பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 257

 

இந்தநிலம்பெறுவீர்தவிர்கிற்பெறயாரினிவேறுரியார்
வந்தினிநும்பியர்தம்மொடுசேர்கெனமாயன்மொழிந்தனனே.

     (இ -ள்.) அந்தணன் - துருவாசமுனிவன், முன் தரு - முன்னே
[கன்னிகையாயிருக்கையில்] உபதேசித்த, மந்திரம் ஐந்தினில் - ஐந்து
மந்திரங்களால், அறுவரையும் - உங்களாறுபேரையும், கடவுள் குந்தி
பயந்தனள்- தேவ சம்பந்தமுள்ள குந்திதேவி பெற்றாள்; யான் இனி பல
கூறுவது என்-நான் இனிமேற் பலவார்த்தை சொல்லவேண்டுவதென்ன?
உங்களில் நீர் இந்தநிலம் பெறுவீர் - உங்களுக்குள்ளே நீங்கள் இந்த
இராச்சியத்தைப்பெற்றுக்கொள்ளக்கடவீர்; தவிர்கின் - அங்ஙனம் பெறாது
விட்டால், இனி பெறஉரியார் வேறு யார் - இனிப்பெறுதற்கு உரியவர்
வேறுயாவர்?[எவருமல்லரென்றபடி]; (ஆதலால்), இனி - இப்பொழுது,
நும்பியர்தம்மொடுவந்து சேர்க - உன்தம்பிமாரோடு வந்து கூடுவாயாக,
என - என்று, மாயன்மொழிந்தனன் - கண்ணன் (கன்னனுக்குக்)
கூறியருளினான்; (எ - று.)

    "கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றியாங்கு" என
இவ்வரலாற்றைச் சீவகசிந்தாமணியில் பறி [அருக] சமயத்தாரும்
உவமையெடுத்துக் கூறியிருக்குமாறு காண்க.  கீழ்ச் சம்பவச்சருக்கத்தில்,
"தெரிவைகே ளெனச் செவிபடுத்தொருமறை தேவரில் யார்யாரைக், கருதி நீ
வரவழைத்தனை யவரவர் கணத்துநின்கரஞ் சேர்வார்" எனத் துருவாச
முனிவர்தேவர்பலரைக் கருதத்தக்க ஒரு மந்திரமளித்ததாகக் கூறியதனோடு
இதுமாறுகொளக் கூறலாகாதபடி, அப்பெரியமந்திர மொன்றின் பகுதிகள்
இவ்வைந்து மெனக்கொள்க.  நும்பியர் - பாண்டவர்; நீர் - பகுதி; அது
நும்எனத்திரிந்தது; [நன் - உருபு-8.] 'வந்தினிதும்பியர்' என்ற பாடத்துக்கு -
இனிதுவந்தென்க.  வந்து - துரியோதனனை விட்டுவந்து.  தவிர்கின், கு -
சாரியை.தந்திரமாகக்கூறி மித்திரபேதஞ் செய்யலுற்ற சூழ்ச்சியை நோக்கி
இங்கேகண்ணனை 'மாயன்' என்றார்.                         (280)

வேறு.

221.-இதுவும், மேற்கவியும் -ஒருதொடர்: கன்னன்
கண்ணனை நோக்கிக்கூறும் உத்தரம்.

கன்றால்விளவின்கனியுகுத்துங்கழையானிரையின்கணமழைத்துங்
குன்றான்மழையின்குலந்தடுத்துங்குலவுஞ்செல்வக்கோபாலா
இன்றாலெனதுபிறப்புணர்ந்தேனென்றன்புருகியெம்பியர்பாற்
சென்றாலென்னைநீயறியச்செகத்தாரென்றுஞ்சிரியாரோ.

     (இ -ள்.) கன்றால் விளவின் கனி உகுத்தும் - மாயக்கன்றைக் கொண்டு
(ஒருவஞ்சனை) விளாமரத்தின் பழங்களைக் கீழ்ச்சிந்துவித்தும், கழையால்
நிரையின் கணம் அழைத்தும் - வேய்ங்குழலிசையால் பசுக்களின் கூட்டத்தை
ஒருங்கு வரவழைத்தும், குன்றால் மழையின் குலம் தடுத்தும் - கோவர்த்தன
மலையினால் மேகங்களின் கூட்டத்தை மறுத்தும், குலவும் - மகிழ்கின்ற,
செல்வம் - எல்லாச் செல்வங்களையு