நினைத்து,(அவளை நோக்கி),- 'நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் - நீஅக்காலத்தில் என்னைப்பெற்றவளென்று சொன்னாலும், நின் மொழி நெஞ்சுஉற தேறேன் - உன்வார்த்தையை மனத்திற் பொருந்த நம்ப மாட்டேன்; பேய்அனார் சிலர் - பேயை யொத்தவராகிய சில மகளிர், பேர் அறிவு இன்மையால்- சிறந்த அறிவு இல்லாமையால், எனக்கு பெற்ற தாய் என வந்து - எனக்குஈன்ற தாயாவேனென்று (தனித்தனி உறவு) கூறி வந்து, தூயநாகரின் அமைந்ததுஓர் துகிலால் - பரிசுத்த குணமுள்ள தேவர்களால் அமைக்கப்பட்டதொருவஸ்திரத்தால், துன்பம் உற்று - மரண வேதனையடைந்து, என்பு உரு ஆனார் -எலும்பு மாத்திரம் மிகுந்த வடிவமானார்கள்; இன்னாள் பெற்ற பிள்ளை யென்று ஏற்படாத கர்ணன் மிகுந்த உதாரணகுணமுடையவனாக இருந்ததனால் உலகத்தில் பணப்பித்துக் கொண்டபல மகளிர் இவனிடம் வந்து தாம் தாம் தாயென்று கூறிச் செல்வம் பறிக்கமுயல, அதனை நோக்கிக் கர்ணன் தேவர்களை வேண்டவே, அவர்கள்தெய்வத்தன்மையுள்ள ஓராடையைத் தந்து 'உண்மையான தாயொருத்தியொழியவேறு எவரேனும் தாயென்று வருபவர் இதனை உடுத்தால் இறப்பர்' என்றுசொல்லிப் போக, அங்ஙனம் அவனாற் பரீட்சிக்கப்பட்டுப் பல தாய்மார்அச்சேலையால் உடலெரிபட்டு ஒழிந்தனரென வரலாறு காண்க. பேய் - வந்தபூதனை யென்னும் பேய்மகளாகவுமாம். அந்நாள் - அநாளென எதுகைப்பொருத்த நோக்கிய தொகுத்தல். (310) வேறு. 251.-கர்ணனளித்த ஆடைகளைத்தரித்துக் குந்தி அழியாதிருத்தல். அடாதுசெய்தவர் படாதுபட்டனரெனு மங்கர்கோனருண்மொழி கேட்டுத், தடாதவன்புடைக்கெடாததூமொழி பகர்தையலு மையலிற்ற விர்ந்து, படாமதென்கையிற் றருகெனவருதலும்பயந்திலேனெனிலெனை முனியென், றெடாவிரித்தலைத் துடற்படப்போர்த் தெதிரீன்றதாயாமென விருந்தாள். |
(இ -ள்.) 'அடாது செய்தவர் - தகாத காரியத்தைச் செய்தவர்கள், படாது பட்டனர் - படுதற்கரிய பாடுபட்டு இங்ஙனம் ஒழிந்தார்கள்,' எனும் - என்று சொன்ன, அங்கர்கோன் அருள் மொழி - கர்ணனது கருணையோடு கூடிய வார்த்தையை, கேட்டு-, தடாத அன்பு உடைகெடாத தூ மொழிபகர் தையலும் - (எவராலுந்) தடுக்கப்படாத அன்புடையவளும் குற்றமில்லாத பரிசுத்தமான சொற்களைச் சொல்பவளுமாகிய அழகிய அக்குந்தியும், மையலின் தவிர்ந்து - மயக்கத்தினின்று நீங்கி, படாம் அது என் கையில் தருகஎன - 'அந்த வஸ்திரத்தை எனது கையிலே கொடுப்பாய்' என்று சொல்லி,வருதலும் - (அவனாற் கொடுக்கப்பட்டு அது தன் கைக்கு) வந்த வளவிலே,-பயந்திலேன் எனில் எனை முனி என்று - ('யான் இவனைப்) பெற்றவளல்லேனானால் என்னைக் கோபித்தழிப்பாய்' என்று (அத்தெய்வ வஸ்திரத்தை நோக்கிச்) சொல்லி, எடா விரித்து |