பக்கம் எண் :

260பாரதம்உத்தியோக பருவம்

வாசஅஞ்ஞாதவாசங்களைப்பற்றிக்) கூறிய விரதமொழியைத்தவறாமல்
நிறைவேற்றினவர்களாகியே, வந்த - (மீண்டு) வந்த, பாண்டவர்கள் -
பாண்டுபுத்திரர்களுக்காக, ஐந்து ஊர் வேண்ட - (யான்) ஐந்துஊரையாயினும்
(கொடுத்திடும்படி) பிரார்த்திக்க, மறுத்ததற்கு - (துரியோதனன் சிறிதுங்
கொடுக்கமாட்டேனென்று) தடுத்துச் சொன்னதற்கு, நாளை செரு களத்தில் -
இனிவிரைவில் நடக்கும் போர்க்களத்தில், நீயே கரி - நீயே சாட்சியாவாய்,'
என்று-, எடுத்து உரைத்தான் - (அசுவத்தாமனை நோக்கி) எடுத்துக்
கூறியருளினான்; (யாரெனில்),- நெடியோன் - எல்லாப்பெருமையையு
முடையவனும், துளபம் முடியோன் - திருத்துழாய் மாலையை யணிந்த
திருமுடியையுடையவனுமாகிய கண்ணபிரான்; (எ - று.)

    அசுவத்தாமனுக்குச் சுப்பிரமணியன் உவமை - பலபராக்கிர மங்களால்
மாத்திரமேயன்றி, சிவனருளாற் பிறந்தவனாதலாலும் ஏற்கும்.  இங்கு
அசுவத்தாமனை, 'சேயேயனைய' எனக் கண்ணன் உவமைகூறி
விளித்ததனால்,முருகக்கடவுள் தேவசேனாதிபதியானதுபோல இவன்
துரியோதனாதியர்சேனைக்குத் தலைவனாயின் அவர்களை வெல்லுதல்
அரிதென்ற கருத்தால்இவனிடஞ் சிறிது பேதஞ் செய்யலுற்ற கருத்தும்
புலப்படும்.  கரி -சாட்சியென்னும் பொருளதாதலை "இந்திரனே சாலுங்கரி",
"உய்த்தீட்டும்தேனீக்கரி" எனத் திருக்குறள் நாலடியார்களிலுங் காண்க.
மறுத்ததற்குக் கரி -இங்கே நான்கனுருபு, தகுதிப்பொருளது.  "பிது:
சதகுணம்புத்ர:" என்றபடிதந்தையினும் பலமடங்கு கல்வி கேள்வி
அஸ்திரசஸ்திர சாஸ்திரப்பயிற்சிமுதலியவற்றிற் சிறந்தவனென்பது விளங்க,
'சிலைமுனிவன்சேயே' என்றார்.'நீயேகரி' எனப் பிரிநிலையேகாரங் கொடுத்துக்
கூறியதனால், பிறரெவரும் இங்குஉன்னளவு தகுதியுடையவரில்லையெனப்
புகழ்ந்தவாறு.  விரதம் -கொள்கைதவறாமல் ஒழுகுதல்.  சிரஞ்சீவி யாதலால்
இவன் அழியா - னென்றுஇவனைக் கரிபோக்கியது.  ஏகாரங்களுக்கு ஏற்றபடி
பொருளுணர்க.                                             (284)

225.

ஆனாவுனதாண்மைக்குநகிரவனிதலத்தில்வேறுண்டோ
ஞானாதிபனேபோர்க்களத்தினாகக்கொடியோன்பணிந்துன்னைச்
சேனாபதியாகென்றாலுஞ்செலுத்தேனென்றுநீமறுத்தி
யானாலுய்வரைவருமற்றவர்பாலுனக்குமன்புண்டே.

     (இ -ள்.) ஞான அதிபனே - அறிவுக்குத் தலைவனாகவுள்ளவனே!
ஆனா - (எப்பொழுதும்) நீங்காத, உனது ஆண்மைக்கு - உனது
பராக்கிரமத்துக்கு, நிகர் - சமானமாக, அவனிதலத்தில் - பூலோகத்தில்,
வேறுஉண்டோ - வேறு யாருடையதேனும் பராக்கிரமமுள்ளதோ?
[எதுவுமில்லை];போர் களத்தில் - யுத்தகளத்திலே, நாகம் கொடியோன் -
பாம்புக்கொடியையுடைய துரியோதனன், உன்னை-, பணிந்து - வணங்கி,
சேனாபதிஆகு என்றாலும் - சேனைத்தலைவனாவாயென்று சொன்னாலும்,
செலுத்தேன்என்று - அச்சேனைத்தலைமையை நடத்தமாட்டேனென்று, நீ
மறுத்தி ஆனால் - நீ தடுத்து விடுவாயானால், ஐவரும் - பாண்டவரைந்து
பேரும், உய்வர் - பிழைத்