பக்கம் எண் :

286பாரதம்உத்தியோக பருவம்

     (இ -ள்.) பெரு வரம் இரண்டும் பெற்ற பின் - பெரிய வரங்களை
இரண்டையும் (குந்தி தன்னிடம்) பெற்ற பின்பு, (கன்னன்), தன்னை பெற்ற
தாயினை கரம் குவித்து - தன்னைப்பெற்ற தாயாகிய அவளைக் கைகூப்பி
வணங்கி, 'உலகில் சர அசரங்களுக்கு எலாம் தாயீர் - உலகத்திலுள்ள
சராசரப்பொருள்களெல்லாவற்றிற்குந் தாயாகவுள்ளவரே! - எனக்கும் தரு
வரம்இரண்டு உள - எனக்கும் (நீர்) கொடுக்க வேண்டிய வரங்கள் இரண்டு
உண்டு;(அவை யாவையெனில்),- வெருவரும் அமரில் - அஞ்சத்தக்க
யுத்தகளத்திலே,பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது - அருச்சுனனால் நான்
இறந்துவிழும்பொழுது, அவனிபர் அறிய - அரசர்களெல்லாருமறியும்படி,
மருவருமுலை பால் எனக்கு அளித்து - மனம் பொருந்திய (உமது)
முலைப்பாலைஎனக்குக் கொடுத்து, உம்தம் மகன் எனும் வாய்மையும்
உரைப்பீர் -உம்முடைய புத்திரன் யானென்கிற உண்மையையும்
வெளியிட்டுக்கூறுவீர்; (எ -று.)

    'மன்னனுயிர்த்தே மலர்தலையுலகம்' என உலகத்திலுள்ள எல்லாப்
பிராணிகளுக்கும் உயிராகக் கூறப்படுகிற அரசனைப் பெற்ற தாயாதல் பற்றி,
குந்தியை 'உலகிற் சராசரங்களுக்கெல்லாந் தாய்' என்றது; அன்றியும், தாயைத்
தெய்வமாகப் பாவிக்கவேண்டுமென்பதுபற்றி, இங்ஙனம் கூறியதாகவுங்
கொள்ளலாம்.  மருவுஅரு - பெறுதற்கு அருமையான என்றுமாம்.  (320)

261.உய்வருந்திறல்வெம் போர்முடிப்பளவு முமக்குநான்
                             மகனெனுந்தன்மை,
யைவருமறியாவண்ணநீர்காப்பீ ரல்லதங்கவர்சிறிதறியின்,
மைவருங்கடற்பாரனைத்தையுமெனக்கே வழங்குவர்
                           வழங்கினால்யானென்,
கைவருந்துணைவன்றனக்கலால்வழங்கேன் கடைப்பிடி
                             கருமமீதென்றான்.

     (இ -ள்.) உய்வு அரு திறல் வெம் போர் முடிப்பு அளவும் -
தப்புதலருமையான வலியகொடிய பாரதப்போர் முடிக்கிறவரையிலும், உமக்கு
நான் மகன் எனும் தன்மை ஐவரும் அறியா வண்ணம் நீர் காப்பீர் - உமக்கு
நான் புத்திரனென்கிற உண்மையைப் பாண்டவர் ஐந்துபேரும் அறியாதபடி
நீர்மறைத்துவைக்கக்கடவீர்; அல்லது - அங்ஙனமன்றி, அங்கு அவர் சிறிது
அறியின் - அப்படி அவர்கள் சிறிதாயினும் அறிந்தாரானால், மைவரும்
கடல்பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் - கருநிறம் பொருந்திய கடல்
சூழ்ந்த பூமி முழுவதையும் எனக்கே கொடுத்திடுவார்கள்; வழங்கினால் -
(அங்ஙனம்) கொடுத்தால், யான்-, என் கை வரும் துணைவன் தனக்கு அலால்
வழங்கேன் - எனக்குப் (பலகாலமாகப்) பயின்று வந்த சிநேகிதனான
துரியோதனனுக்கே (அதனைக்கொடுப்பேனே) யல்லாமல் (பிறர்க்குக்)
கொடுக்கமாட்டேன், ஈது கடைப்பிடி கருமம் - இது உறுதியாகக்கொண்ட
செயலாம், என்றான்-என்று (கர்ணன் குந்தியைநோக்கிக்) கூறினான்;(எ-று.)

     இனி,ஈதுகருமம் கடைப்பிடி என மாற்றி, இக்காரியத்தை மறவாமல்
உறுதியாகக்கொள்வாய் எனவுரைத்தல், கீழ்ப்பலவிடத்