பக்கம் எண் :

254பாரதம்உத்தியோக பருவம்

கூறினானுமில்லை;(எ - று.) - இதற்குக் காரணம், துரியோதனனது விபரீத
காலமே.

    பூலோகம் திருமாலின் திருவடியில் உதித்ததென்றும், அங்குத் தானே
ஒடுங்குவதென்றும் நூல்கள் கூறும்.  சதுர்மறையின்படியே தன்னிலுயர்ந்தவர்
யாருமிலா என்றும் இயைத்து உரைக்கலாம்.                      (274)

215.-இதுவும், மேற்கவியும் -ஒருதொடர்: கண்ணன்
துரியோதனனை நோக்கிக் கூறியன.

தொல்லவையின்கணிருந்தநராதிபதுன்மதியாலெனைநீ
கொல்லநினைந்ததுநன்றெனவன்றிறல்கூறினனெம்பெருமான்
ஒல்லையினின்குலமுற்றுமடிந்திடவுற்றுமலைந்தொர்கணத்   
தெல்லையின்வெஞ்சமர்நூறுவன்யாவருமேறுவர்வானுலகே.

     (இ -ள்.) 'தொல் அவையின்கண் இருந்த நர அதிப - தொன்று
தொட்டுவருகிற (சந்திரவமிசத்து) இராசசபையிலே வீற்றிருந்த அரசனே!
துன்மதியால் - தீய அறிவினால், எனை - என்னை, நீ கொல்ல நினைந்தது-,
நன்று - நல்லது,' என - என்று கூறி, எம்பெருமான் - நமது தலைவனான
கண்ணபிரான், வல்திறல் கூறினன் - தனது மிக்க வலிமையைக்
கூறுபவனானான்:- 'ஒல்லையில் - விரைவிலே, நின் குலம் முற்றும் மடிந்திட-
உனது வம்சம் முழுவதும் அழியும்படி, உற்று மலைந்து - எதிர்த்துப்
போர்செய்து, ஒர் கணத்து எல்லையின் - ஒரு நொடிப் பொழுதினுள்ளே,
வெம்சமர் - கொடிய யுத்தத்தில், நூறுவன் - பொடியாக்குவேன்; யாவரும் -
(என்னை எதிர்ப்பவர்) எல்லோரும், வான் உலகு ஏறுவர் - (தவறாமலிறந்து)
மேலே வீரசுவர்க்கத்துக்குச் செல்வர்; (எ - று.)

     ஒல்லை - விரைவுணர்த்தும் இடைச்சொல்.          (275)

216.

அஞ்சினநின்னையழித்திடநின்னுடனன்றுபெருஞ்சமர்வாய்
வெஞ்சுடராயுதமொன்றுமெடுக்கிலமென்றுவிளம்பியதும்
எஞ்சமலைந்தெதிர்வந்துயிர்கொள்ளுதுமென்றுதனித்தனியே
பஞ்சவர்கூறியவஞ்சினவாசகமும்பழுதாமெனவே.

     (இ -ள்.) அன்று - அக்காலத்தில் (நீ நம்மைப் படைத்துணை
வேண்டியபொழுது), பெருஞ் சமர்வாய் வெம் சுடர் ஆயுதம் ஒன்றும்
எடுக்கிலம் என்று - 'பெரிய  போரில் கொடிய ஒளியையுடைய
படைக்கலமொன்றையும் (உனக்கு எதிராக) எடுக்கமாட்டோம்' என்று,
நின்னுடன் விளம்பியதும் - (உன்னோடு நாம் பிரதிஜ்ஞை வார்த்தை)
கூறினதும்,- (அன்று) - அக்காலத்தில் [திரௌபதியைத் துகிலுரிந்தபொழுது],
எதிர் வந்து எஞ்ச மலைந்து உயிர் கொள்ளுதும் என்று - 'எதிரில்வந்து
(நீங்கள்) இறக்கும்படி போர் செய்து உயிரைவாங்குவோம்' என்று, தனி
தனியேபஞ்சவர் கூறிய - தனித்தனி பாண்டவர் சொன்ன, வஞ்சினம்
வாசகமும் -சபத வார்த்தையும், பழுது ஆம் எனவே - (இப்பொழுது நான்