டுளவத்தொடைவண்டுவரைத் திருமால், அண்டமுகட்டுறநின்றுசிரித்தனனங்கணெருப்பெழவே. |
(இ -ள்.) (அப்பொழுது),- வண்டு இனம் - வண்டுகளின் கூட்டங்கள், மொய்த்து எழு - நெருங்கிப் பறக்கப்பெற்ற, வள் துள வம்தொடை - அழகிய திருத்துழாய் மாலையையுடைய, வள் துவரை திருமால் - வளப்பங்களையுடைய துவாரகாபுரிக்கு அதிபதியான சிறந்த கண்ணபிரான்,- கொண்டல் முழக்கு என - மேகத்தின் இடி முழக்கம்போலவும், 'அம்புவியை கடல்கொண்டு எழுதற்கு எதிரும் சண்டம் முழக்குஎன - அழகிய நிலவுலகத்தை (ப்பிரளய)க்கடல் தனக்கு உள்ளாக்கிக்கொண்டு மேற்கிளர்தற்குப் பொங்குகையில் உண்டாகின்ற பயங்கரமான ஆரவாரம்போலவும், வல் பவனம் கிளை தந்த முழக்குஎன - வலியகாற்றின் வருக்கத்தாலுண்டாகிற பேரொலிபோலவும், அம் கண் நெருப்பு எழ - அழகிய தனது கண்களினின்று நெருப்பு உண்டாக, அண்டம் முகடு உறநின்று சிரித்தனன் - அண்டகோளத்தின் மேல் முகட்டையளாவும்படி உயர்ந்துநின்று நகைத்திட்டான்; (எ - று.) இங்கே, சிரிப்பு - பெருவெகுளிபற்றியது; இது வீராட்டகாசமெனப்படும். சண்டம் - கொடுமை. இப்பாட்டில் வந்த உவமை மூன்றனுள், இடையிற் கூறியகடலைப் பிரளயக்கட லென்றதனால், அதுவே உபலக்ஷணமாக, கொண்டல்பவனம் என்பனவற்றையும் பிரளயகாலத்தில் பெருமழை பொழிந்துஉலகையழிக்க வரும் மேகங்களாகவும், அக்காலத்து உலகையழிக்கும் பெருஞ்சுழல்காற்றாகவுங் கொள்க. பவனக்கிளை என்றது - ஸப்த மருத்துக்களையும். (262) 203. | ஒன்றுபடக்கடலம்புமுகப்பனவும்பர்குலத்தருவுஞ் சென்றுமுறிப்பனவெண்டிசையிற்குலசிந்துரமெற்றுவவெண் குன்றமுடைப்பனபைம்பொனுரக்கிரிகொண்டுதிரிப்பனவால் அன்றுதனித்தனிநின்றுமலைத்தருளங்கைகள்பற்பலவே. |
(இ -ள்.) (அந்த விசுவரூபமூர்த்திக்கு), அன்று - அக்காலத்தில், தனி தனி நின்று மலைத்தருள் - வெவ்வேறாக நின்று போர் செய்கிற, அம் கைகள்பல பல - அழகிய மிகப்பலவான திருக்கைகள்,- கடல் அம்பு ஒன்று படமுகப்பன - கடல்நீரை முழுவதும் ஒருங்கே மொண்டெடுக்கவல்லனவும், உம்பர்குலம் தருவும் சென்று முறிப்பன - மேலுலகத்திலுள்ள தேவர்களது சிறந்தகல்பகவிருட்சங்களையும் அளாவிப்போய் முறிக்கவல்லனவும், எண் திசையில் |