பக்கம் எண் :

268பாரதம்உத்தியோக பருவம்

னால்,இந்தப் புவியில் அவன் ஒன்றும் மறுத்து அறியான் - இந்த வுலகத்தில்
அக்கன்னன் ஒரு பொருளையும் (கொடுக்க இயலாதென்று சொல்லி)
மறுத்தறியமாட்டான்; உயிரே எனினும் ஈந்திடுவான் - (இரக்கப்படுவது தனது)
உயிரேயானாலும் (அதனையுந் தவறாது) கொடுத்திடுவான்; (எ - று.)

    கொடுப்பானது உயர்வும் பெறுவானது இழிவுந் தோன்ற 'ஈந்திடுவான்'
என்றது; இங்கே "ஈதாகொடுவெனு மூன்று முறையே, இழிந்தோனொப்போன்
"மிக்கோ னிரப்புரை" என்றதைக் காண்க.  தாநாகரன் - தீர்க்கசந்திபெற்ற
வடசொற்றொடர்.  உரையும் பாட்டும் என இருவகைப்பட்ட புகழில், பாட்டின்
புகழ் இவனுக்குச் சிறப்பாக அமைந்துள்ளவாற்றை 'சந்தப்பனுவலிசை மாலை'
என்ற அடைமொழி விளக்கும்; இந்த அடைமொழிக்கு - பல
சந்தங்களையுடைய நூல்களாகிய  கவிமாலைகளை யேற்ற என்று உரைப்பாரு
முளர்.  உயிரினும் இனிதாய் இன்றியமையாதது எவர்க்கும் வேறொன்று
இன்றாதலால், 'உயிரேயெனினும்' என்று ஏகாரமும் உம்மையும் - உயர்வு
சிறப்பு.  அந்தணர்க்குரிய அறுவகைத் தொழிலில், இரத்தலும் ஒன்றாதலால்,
அதற்குரிய அவ்வடிவமாகப் போகச் சொன்னான்.             (296)

237.

இரண்டுமவன்பானீகவரினிருந்தேரூர்ந்திப்படியரசர்
திரண்டுவரினும்வெஞ்சமரிற்றிண்டேர்விசயனெதிர்நில்லார்
முரண்டுபொருவிற்கன்னனுந்தன்முன்னேயெய்திமுடிசிதறிப்
புரண்டுமறியுமெனவணங்கிப்புத்தேளரசன்போகின்றான்.

     (இ -ள்.) இரண்டும் - (மேற்கூறிய கவச குண்டலமாகிய) இரண்டு
பொருளையும், அவன்பால் நீ கவரின் - அக்கன்னனிடத்தினின்று நீ
பெற்றுக்கொண்டு வந்தால், இப்படி அரசர் - இந்தப் பூலோகத்திலுள்ள
அரசர்களெல்லோரும், இருந் தேர் ஊர்ந்து - பெரியதேரின்மேலேறிச்
செலுத்தி,திரண்டுவரினும் - (தொகையாகக்) கூடிவந்தாலும், வெம் சமரில் -
கொடியயுத்தத்தில், திண்தேர் விசயன் எதிர் நில்லார் - வலிய
இரதத்தையுடையஅருச்சுனனுக்கு எதிரில் நிற்கமாட்டார்கள்; முரண்டு பொரு
வில் கன்னனும் -பகைத்துப் போர்செய்கிற வில்லில்வல்ல அக் கர்ணனும்,
தன் முன்னே எய்தி -அவ்வருச்சுனனுக்கு எதிரில் வந்து, முடி சிதறி -
(அவ்வருச்சுனனுக்கு எதிரில்வந்து, முடி சிதறி - (அவனம்பால் தன்) தலை
சிதறப்பெற்று, புரண்டு - கீழ்விழுந்து உருண்டு, மறியும் - இறப்பான், என -
என்று (ஸ்ரீகிருஷ்ணமூர்த்திஉபாயங்) கூற, (உடனே) புத்தேள் அரசன் -
தேவர்களுக்கு அரசனானஇந்திரன், வணங்கி - (கண்ணபிரானை)
நமஸ்கரித்து, போகின்றான் -(கன்னனிடஞ்) செல்பவனானான்; (எ - று.)

    கவரின் - தந்திரமாகக் கிரகித்துவிட்டால், முரண்டு என்னுந் தெரிநிலை
வினையெச்சத்தில், முரண் - வினைப்பகுதி.  புத்தேள் - தேவன்; இதன்
பன்மை - புத்தேளிர்.                          (297)