பக்கம் எண் :

264பாரதம்உத்தியோக பருவம்

விண்ணின்றமரர் மிகத்துதிக்கவிதுரன்மனையின்மேவியபின்
திண்ணங்கடவுட்குலவரசன்வருமாறறிந்துசிந்தித்தான்.

    (இ -ள்.) தண் அம் துளபம் முடியோனும் - குளிர்ந்த அழகிய
திருத்துழாய்மாலையையணிந்த முடியையுடைய கண்ணனும்,- இளையோன்
தனக்கு விடை நல்கி - அசுவத்தாமனுக்குச்  செலவு கொடுத்தனுப்பி,
(அதன்பின்), தனித்து அங்கு இருந்து-அங்கு ஓரிடத்தில் தனியனாயிருந்து,
தன்மனத்தின் எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே - தன்மனத்திற் கருதிய
முழுவதும் நிறைவேறிவிட்டதென்று மகிழ்ச்சிகொண்டே, விண் நின்று அமரர்
மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின் - ஆகாயத்திலே வந்து நின்று
தேவர்கள் மிகுதியாகத் துதிசெய்யாநிற்க விதுரனதுமாளிகையில் எழுந்தருளிய
பின்பு, திண்ணம் கடவுள்குலம் அரசன் வரும் ஆறு அறிந்து சிந்தித்தான் -
கலங்காத மனவுறுதி யையுடைய தேவர்கூட்டத்துக்கு அரசனான இந்திரன்
அருகில் வரும்படி ஆலோசித்து நினைத்தான்; (எ - று.)

    'அங்குத் தனித்திருந்து' என்பதை 'விதுரன் மனையின் மேவியபின்'
என்றதன்பின் எடுத்துக்கூட்டினும், 'திண்ணம்' என்பதை 'பலித்தது'
என்பதனோடு கூட்டினும் அமையும்.  'பலித்தது' என்றது, சாதியொருமையாம்.                                          (290)

231.-கண்ணன் அங்குவந்தஇந்திரனை நோக்கிக்
கூறத்தொடங்குதல்.

அந்தக்கணத்தில்வந்திறைஞ்சுமாகண்டலனைமுகநோக்கிக்
கந்தத்துளபமுடியோனுங்கண்ணுங்கருத்துங்களிகூரத்
தந்தத்தொழிலினரிசுமந்ததவிசினிடையேயுடனிருத்தி
முந்தக்கருதுகின்றவினைமுடிப்பானுபாயமொழிகின்றான்.

     (இ -ள்.) அந்த கணத்தில்-அங்ஙனம் வரும்படிநினைத்த அந்த
நிமிஷத்திலேயே, வந்து-, இறைஞ்சும்-வணங்கின, ஆகண்டலனை-
இந்திரனை,முகம்நோக்கி - முகத்தைப் பார்த்து, கந்தம் துளபம்
முடியோனும் -நறுமணத்தையுடைய திருத்துழாய்மாலையைத் தரித்த
திருமுடியையுடையவனான கண்ணனும், கண்ணும் கருத்தும் களிகூர -
(தனது) கண்களும்மனமுங் களிப்பு மிக, தந்தம் தொழிலின் அரி சுமந்த
தவிசின் இடையே உடன்இருத்தி - யானைத்தந்தத்தாலமைந்த விசித்திர
வேலைபாட்டையுடையசிங்கஞ்சுமந்த வடிவமாகச் செய்யப்பட்டதொரு
ஆசனத்தினிடத்திலே உடனே(அவனை) வீற்றிருக்கச் செய்து, முந்த
கருதுகின்ற  வினை முடிப்பான் -பிரதானமாகத் தான் நினைக்கின்ற
காரியத்தை நிறைவேற்றுதற் பொருட்டு,உபாயம் மொழிகின்றான்-தந்திரத்தைக்
கூறுகின்றவனானான்; (எ - று.)

    மைந்தனுக்கு நன்மைசெய்யும்பொருட்டுத் தந்தையான இந்திரனை
வரவழைத்தான்.  'ஆகண்டலன் - (நன்றாகப் பகைவரைத்) துணிப்பவன்.
கண்களிகூர்தல், பார்த்தலால்.  கருத்துக் களிகூர்தல்,