பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 259

223.-கண்ணன் கர்ணனுக்குவிடைகொடுத்து அனுப்பிவிட்டு,
அசுவத்தாமனை அழைத்தல்.

இரவிக்குரியதிருமதலையிவ்வாறுரைக்கவிசைவண்டு
விரவிப்பயிலுந்துழாய்முடியோன்வேறோர்மொழியும்விளம்பாமல்
உரவிற்றடந்தோளுரவோனையேகென்றருளியொருசார்வெம்
புரவித்தாமாநின்றானைவருகென்றழைத்துப்புகல்கின்றான்.

     (இ -ள்.) இரவிக்கு உரிய திரு மதலை - சூரியனுக்குஉரிய செல்வப்
புதல்வனான கர்ணன், இ ஆறு உரைக்க - இந்தப்படி சொல்ல,
(அதன் பின்பு),இசை வண்டு விரவி பயிலும் துழாய் முடியோன் -
கீதம்பாடுகிற வண்டுகள்கலந்து மொய்க்கப்பெற்ற திருத்துழாய்
மாலையையணிந்த திருமுடியையுடையகண்ணன், வேறு ஓர் மொழியும்
விளம்பாமல் - வேறொரு வார்த்தையெதையுஞ் சொல்லாது விட்டு, உரம்
வில் தட தோள் உரவோனை -வலிமையையுடைய வில்லை ஏந்திய
பெரியதோள்களின் வலிமையுடையஅக்கன்னனை, ஏகு என்று அருளி - நீ
செல்வாயென்று அன்போடுஅனுப்பிவிட்டு, ஒருசார் வெம்புரவித்தாமா
நின்றானை - (அங்கு) ஒருபக்கத்தில்நின்றிருந்தவனாகிய (போரிற்) கொடிய
அசுவத்தாமனை, வருக என்றுஅழைத்து - வருவாயாகவென்று
அருகிற்கூப்பிட்டு, புகல்கின்றான் -இரகசியமாக (ச் சிலவார்த்தை)
கூறுகிறவனானான்; (எ - று.) - அதனை,மேலிரண்டு கவிகளிற் காண்க.

    திருமதலை யென்பதற்கு - சிறந்தகுமார னென்றும், உரவோன்
என்பதற்கு- புத்திபலமுடையவ னென்றுங் கூறலாம்.  புரவி, அசுவம்
என்பன -குதிரையாகிய ஒரு பொருளைக் குறிப்பன வாதலால்,
அசுவத்தாமாவைப்புரவித்தாமா வென்றார்; பரித்தாமா, இவுளித்தாமா
என்றுங் கூறுவர்.  துரோணர்மனைவியாகிய கிருபியின் அழகைக்கண்டு
மிகக்காமுற்ற சிவபிரானதுஅருளினாற் குதிரையினிடம் பிறந்தவனிவனென்று
அறிக.  அசுவத்தாமன் -குதிரையைப் பிறப்பிடமாக வுடையவன்.
'வேறோர்மொழியும் விளம்பாமல்'என்றது, கர்ணனிடத்து
நாகாஸ்திரத்தைப்பற்றிக் குந்தி கூறவேண்டுமென்றுநினைத்துத் தான்கூறாமல்
விட்டதை.                                               (283)

224.-இதுமுதல் நான்குகவிகள்- கண்ணன் அசுவத்தாமனை
மித்திரபேதஞ்செய்தல்.

போயேகானம்பலதிரிந்துபுகன்றவிரதம்பொய்யாதோ
ராயேவந்தபாண்டவர்களைந்தூர்வேண்டமறுத்ததற்குச்
சேயேயனையசிலைமுனிவன்சேயேநாளைச்செருக்களத்தில்
நீயேகரியென்றெடுத்துரைத்தானெடியோன்றுளபமுடியோனே.

     (இ -ள்.) 'சேயே அனைய - முருகக்கடவுளையே ஒத்த, சிலை
முனிவன்சேயே - வில்லாசிரியனாகிய துரோணாசாரியனது புத்திரனே! கானம்
பலபோயே திரிந்து - காடுகள் பலவற்றிற் சென்று கொண்டே அலைந்து,
புகன்றவிரதம் பொய்யாதோர் ஆயே - (வன