யாசித்துச்சொன்னதையும், அவ்வளவு ஈந்ததும் - அம்மாத்திரத்தில் (அவன் தனக்குக்) கொடுத்ததையும், ஆங்கு அவற்கு இசைத்தான் - அவ்விடத்தில் [அப்பொழுது] அக்கண்ணனுக்குக் கூறினான்; வரம் தரும் திருமால் - (வேண்டிய) வரங்களையெல்லாங் கொடுத்தருளுகிற திருமகள் கொழுநனான கண்ணன், அதை வினவி-அந்த இந்திரன் வார்த்தையைக்கேட்டு, அவ்வாசவன் தனக்கு உரை வழங்கும் - அந்த இந்திரனுக்குத் தான் ஒருவார்த்தை கூறுவான்;(எ - று.) புயல்வண்ணன் இருந்தவுழி - விதுரன்மாளிகை. மனம் மிக மகிழ்தற்குக் காரணம், கண்ணன் கட்டளைப்படியும் தான் விரும்பின படியும் அருச்சுனனுக்கு அபாயமுண்டாகாதவாறு கன்னனிடம் கவச குண்டலங்களைப்பெற்றுவிட்டது. 'அவ்வளலீந்ததும்' என்ற பாடத்துக்கு - வரையாதுகொடுப்பவனாகிய அக்கர்ணன் கொடுத்ததையுமென்க; வளல் - வள்ளல். எல்லாவரங்களையும் எல்லோருக்குந்தர வல்ல எம்பெருமான் இங்குத் தான் ஒருவனை இரந்ததும் மற்றொருவனை யிரக்கும்படி பிறனைத்தூண்டியதும் ஆகிய இவையெல்லாம், மனிதனாக அவதரித்ததற் கேற்றதிருவிளையாடலேயா மென்பது தோன்ற, இங்கு 'வரந்தருந்திருமால்' என்றார். (305) 246.- கண்ணன்இந்திரனுக்குச் சில கூறுதல்். உண்மையாகவெஞ்சமர்முகத்தெறிபடையொன்றும் வந்துடலுற வொட்டாத், திண்மையாலுயர்கவச குண்டலங்களைச் சென்றிரந்தவற்கிவன் கொடுத்தான், எண்மையாயினுங்கிளைஞரேயேற்பினுமியல்பிலாப்புன்செல்வரீயார், வண்மையாளர்தம்மாருயிர் மாற்றலார்கேட்பினுமறுக்கிலாரென்றே. |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ- ள்.) வெம் சமர் முகத்து - கொடிய போர்முனையிலே, எறிபடை ஒன்றும் வந்து - (பகைவர்) வீசுகிற ஆயுதமொன்றும் வந்து உண்மைஆக உடல் உற ஒட்டா - மெய்யாக உடம்பிற் படுதற்கு இடங்கொடாத,திண்மையால் - வலிமையினாலே, உயர்-சிறந்த, கவசகுண்டலங்களை -கவசத்தையுங் குண்டலங்களையும், சென்று இரந்தவற்கு-போய் யாசித்தவனுக்கு,இவன் கொடுத்தான் - இக்கர்ணன் கொடுத்திட்டான்; இயல்பு இலா புல்செல்வர்- இயற்கையில் நற்குண மில்லாத இழிவான செல்வமுடையவர்கள், எண்மைஆயினும் - (இரக்கப்படும் பொருள் தம்மாற் கொடுக்கப்படுதற்கு மிக) எளியதாயிருந்தாலும், கிளைஞரே ஏற்பினும் - அதனையிரப்பவர் (நெருங்கிய)உறவினர் (அல்லது நண்பர்களே) ஆனாலும், ஈயார் - (ஒன்றையும்)கொடுக்கமாட்டார்கள்; வண்மையாளர் - கொடையாளிகளோ வெனின், தம்ஆர் உயிர் - (இரக்கப்படுவது) தமது அரிய உயிரேயானாலும், மாற்றலார்கேட்பினும் - (அதனைப்) பகைவர்கள் வந்து இரந்தாலும், மறுக்கிலார் -தடுத்துக்கொடாதொழியார்கள், |