பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 263

யில் வல்லதுரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமா, தனிவந்து அகலும்
தூதனை - தனியே வந்து செல்கிற தூதனான கிருஷ்ணனை, தானே போய்
அணுகி-தானாகவே போய்ச்சேர்ந்து, மோதிரம் தொட்டு - (அவனது)
மோதிரத்தைக் கையில்வாங்கி, முன்னர் - எதிரில், அரு சூள் - அருமையான
பிரதிஜ்ஞையை, மொழிகின்றான் - சொல்லுகிறவனானான்; (ஆகையால்), இனி
வந்து-உறவுஆய் நின்றாலும் - (இவன்) இனிமேல் (நம்மிடம்) வந்து
நட்புடையவனாய் நின்றாலும், இவனை எங்கன் தெளிவது - இவனை
எவ்வாறுநம்புவது?' என - என்று, சொன்னான்-: (எ - று.)

    தூரத்திலிருந்து பார்த்த துரியோதனனுக்குக் கண்ணன்
அசுவத்தாமனைக்கூப்பிட்டதும், அசுவத்தாமன் பூமியினின்று மோதிரத்தை
யெடுத்ததும்முதலியன தெரியாவாதலால், இங்ஙனங் கூறினான்.  இனி, தானே
யணுகிஎன்பதற்கு - நமது கட்டளையில்லாமல் தானே சென்று என்றும்
உரைக்கலாம்.மேல் வீட்டும பருவத்தில் "வீரசாபமுட னுரைக்கும் வெய்ய
சாபம் வல்லவத்தீரன்" என்றபடி துரோணன் சாபாநுக்கிரக சக்தியு
முடையவனாதலால்,'தடஞ்சாப முனிவன்' என்பதற்குப்  பெரிய சாபங்
கொடுக்கவல்ல முனிவனென்றுமாம்; இரட்டுறமொழிதல்.  உறவு - சேர்தல்;
உறவினனுக்குத்தொழிலாகுபெயர்.  ஏறு - ஆண்பாற்பெயர்;  பெரியதையுஞ்
சிறந்ததையும்ஏறென்றல் மரபு; பெரிய அலையை ஆணலையென்றலுங்
காண்க.                                                 (288)

229.- அதுகண்டு அசுவத்தாமன்வருந்துதல்.

துளியார்மதுவின்வலம்புரித்தார்த் துரியோதனன்றான்சொல்லியதும்
ஒளியாரவையில்வாள்வேந்தரொருவர்க்கொருவருரைத்தனவுங்
களியானையனான் செவிப்படலுங்கலங்கிச்சித்தமிவரென்னைத்
தெளியாவண்ணம் பேதித்தான்றிருமாலென்றே சிந்தித்தான்.

   (இ - ள்.) துளி ஆர் - துளித்தல் பொருந்திய, மதுவின் - தேனையுடைய,
வலம்புரி தார்-நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய, துரியோதனன்-, தான்-,
சொல்லியதும்-சொன்ன வார்த்தையும், ஒளி ஆர் அவையில்-
விளக்கம்பொருந்தின அச்சபையிலே, வாள்வேந்தர்-ஆயு தங்களையுடைய
அரசர், ஒருவர்க்கு ஒருவர் உரைத்தனவும்-ஒருத்தருக்கு ஒருத்தர் சொன்ன
வார்த்தைகளும், களி யானை அனான் செவி படலும்-மதக்களிப்பையுடைய
ஆண்யானையைப் போன்ற அசுவத்தாமனது காதுகளிற்
கேள்விப்பட்டவளவிலே,- (அவன்), சித்தம் கலங்கி - மனம் நிலைகுலைந்து,
'இவர் என்னை தெளியாவண்ணம் - இவர்கள் என்னை நம்பாதபடி, திருமால்-
கண்ணன், பேதித்தான் - மாறுபாடு செய்தான்', என்றே சிந்தித்தான்-என்று
எண்ணினான்; (எ - று.)                                  (289)

230.- கண்ணன் விதுரன்மாளிகையிற்சென்று
இந்திரனை நினைத்தல்.

தண்ணந்துளப முடியோனுந்தனித்தங்கியிருந்து தன்மனத்தின்
எண்ணம்பலித்த தெனமகிழ்ந்தேயிளையோன்றனக்குவிடைநல்கி