பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 247

குலசிந்துரம் எற்றுவ - எட்டுத் திக்குக்களிலுமுள்ள சிறந்த நிலையானைகளை
அப்பால் தள்ளவல்லனவும், எண்குன்றம் உடைப்பன - எட்டுக்
குலமலைகளையும் உடைக்கவல்லனவும், பைம் பொன் உரம் கிரி கொண்டு
திரிப்பன - பசும்பொன்மயமான வலிமையையுடைய மகா மேருமலையை
எடுத்துச் சுழற்றவல்லனவுமாக இருந்தன; (எ - று.)-ஆல் - ஈற்றசை.

    அஷ்டகுலபருவதங்களாவன - கைலாசம், இமயம், மந்தரம், விந்தியம்,
நிஷதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதநம் என்பன.  பைம்பொனுரக்கிரி என
வருதற்கு ஏற்ப 'வெண்குன்றம்' என எடுத்து - வெள்ளிமலையான
கைலாசமென்று உரைத்தலுமொன்று.  கொடியவர்களைக் கொல்லுதல்
நல்லவர்களைப் பாதுகாத்தற்காதலால், 'மலைத்தருள்' என்றது.     (263)

204.

துகிரிதழ்வைத்துநல்வளைகண்முழக்கினதொடர்சிலகைத்தலமே
அகிலம்வெருக்கொளவரிமழுவெற்றினவடுசிலகைத்தலமே
புகலும்வடிக்கணையுதணமெடுத்தனபொருசிலகைத்தலமே
திகழ்விசயத்தொடுசிலைகள்குனித்தனசிலசிலகைத்தலமே.

     (இ -ள்.) தொடர் சில கை தலம் - (ஒன்றையொன்று) தொடர்ந்த
(விசுவரூபமூர்த்தியினது) சில கைகளின் இடங்கள், துகிர் இதழ் - பவழம்
போலச் சிவந்த வாயிலே, நல் வளைகள் - சிறந்த (வலம்புரிச்) சங்கங்களை,
வைத்து முழக்கின - வைத்து ஒலிப்பித்தன; அடு சில கை தலம் -
(பகைவரைக்) கொல்லவல்ல சில கைகள், அகிலம் வெரு கொள -
உலகமுழுவதும் அஞ்சும்படி, அரிமழு எற்றின - துணிக்கவல்ல
கோடாலிப்படையை வீசின; பொரு சில கை தலம் - போர் செய்யவல்ல சில
கைகள், புகலும் - (சிறப்பித்துச்) சொல்லப்படுகின்ற, வடி கணை -
கூர்மையானஅம்புகளையும், உதணம் - கூர்மை குறைவான
மொட்டம்புகளையும், எடுத்தன- ஏந்தின; சில சில கை தலம் -, திகழ்
விசயத்தொடு - விளங்குகின்றவெற்றியுடனே, சிலைகள் குனித்தன -
விற்களை வளைத்தன; (எ - று.)

     உதணம்- அலகில்லா அம்பு; இனி, 'உவணம்' எனப்பாடங்கொண்டு
கருடாஸ்திர மென்றும், அரிமழு என்பதற்கு - அனல்வடிவமான
எரியிரும்புப்படையென்றுமாம்.  வடிக்கணை - வடித்தலையுடைய அம்பு;
வடித்தல் - நெருப்பில் வைத்துக் காய்ச்சியடித்து அராவிக்கூராக்குதல். (264)

205.

வெங்கணையத்திரள்குந்தநிறப்படைவெம்புமுலக்கைகள்போர்
பொங்கியவச்சிரமுந்துகலப்பைகள்புண்கழுவர்க்கமயில்
எங்குமலைத்தெழுசெஞ்சுரிகைத்திரடண்டமிவற்றினொடுந்
தங்கியசக்கரபந்திதரித்தனதண்பலகைத்தலமே.

     (இ -ள்.) தண் - குளிர்ந்த [காண்டற்கு இனிய], பல கை தலம் -
அநேகங் கைகள்,- வெம் கணையம்திரள் - கொடிய வளைதடிகளின்
கூட்டமும், நிறம் குந்தம் படை - ஒளியையுடைய கைவேலாகிய