பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 251

கொடுவெந்நோய், கண்டுள நெக்கானஞ் சலையஞ்சேல் களிறென்னா" என(க்
காஞ்சிபுராணத்து)ப் பிற சமயத்தார் கூறியவாறு முணர்க.  நாரணன் -
நாராயணன் என்பதன்திரிபு.  சிருஷ்டிப் பொருள்களுக்கெல்லாஞ்
சேர்விடமானவனென்று பொருள்; சிருஷ்டிப்பொருள்களைத் தனக்கு
இருப்பிடமாகவுடையவனென்றும், பிரளய காலத்து நீரைத் தனக்கு
இருப்பிடமாகவுடையவனென்றும் பொருள்படும்.  நாகம் - சுவர்க்கம்.
முனியேல் முனியேல் - அடுக்கு, அன்பு பற்றியது.  வாரணமே, ஏ - அசை,
சிறப்புமாம்.                                              (269)

210.

மாதவனேமுனியேலெமையாளுடைவானவனேமுனியேல்
யாதவனேமுனியேலிதயத்திலிருப்பவனேமுனியேல்
ஆதவனேமுனியேன்மதிவெங்கனலானவனேமுனியேல்
நீதவனேமுனியேன்முனியேலெனநின்றுபணிந்தனரே.

     (இ -ள்.) 'மாதவனே - திருமகள்கொழுநனே! முனியேல் -
கோபித்தருளாதே; எமை ஆள் உடை வானவனே - எம்மை அடிமை
யாகவுள்ள கடவுளே! முனியேல்-; யாதவனே - யதுகுலத்தில்
திருவவதரித்தவனே! முனியேல்-; இதயத்தில் இருப்பவனே -
(எல்லோருடைய)மனதிலும் எழுந்தருளியிருப்பவனே! முனியேல்-;
ஆதவனே - சூரியசொரூபியானவனே! முனியேல்-; மதி வெம் கனல்
ஆனவனே - சந்திரன்வெவ்விய அக்கினி இவர்களின் சொரூபமானவனே!
முனியேல் -; நீதவனே -நீதிமுறைமை யுடையவனே!  முனியேல் முனியேல்
-, என - என்று கூறி,நின்று பணிந்தனர் - (முனிவர்கள் எங்கும்) நின்று
வணங்கினார்கள்; (எ - று.)

     கீழ்"மாயிருஞாலம்" என்ற கவியில், தேவர்களும் முனிவர்களும்
புகழ்ந்தனரெனக் கூறியதில், தேவர்கள் புகழ்ந்த விதத்தை அடுத்த
"ஆரணனேயரனே" என்ற கவியாற் கூறி, முனிவர்கள் புகழ்ந்த விதத்தை
அதற்கு அடுத்தஇக்கவியாற் கூறுகிறாராதலின், 'முனிவர்' எனத்
தோன்றாஎழுவாய்வருவிக்கப்பட்டது.  இனி கீழ்க்கவியில் 'நாகர்' என்பதற்கு
- பாதாளலோகவாசிகளென்று உரைத்து, மூவுலகத்தாருள் மேலுலகத்தாருங்
கீழுலகத்தாரும்துதித்து வணங்கியமை கீழிரண்டுகவிகளிலும்
கூறப்பட்டதெனக்கொண்டு,இக்கவிக்கு நிலவுலகத்தாரென்று எழுவாய்
வருவித்தலுமொன்று.  அன்பால்நினைவாரது உள்ளக்கமலத்தின்கண் அவர்
நினைத்த வடிவோடு கடவுள்விரைந்துசென்று வீற்றிருத்தலின்,
'இதயத்திலிருப்பவனே' என்றார்.                              (270)

211.

கங்கைமகன்கதிரோன்மகனம்பிகைகாதன்மகன்றனயர்
அங்கவையின்கணிருந்தநராதிபரடையவெழுந்தடைவே
செங்கைகுவித்தசிரத்தினராயுணர்வொன்றியசிந்தையராய்
எங்கள்பிழைப்பினையின்றுபொறுத்தருளென்றுபணிந்தனரே.

     (இ -ள்.) கங்கை மகன் - கங்காபுத்திரனான வீடுமனும், கதிரோன்மகன்
- சூரியபுத்திரனான கர்ணனும், அம்பிகை காதல் மகன் - அம்பிகையினது
விருப்பமுள்ள புத்திரனான திருதராட்டிரனும்,