| சிலசிலகைத்தலமணிகொளுரத்திடைபணிகடிருத்தினவே சிலசிலகைத்தலம்விரல்கொடுசுட்டின செறுநர்திகைத்திடவே. |
(இ -ள்.) சிலசில கை தலம்-, அடு கழலில் - (பகைவரைக்) கொல்லுகிறதிருவடிகளில், பல திணி கழல் - அனேகமான நெருங்கின வீரக்கழல்களை,கட்டின-; சிலசில கை தலம்-, மறுகு புயத்திடை - சுழல்கிற தோள்களில், செறிதொடை - அடர்ந்த பூமாலைகளை, இட்டன - தரித்தன; சில சில கை தலம் -,அணி கொள் உரத்திடை - அழகைக்கொண்ட மார்பினிடத்தில், பணிகள் -ஆபரணங்களை, திருத்தின - ஒழுங்காக அணிந்தன; சில சில கை தலம்-,செறுநர் திகைத்திட - பகைவர்கள் (அச்சத்தால்) திகைப்படையும்படி,விரல்கொடு சுட்டின - (அவர்களை) விரல்களாற் குறித்துக்காட்டின; (எ - று.)
மணிகொள் எனப்பதம் பிரித்து - கௌஸ்துப ரத்தினத்தை யணிந்துள்ளஎன்றும் உரைக்கலாம். செறுநர் - பகைப்பவர்; இப்பகுபதத்தில், ந் -பெயரிடைநிலை. இப்பாட்டில், எந்த அடியை எடுத்து எந்த இடத்திற் கூட்டினாலும் பொருளும் செய்யுளோசையும் வேறுபடாதிருத்தலால், பொருளிசை மாட்சிமாறா அடிமறி மாற்றுப் பொருள்கோள்; கீழ் 204 - ஆம் பாட்டிலும் இது. 'அவிர் கழல்' என்ற பாடத்திற்கு, அவிர்தல் - விளங்குதல். (267) 208. | மாயிருஞாலமெலாம்வெளியாயொளிர்மரகதசோபையுறப் போயிருபாலும்வளைந்துவளைந்தெதிர்பொருமுனைவெம்படையோ டாயிரமாயிரமங்கைபுறப்படவண்டருமாதவரும் பாயிரநான்மறைபாடிவியந்துபணிந்துபுகழ்ந்தனரே. |
(இ -ள்.) மா இரு ஞாலம் வெளி எலாம் ஆய் - மிகப்பெரிய பூலோகத்திலுள்ள வெளியிடங்களிலெல்லாம் பொருந்தி, ஒளிர் மரகதம் சோபைஉற - விளங்குகிற பச்சையிரத்தினத்தின் காந்தி பொருந்த, இருபாலும் போய்வளைந்து வளைந்து - இரண்டுபக்கத்திலுஞ் சென்று சூழ்ந்து சூழ்ந்து,எதிர்பொரு முனை வெம் படையோடு - எதிர்த்துப்போர்செய்யவல்ல கூர்நுனியையுடைய கொடிய ஆயுதங்களுடனே, ஆயிரம் ஆயிரம் அம் கை -அனேகமாயிரம் அழகிய திருக்கைகள், புறப்பட - (அவ்விசுவரூபத்தினின்று)வெளிப்பட்டுத்தோன்ற, (அதனைக்கண்டு), - வியந்து - அதிசயித்து, பணிந்து -வணங்கி, அண்டரும் - தேவர்களும், மா தவரும் - மிக்க தவமுடையமுனிவர்களும், பாயிரம் நால் மறை பாடி - முகவுரையையுடைய நான்குவேதங்களைச் சுரத்துடனே சொல்லி, புகழ்ந்தனர் - துதித்தார்கள்; (எ - று.) வியத்தல் - மனத்தின் தொழிலும், புகழ்தல் - வாக்கின்தொழிலும், பணிதல் - உடம்பின் தொழிலுமாகத் திரிகரணங்களாலும் கொண்டாடினமை விளங்கும். மா + இரு = மாயிரு: ஒருபொருட்பன்மொழி; உரிச்சொற்புணர்ச்சியாதலால், பொதுவிதிப்படி வகரமெய் பெறாது யகரம்பெற்றுமுடிந்தது;[நன் - மெய்யீறு - 36]; "மாமுன் |