உன்னைக்கொன்றால்) வீணாய்ப் போய்விடுமென்று கருதியே, நின்னை அழித்திட அஞ்சினம் - உன்னைக் கொல்லுதற்கு நாம் பயந்தோம்; 'அஞ்சினம்' முதலிய தனித்தன்மைப் பன்மைகள் உயர்வு தோன்ற நிற்கும். உன்னையும் உனக்குத் துணையாக வருபவரையும் இப்பொழுது நான்கொல்லாமைக்குக் காரணம், அதற்கேற்ற ஆற்றலில்லாமையன்று; எனதும்பாண்டவரதும் வார்த்தை தவறலாகாதென்பதே என்றபடி. (276) 217.-கண்ணன் வெளியிற்செல்லுதல். என்றுரையாடிநெடுங்கடல்வண்ணனெழுந்தருளப்பிறகே சென்றனரெம்முடிமன்னவரும்பணிசேர்கொடியோனையலார் நின்றுபசாரமுரைத்தவர்தம்மைநிறுத்தியனந்தரமே வன்றிறலங்கர்பிரானொடுகூறினன்மற்றொருவாசகமே. |
(இ -ள்.) என்று உரை ஆடி - என்று வீரவார்த்தை சொல்லி, நெடுங்கடல் வண்ணன் - பெரிய கடல்போலுங் கருநிறமுடைய கண்ணன், எழுந்தருள - (சபையைவிட்டு வெளிச்) செல்ல, (அப்பொழுது), - பணிசேர் கொடியோனை அலார் எ முடி மன்னவரும் - பாம்பின் வடிவு பொருந்தின துவசமுடைய துரியோதனனை யொழிந்தவராகிய கிரீடாதிபதிகளான எல்லாவரசரும், பிறகே சென்றனர் - பின்னே (வழிவிடுவதற்குத்) தொடர்ந்து போனார்கள்; (அப்பொழுது கண்ணன்), நின்று-, உபசாரம் உரைத்து - (ஏற்ற) உபசார வார்த்தைகளைக் கூறி, அவர் தம்மை நிறுத்தி - அவர்களையெல்லாந்தொடராது நிற்கச்செய்து, அனந்தரமே - அதன் பின்பாக,வல் திறல் அங்கர் பிரானொடு - மிக்க வலிமையையுடைய அங்கநாட்டார்க்குத்தலைவனான கர்ணனுடனே, ஒரு வாசகம் கூறினன்-ஒரு வார்த்தையை(இரகசியமாக)ச் சொன்னான்;(எ-று.)- அதனை, மேல் மூன்று கவிகளிற் காண்க.மற்று - வினைமாற்று; அசையுமாம். மற்றொரு என எடுத்து, வேறொருஎன்றுமாம்.
உபசாரமுரைத்தவர் தம்மையென எடுத்து, தனக்கு உபசாரவார்த்தை கூறின அவர்களை யெனினுமாம். (277) 218.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்; கண்ணன் கர்ணனுக்குப் பிறப்புணர்த்துவன. வண்மையினாலுயரங்கர்குலாதிபமதிகுலம்வாழ்வுறவந் துண்மையினாலுயர்மன்னவரைவருமுன்னிலுனக்கிளையோர் பெண்மையினாலுயர்குந்திவயிற்றிடைபெருமையினாலிதயத் திண்மையினாலுயர்நின்னையுமன்பொடுதினகரனல்கினனே. |
(இ -ள்.) வண்மையினால் உயர் - தானத்தாற் சிறந்த, அங்கர்குல அதிப- அங்க நாட்டிலுள்ளாரது கூட்டத்துக்கு தலைவனே! - மதி குலம் வாழ்வு உறவந்து - சந்திரகுலம் சிறப்படையும்படி (அதில்) வந்து பிறந்து, உண்மையினால்உயர் - சத்தியத்தாற் சிறந்த, |