பக்கம் எண் :

284பாரதம்உத்தியோக பருவம்

257.-குந்தியைக் கர்ணன்தேற்றுதல்.

ஆண்டுமாமகனுமிருகணீர்துடைத்தவ்வன்னையைப்பன்முறைதேற்றி,
மூண்டவல்வினையின்பயனலாதியார்க்கு முயற்சியால்வருவ
                                      தொன்றுண்டோ,
வேண்டும்யாவையுமே தருகுவேனீரும் வேண்டியவேண்டுகவென்னப்,
பாண்டுவின்றிருமா மனைவியு மதற்குப்பண்பினாலின்னனபகர்வாள்.

     (இ -ள்.) ஆண்டு - அப்பொழுது, மா மகனும் - பெரிய முதற்
புத்திரனான கர்ணனும், இரு கண் நீர் துடைத்து - (அவளது) இரண்டு
கண்களினின்றும் பெருகுகிற நீரைத் துடைத்து, அ அன்னையை பல்
முறைதேற்றி - அப்படி அழுகிற தாயைப் பலதரம் சமாதானப்படுத்தி,
'மூண்டவல்வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று
உண்டோ - (முற்பிறப்பிற் செய்யப்பட்டு இப்பிறப்பிற்) பயன்தரநின்ற
வலியகருமத்தின் பயன் நேர்வதே யல்லாமல் எவர்க்கும் தமது
பிரயத்தனத்தால் விளைவதொரு பயன் உண்டோ? [இல்லை யென்றபடி],
வேண்டும் யாவையுமே தருகுவேன்-(யான் எல்லோருக்கும்) விரும்பிக் கேட்ட
பொருள்கள் எல்லாவற்றையுமே கொடுக்கும் இயல்புடையேன்; (ஆதலால்),
நீரும் வேண்டிய வேண்டுக - நீரும் (இது தவிர) உமக்கு வேண்டிய
பொருள்களை வேண்டுவீராக,' என்ன - என்று சொல்ல, பாண்டுவின் திரு மா
மனைவியும் - பாண்டுமகாராசனது சிறந்த பெரிய மூத்தமனைவியான குந்தியும்,
அதற்கு - (அக்கன்னன்) வார்த்தைக்கு, பண்பினால் - இனிமையாக, இன்னன
பகர்வாள் - இவ்வார்த்தைகளைக் கூறுவாள்; (எ - று.)- அவற்றை,
மேற்கவியிற்காண்க.

    முன்னைய ஊழ்வினைப் பயன்படியே நடக்கும்; நான் வரும்படி நீர்
செய்கிற முயற்சி பயன்படாததைப்பற்றி வருந்தவேண்டா என்பது,
இரண்டாமடியின் கருத்து, வேண்டிய - பெயர்.                   (317)

258.-குந்தி கர்ணனிடம்வரம் வேண்டுதல்.

பார்த்தன்வெஞ்சமரினின்னுடன்மலைந்தாற்பகைப்பெரும்
                                  பாந்தளம்பகழி,
கோத்தலும்பிழைத்தான்மறித்துநீவிடுத்துக்கோறலென்றொரு
                                 வரங்குறித்தாள்,
வாய்த்தமற்றவர்களிளைஞரென்றவரை மலையலென்றொருவரங்
                                     குறித்தாண்,
மூத்தவன்காதலிளைஞர்தம்பொருட்டான்மொழிந்தமைகேட்டிவை
                                     மொழிவான்.

     (இ -ள்.) 'பார்த்தன் - அருச்சுனன், வெம்சமரில் - கொடிய யுத்தத்தில்,
நின்னுடன் மலைந்தால் - உன்னுடன் போர்செய்தால், (அப்பொழுது நீ), பகை
பெரு பாந்தள் அம் பகழி - (இவனுக்கு முன்னே தொடங்கிப்) பகையாயுள்ள
பெரிய சிறந்த நாகாஸ்திரத்தை, கோத்தலும் - (அவன்மேல் ஒருதரந்)
தொடுத்தவளவில், பிழைத்தால் - (அவன் அதற்குத்) தப்பிப்
பிழைப்பானானால்,மறுத்தும் நீ விடுத்து கோறல் - மறுபடியும் (அந்த
அஸ்திரத்தை) நீ(அவன்மேற்) பிரயோகித்து (அவனை)க் கொல்லாதே,'
என்று ஒரு வரம்குறித்தாள் -