| லென்று, சொன்னவேலையி னகைத்துனக்களிப்பனீ சொன்னவை யாவையுமென்றான். |
(இ -ள்.) (கர்ணன் நமஸ்கரித்தபின் அவ்வந்தணனைப் பார்த்து), 'நீர் -,ஈண்டு - இவ்விடத்தில், பரிந்து - அன்புகொண்டு, எழுந்தருளுதற்கு - கருணையோடு வருவதற்கு, என்ன மா தவம் புரிந்தனன் - (நான்) என்ன பெருந்தவத்தைச் செய்துள்ளேனோ', என்று - என்று (உபசாரவார்த்தை) கூறி, பொன்னின் ஆசனத்து இருத்தி - (அப்பிராமணனைப்) பொன்மயமானதொரு ஆசனத்திலே யெழுந்தருளப் பண்ணி, மெய் அருளுடன் - உண்மையான கருணையுடனே, பூசையும் - (அதிதியாகவந்த அந்தணனுக்குச் செய்தற்குரிய) உபசாரங்களையும், முறை முறை புரிய - நூல் முறைமைப்படி செய்ய, (அப்பொழுது), அன்ன வேதியன் - அந்தப் பிராமணன், 'தளர்ந்த என் நடையினால் - மிகத் தளர்ச்சி பெற்றுள்ள எனது நடையினாலே, பின் பகல் ஆனதே - (இங்கு நான் வந்து சேர்வதற்குப்) பிற்பகற்பொழுதாய்விட்டது,' என்று சொன்ன வேலையின் - என்று சொன்னபொழுது, (கன்னன்), நகைத்து- சிரித்து, 'நீ சொன்னவை யாவையும் உனக்கு அளிப்பன் என்றான் - (காலங்கடந்தாலும் இப்பொழுது) நீ விரும்பிய பொருள்களையெல்லாம் (உனக்குநான்) கொடுப்பேன்' என்று கூறினான்; (எ - று.)
முற்பகல் கழிந்துவிட்டது காரணமாக இவன் வேண்டிய பொருளைக் கொடுக்கமாட்டான் என்று தன்பக்கல் இந்திரன் இகழ்ச்சியான கருத்துக் கொண்டமையை நோக்கிக் கர்ணன் சிரித்தான்; மிகுந்த அன்பால் முக மலர்ந்துசிரித்தா னென்றுமாம்; அன்றி, பரிகாசமாகச் சிரித்தானெனக் கொள்ளலாகாது;அது வள்ளன்மைக்குக் குறைவுபாடாதலால். இரப்பானது சிறுமையும் ஈவானதுபெருமையுந் தோன்ற, 'மெய்யருளுடன்' எனப்பட்டது. மூப்புடைய பூதேவனதுசிறப்பை நோக்கி, 'பூசை' என்றார். (300) 241.-கர்ணனது சபதமொழி. அருத்தியீதல்பொற் சுரதருவினுக்குமற் றரிதுநீயளித்தியோ வென்று, விருத்தவேதியன் மொழிந்திடநகைத்துநீ மெய்யுயிர்விழைந் திரந்தாலுங், கருத்தினோடுனக் களித்திலேனெனி னெதிர்கறுத்தவர் கண்ணிணைசிவப்ப, வுருத்தபோரினிற் புறந்தரு நிருபர்போயுறுபத முறுவ னென்றுரைத்தான். |
(இ -ள்.) 'அருத்தி ஈதல் - (எனக்கு) விருப்பமான பொருளைக் கொடுத்தல், பொன் சுர தருவினுக்கும் - பொன்மயமான தேவதருவாகிய கற்பகவிருட்சத்துக்கும், அரிது - அருமையானதாம்; (அங்ஙனமிருக்க), நீ அளித்தியோ - நீ கொடுத்திடுவையோ?' என்று -, விருத்த வேதியன் - அந்தக்கிழப் பிராமணன், மொழிந்திட - சொல்ல,- (கர்ணன்),- நகைத்து - சிரித்து,'மெய் உயிர் நீ விழைந்து இரந்தாலும் - எனது உடம்பிலுள்ள உயிரை நீவிரும்பிக்கேட்டாலும், கருத்தினோடு - மனச் சம்மதியுடனே, உனக்குஅளித்திலேன் எனின் - உனக்குக் கொடாமற் போவேனானால், (யான்), -எதிர் |