227. | வரித்தாமரைக்கட் டிருநெடுமால் வான்வாய்நோக்கவரி விற்கைப், பரித்தாமாவு மாழியுடன் பரிதிவடிவந்தனைப்பார்த்தான், கிரித்தாழ்கவிகைக் கருங்கள்வன்கிளர்நூன்முனிவன் மைந்தனையும், பிரித்தானவனுஞ் சூளுற்றா னென்றாரிருந்தபேரவையோர். |
(இ -ள்.) வரி - (சிவந்த) இரேகைகளையுடைய, தாமரை - செந்தாமரை மலர்போன்ற, கண் - திருக்கண்களையுடைய, திரு நெடுமால் - சிறந்த பெரிய கண்ணபிரான், வான் வாய் நோக்க - ஆகாயத்தி னிடத்தைப் பார்க்க, வரி வில்கை பரித்தாமாவும் - கட்டமைந்த வில்லில் வல்ல கையையுடைய அசுவத்தாமனும், ஆழியுடன் - (தன்கையிற் கொண்ட கண்ணன்) மோதிரத்துடனே, பரிதிவடிவந்தனை பார்த்தான் - சூரியனது உருவத்தைப்பார்த்திட்டான்; (இச் செயல்களை நோக்கி), இருந்த பேர் அவையோர் - (அங்குப்) பெரிய சபையிலிருந்தவர்களெல்லோரும், 'கிரி தாழ் கவிகை கரு கள்வன் - கோவர்த்தனமலையாகிய கவிந்த குடையையேந்திய கருநிறமுள்ள மாயவனாகிய கண்ணன், கிளர் நூல் முனிவன் மைந்தனையும்- விளங்குகின்ற முப்புரி நூலையுடைய துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனையும், பிரித்தான் - (துரியோதனனினின்று) பேதப்படுத்தினான்; அவனும் - அவ்வசுவத் தாமனும், சூள் உற்றான் - (ஏதோ) சபதஞ் செய்து கொடுத்தான்', என்றார் - என்று (தங்களுக்குள்) கூறினார்கள்; இங்குக் கண்ணன் அசுவத்தாமனிடத்து இயற்கைபோலச் செய்வித்த செய்கையால், பிறன் கைம்மோதிரத்தை அவன் கையினின்று தான் கையில் வாங்கிப் பூமியைத்தொட்டு ஆகாயத்தை நோக்கிச் செய்வதாகிய ஒரு சபதத்தைஅசுவத்தாமன் கண்ணனுக்குச் செய்து கொடுத்ததாகப் பார்ப்பவர்க்குத்தோன்றிற்று. இங்ஙனம் கண்ணன் அசுவத்தாமனிடத்தில் கௌரவர்யாவர்க்கும் நம்பிக்கை கெடும்படி சூழ்ச்சி செய்ததுபற்றியே இக்கவியில்'கள்வன்' என்று கூறினார். பரிதி என்று சூரியமண்டலத் துக்கும் பெயர்."நூலே கரக முக்கோல் மணையே, யாயுங் காலை யந்தணர்க்குரிய" எனத்தொல்காப்பியத்துக்கூறிய மரபுபற்றி, 'கிளர் நூல் முனிவன் மைந்தன்' என்றார்.இனி, இத்தொடர்க்கு - விளங்குகின்ற வேதசாஸ்திரங்களையும் வில்வித்தையையும் உணர்ந்தவன் என்றும் உரைக்கலாம். இருந்த பேரவையோர் - பேரவை யிருந்தோர். (287) 228.-துரியோதனன்,அசுவத்தாமனை இனி நம்பலாகா தென்றல். தணிவந்தகலுந்தூதனைப்போய்த் தானேயணுகித்தடஞ்சாப, முனிவன்புதல்வன்மோதிரந்தொட் டருஞ்சூண்முன்னர் மொழிகின்றான், இனிவந்துறவாய்நின்றாலு மெங்ஙன்றெளிவதிவனையெனத், துனிவந்தரசர் முகநோக்கிச் சொன்னானிடியே றன்னானே. |
(இ -ள்.) (அப்பொழுது), இடி ஏறு அன்னான் - பேரிடியை யொத்த [மிகக்கொடிய] துரியோதனன், துனி வந்து - (அதுநோக்கிக்) கோபம் மிகுந்து, அரசர் முகம் நோக்கி - மற்றையரசர்களது முகத்தைப்பார்த்து, "தட சாபம் முனிவன் புதல்வன் - பெரிய வில்வித்தை |