பக்கம் எண் :

26பாரதம்உத்தியோக பருவம்

தத்திதாந்தமாகவந்த பாரத்துவாசன் என்ற மொழியின் குறுக்கல் விகாரம்.
துரோணாசாரியர் பரத்துவாச முனிவரின் குமாரராவர்.            (15)

வீடுமன் திருதராட்டிரனுக்குஉறுதி கூறல்.

16.

காடுமன்னுநின்புதல்வருக்கறுதிசெய்காலமோகழிந்தன்று
நாடுமன்னவகொடாமல்வெஞ்சமர்பொரநாடினையெனினாளைக்
கோடுமன்னுவிலருச்சுனற்கெதிரெவர்குனிக்க வல்லவரென்று
வீடுமன்றிருத்தனயனோடுறுதிகள்வெகுண்டுரைத்தனனன்றே.

     (இ -ள்.)  (அப்பொழுது), வீடுமன் - பீஷ்மன், வெகுண்டு -
கோபங்கொண்டு, திரு தனயனோடு - (தனது) சிறந்த குமாரனான
திருதராட்டிரனுடனே, 'மன்னவ - அரசனே! காடு மன்னும் நின்புதல்வருக்கு -
வனத்தில் வசித்திருந்த உனது குமாரர்களான பஞ்ச பாண்டவர்க்கு, அறுதி
செய் காலமோ - (வனவாசமும் அஜ்ஞாத வாசமுமாக)
வரையறைசெய்யப்பட்டிருந்த (பதின்மூன்று வருஷ) காலமோ, கழிந்தன்று -
கழிந்துவிட்டது;(இனி மேல்), நாடு கொடாமல் - (அவர்களுக்கு) இராச்சிய
பாகத்தை அளித்திடாமல், வெம்சமர் பொர - (அவர்களுடன்) கொடிய
போரைச் செய்தற்கு, நாடினை எனின் - விருப்பங்கொண்டாயானால், நாளை -
நாளைக்கு, (யுத்தகளத்தில்), அருச்சுனற்கு எதிர் - அருச்சுனனுக்கு எதிராக,
கோடு மன்னுவில் குனிக்க வல்லவர் - வளைவுபொருந்தின வில்லை (ப்போர்
செய்தற்கு) வளைக்கவல்லவர், எவர் - (இந்தப்பக்கத்தில்) யாவர்உளர்?
(எவருமில்லை யன்றோ?) என்று - உறுதிகள் உரைத்தனன் - நன்மையைத்
தரும் வார்த்தைகளைக் கூறினான்; (எ - று.) - அன்றே - ஈற்றசை.

     துரோணகிருபர்துரியோதனனிடம் கூறியதுபோலவே வீடுமனும் தன்
கருத்தைத் திருதராட்டிரனிடம் தெரிவித்தனனென்க.  இங்கே, வெகுளி,
திருதராட்டிரனும் துரியோதனனும் பாண்டவர் திறத்தில் அநீதியை நடத்தலால்
வீடுமனுக்கு உண்டாயிற்று.   அறுதி - வரையறுத்தல், பீஷ்மனது தம்பியான
விசித்திரவீரியனது புத்திரனான திருதராட்டிரனை 'தனயன்' என்றது - அவனை
வளர்த்தவன் வீடுமனாதலாலும், பெரிய தந்தையெனப்படுவானாதலாலும்,
தந்தைக்கு உள்ள அவ்வளவு அன்பு இவனுக்கு அவனிடம் இருக்குமாதலாலு
மென்க.  பாண்டவரை 'நின்புதல்வர்' எனத் திருதராட்டிரகுமாரராக
அபேதப்படுத்திக் கூறியதற்குங் காரணம் இதுவே.  காலமோ, ஓ - உயர்வு
சிறப்பு; அது அவ்வனவாச அஜ்ஞாத வாசங்களின் கழிதற்கருமையை
விளக்கும்.  கழிந்தன்று - உடன்பாட்டு ஒன்றன்பால் வினைமுற்று; நாளை -
எதிர்காலங் குறிப்பதொரு இடைச்சொல்; இனி, விரைவில் என்றபடி.  கோடு -
வளைவு; முதனிலைத்தொழிற்பெயர்.  இனி கோடு - வினைத்தொகையாய்,
வளைந்த உறுதிபெற்ற வில்லுமாம், அர்ச்சுனன் - வெண்ணிற முடையவன்
என்பது பொருள்.  இது முதலில் இந்நிறமுடைய கார்த்தவீரிய மகாராசனுக்குப்
பெயராயிருந்தது.  பின்பு அவனைப்