பக்கம் எண் :

258பாரதம்உத்தியோக பருவம்

முடைய,கோபாலா - கோபாலனென்னுந் திருநாமமுடையவனே! இன்று
எனதுபிறப்பு உணர்ந்தேன் - இப்பொழுது (நீ சொல்ல) என்னுடைய
பிறந்தவரலாற்றை யறிந்தேன், என்று - என்ற காரணத்தால், அன்பு உருகி -
அன்பாய் மனங்கரைந்து, எம்பியர்பால் - என் தம்பியரான
அப்பாண்டவரிடம்,சென்றால் - (இப்போது துரியோதனனை விட்டு நான்)
போனால், நீ அறிய-,செகத்தார் - நிலவுலகத்துச் சனங்கள், என்றும் -
எப்பொழுதும், என்னை -,சிரியாரோ - (பரிகாசஞ்செய்து) சிரிக்க
மாட்டார்களா, [நன்கு சிரிப்பரேஎன்றபடி];

     கழை -மூங்கில்; அதனாலாகிய குழலுக்குகக்ருவியாகுபெயரும்,
அதனிசைக்கு முதலாகுபெயருமாக இருமடியாகுபெயராம்.  பகல் முழுவதும்
முல்லைநிலத்திற் பரவிச்சென்று மேய்ந்த பசுக்களை மாலைப்பொழுதில்
ஒன்றுசேர்த்தற்கு இனிதாக வேய்ங்குழலூதுதல் இயல்பு; அக்கீதத்தின்
இனிமையைப்பசுக்கள் அறிந்து நன்குகேட்டற்கு அருகில்வந்து திரளு
மென்க.  பின்னே'கணம்' என வந்ததனால், முன்னே 'நிரை' -
பசுக்கூட்டத்தையுணர்த்தாமல்,பசுமாத்திரத்தை யுணர்த்திற்று.

    இதுமுதற் பதினேழு கவிகள் - பெரும்பாலும் மூன்று ஆறாஞ் சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்.                        (281)

222.

ஆரென்றறியத்தகாதவெனையரசுமாக்கிமுடிசூட்டிச்
சீருந்திறமுந்தனதுபெருந்திருவுமெனக்கேதெரிந்தளித்தான்
பாரின்றறியநூற்றுவர்க்கும்பழிதீர்வென்றிப்பாண்டவர்க்கும்
போரென்றறிந்துஞ்செய்ந்நன்றிபோற்றாதவரிற்போவேனோ.

     (இ -ள்.) (துரியோதனன்), ஆர் என்று அறிய தகாத எனை -
இன்னானென்று அறிந்துகொள்ளுதற்குந் தகுதியில்லாத என்னை, அரசும்
ஆக்கி - இராசகுலத்தவனாகவும் வைத்து, முடி சூட்டி - கிரீடாபிஷேகஞ்
செய்வித்து, தனது சீரும் திறமும் பெரு திருவும் - தனக்குரிய
சிறப்புக்களையும்அதிகாரத்தையும் மிக்கசெல்வத்தையும், எனக்கே தெரிந்து
அளித்தான் -எனக்கு ஒருவனுக்கே தன் மனமறிந்து கொடுத்தான்;
(அங்ஙனமிருக்க), இன்று- இப்பொழுது, பார் அறிய - உலகத்தார்யாவரும்
அறியும்படி, நூற்றுவர்க்கும்- (துரியோதனாதியர்) நூறுபேருக்கும், பழி தீர்
வென்றி பாண்டவர்க்கும் -பழிப்புக்கிடமில்லாத சயத்தையுடைய
பாண்டவர்களுக்கும், போர் என்று -சண்டை நேர்வதென்று, அறிந்தும் -
தெரிந்திருந்தும், செய் நன்றிபோற்றாதவரின் - (ஒருவர்) செய்த உபகாரத்தை
நினையாது மறப்பவர் போல,போவேனோ - (துரியோதனனைவிட்டுப்
பாண்டவரிடத்துச்) செல்வேனோ?[செல்லமாட்டேன் என்றபடி];

     ஆர் -யார்; மரூஉ.  இங்கே, கர்ணனது வார்த்தையில் பாண்டவர்க்கு
'பழிதீர்வென்றி' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதனால், அவன்
பாண்டவர்பக்கல் சிறிது அபிமானங் கொண்டா னென்பது விளங்கும்.  பழி
தீர்வென்றி - தருமயுத்தத்தாற் சயித்தல்; புகழ் தரும் வெற்றி.        (282)