என்றுசொல்லி ஒரு வரத்தைக் குறிப்பிட்டு வேண்டினாள்; 'வாய்த்த மற்றவர்கள் - பொருந்தின மற்றைப் பாண்டவர்கள் நால்வரை, இளைஞர் என்று - தம்பிமார்களெனக் கொண்டு, அவரை மலையல் - அவர்களைக் கொல்லாதே,' என்று ஒருவரம் குறித்தாள்-: மூத்தவன் - தமையனான கர்ணன்; காதல் இளைஞர்தம் பொருட்டு - அன்புக்கு உரிய தனது தம்பியர்களுக்காக, மொழிந்தமை - (தாய் இங்ஙனஞ்) சொன்னதை, கேட்டு-, இவை மொழிவான்- இவ்வார்த்தைகளைக் கூறுவான்; (எ - று.) அம்பகழி - பகழிக்கு அழகு, குறித்த இலக்குத் தவறாமை; இனி, அம்- அல்வழிச்சாரியை யெனவுமாம். கோறல், மலையல் - எதிர்மறை யொருமை ஏவல்கள். மலையல் என்பதற்கு - போர்செய்யாதே என்று கூறுதல் மேல் யுத்த பருவங்களோடு மாறுபடுமென விடுக்க. ஆல் - அசை. (318) 259.-கர்ணனது மறுமொழி. தெறுகணையொன்று தொடுக்கவுமுனைந்துசெருச்செய்வோன் சென்னியோடிருந்தான், மறுகணைதொடுப்பதாண்மையோவலியோமானமோ மன்னவர்க்கறமோ, வுறுகணையொன்றேபார்த்தன்மேற்றொடுப்பனொழிந்துளோருய் வரென்றுரைத்தான், தறுகணரலர்க்குந்தறுகணானவர்க்குந்தண்ணளிநிறைந்த செங்கண்ணான். |
(இ -ள்.) 'தெறு கணைஒன்று தொடுக்கவும் - அழிக்கவல்ல அஸ்திரத்தை ஒருமுறை பிரயோகிக்கவும், முனைந்து செரு செய்வோன் சென்னியோடு இருந்தால் - எதிர்த்துப் போர்செய்யும் பகைவன் தலைதுணிக்கப்படாமல் அதனோடு பிழைத்திருந்தால், மறு கணை தொடுப்பது -(அவன்மேல் அந்த அஸ்திரத்தை) இரண்டாம்முறை விடுப்பது, மன்னவர்க்கு -அரசர்களுக்கு, ஆண்மையோ - பராக்ரமமாகுமோ? வலியோ - வல்லமையோ?மானமோ - பெருமையோ? அறமோ - தருமமாகுமோ? [ஆகாதென்றபடி];உறுகணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன் - (நான்) அடைந்துள்ளநாகாஸ்திரத்தை ஒருதரமே அருச்சுனன்மேற் பிரயோகிப்பேன்; ஒழிந்துளோர்உய்வர் - அவனொழிந்த பாண்டவர் நால்வரும் (என்னாற் கொல்லப்படாமற்)பிழைத்திடுவார்கள்,' என்று உரைத்தான் - என்று கூறினான்; (யாவனெனில்), -தறுகணர் அலர்க்கும் - கொடியவரல்லாத நல்லவர்க்கும், தறுகண்ஆனவர்க்கும் - கொடுமையையுடையோர்க்கும், (வேறுபாடின்றி), தண் அளிநிறைந்த - குளிர்ச்சியான கருணை நிரம்பின, செம் கண்ணான் - சிவந்தகண்களையுடைய கர்ணன்; (எ - று.) (319) 260.-இதுவும், மேற்கவியும்ஒருதொடர்: கர்ணன் குந்தியை நோக்கிக் கூறுவன. பெருவரமிரண்டும்பெற்றபின் றன்னைப்பெற்றதாயினைக் கரங் குவித்துத், தருவரமெனக்குமிரண்டுளவுலகிற்சராசரங்களுக்கெலாந் தாயீர், வெருவருமமரிற்பார்த்தனாலடியேன் வீழ்ந்தபோதவனிபரறிய, மருவருமுலைப்பாலெனக் களித்துந்தமகனெனும் வாய்மையு முரைப்பீர். |
|