பக்கம் எண் :

266பாரதம்உத்தியோக பருவம்

னுக்கேஉரியதாய்விடும்; (அன்றியும், அருச்சுனன் இறந்தால்),
ஒழிந்தோர்தாமும் மடிந்திடுவார் - மற்றைப்பாண்டவரும் இறந்து விடுவார்கள்:
(இங்ஙனம்), முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் - முன்னே
சூதுபோர் நிகழ்ந்த பொழுது (அருச்சுனன் முதலியோர் கன்னன்
முதலியோரைக் கொல்வதாகக்) கூறின சபத வார்த்தை நிறைவேறாமலிருந்தால்,
அவர்க்கு அன்று - (அருச்சுனன் முதலிய) அப்பாண்டவர்க்கு மாத்திரமே
பழியாகாது; நின் நெஞ்சு அறிய யான் அறிய-உன் மனம் அறியவும் நான்
அறியவும், நினைக்கே வசையும் நிலை ஆம்ஏ - (அருச்சுனனது தந்தையான)
உனக்கே பழிப்பும் (என்றும் அழியாது) நிச்சயமாய் நிலைநிற்பதாகும்;
(எ -று.)- ஈற்றேகாரம் - தேற்றம்.

    இங்ஙனம் கண்ணன் இந்திரனைத் தந்திரமாகத் தன் வழிப்படுத்தற்குக்
கூறுகிறான்.  வசையும் என்ற உம்மை - புத்திரசோகம் மாத்திரமேயன்றி என்ற
பொருளை விளக்குதலால், எச்சப்பொருளதென்னலாம்.             (293)

234.

கவசங்கனககுண்டலமென்றிரண்டுபுனையிற்கற்பாந்த,
திவசம் பொரினுங் கன்னனுயிர்செகுப்பார்மண்ணிற்
                               சிலருண்டோ,
அவசங்கிளைஞருறத் துணைவரரற்றக்களத்திலடுகுரங்குத்,
துவசம் படைத்தோன்படும்பயந்ததுணைவாவின்னே
                               சொன்னேனே.

     (இ -ள்.) (தான்பிறந்தபொழுதே உடம்புடன் பிறந்த), கவசம் -
கவசமும்,கனக குண்டலம் - பொன்மயமான குண்டலமென்னுங் காதணியும்,
என்றஇரண்டு - என்று சொல்லப்பட்ட இவ்விரண்டையும், புனையின் -
தரித்திருப்பானானால், கற்ப அந்த திவசம் பொரினும் - கல்பகாலத்தின்
முடிவுநாள் வரையிற் போர்செய்தாலும், கன்னன் உயிர் செகுப்பார் -
கர்ணனதுஉயிரை ஒழிப்பவர், மண்ணில் சிலர் உண்டோ - பூமியில்
(எவரேனுஞ்)சிலருளரோ? (எவருமில்லை யென்றபடி); (ஆதலால்,) கிளைஞர்
அவசம் உற -பந்துக்கள் (சோகத்தாற்) பரவசத்தை யடையவும், துணைவர்
அரற்ற - உடன்பிறந்தவர்கள் கதறிப்புலம்பவும், களத்தில் - போர்க்களத்தில்,
அடு குரங்குதுவசம் படைத்தோன் - (பகையை) அழிக்கவல்ல குரங்கின்
வடிவத்தையெழுதின கொடியைப் பெற்ற அருச்சுனன், படும் - (கன்னனால்)
இறப்பான்;பயந்த துணைவா - (அவனைப்) பெற்றவனும் (எனக்குச்)
சினேகிதனுமாகியஇந்திரனே! இன்னே சொன்னேனே - (அதனை
முன்சாக்கிரதையாக)இப்பொழுதே (உன்னிடங்) கூறி விட்டேன்; (எ - று.)

    குரங்குக்கொடி - தேருடன் காண்டவதகனகாலத்தில் அக்கினி
தேவனால்அருச்சுனனுக்கு அளிக்கப்பட்டது; பின்பு வீமசேனன்
புட்பயாத்திரையாகஅளகாபுரிக்குச் சென்றபொழுது, இடையில்
அநுமானைக்கண்டு வணங்கிவேண்டிப் போர்க்களத்தில் அருச்சுனன்
தேர்க்கொடியில் வந்து நின்றுமகிழ்ந்து கூத்தாடும்படி வரம்பெற்றான். 
கல்பம் - பிரமனாயுள்.  கவசகுண்டலங்களுக்கு இத்தன்மை - சூரியனது
வரத்தினால் அமைந்தது.  ந+வசம்= அவசம்.                   (294)