தும்மரியாதை பற்றிய முன்னிலைப் பன்மையாகக் கூறியவற்றோடு மாறுகொள்ளுமென விடுக்க. கைவருந்துணைவன் - கையையொத்து உதவும் நண்ப னென்றுமாம். (321) 262.-குந்தி கண்ணனிடம்சேர்தல். என்றலுமதுகேட்டீன்றதாயொக்குமென்றுகொண்டிவ்வரநேர்ந்து, வன்றுயர்மேன்மேல்வளரயான்றளராவகையுயிருனக்குமுற்பெயர்வ, தென்றினியெனத்தன்கண்கணீர்சொரிய வினைந்து நைந்தழு தழு திரங்கி, யென்றருண்மதலைதனைத்தழீஇநிறுத்தியாதவனிருந்துழிச் சென்றாள். |
(இ -ள்.) என்றலும் - என்று (கன்னன்) சொன்னவளவிலே, அது கேட்டு-, ஈன்ற தாய் - (அவனைப்) பெற்ற தாயாகிய குந்தி, ஒக்கும் என்று கொண்டு - (இவை) தகுமென்று உடன்பட்டு, இ வரம் நேர்ந்து - இந்த இரண்டுவரங்களையுங் கொடுத்து, வல்துயர் மேன்மேல் வளர - கொடிய துன்பம்மேலே மேலே அதிகப்பட்டுவளர, 'யான் தளரா வகை - நான் தளர்ச்சியடையாதபடி, உனக்கு முன் உயிர் பெயர்வது - உனக்கு முன்னே (நான்) உயிர் நீங்குவது, இனி என்று - இனி எக்காலத்திலோ?' என - என்று சொல்லி, தன் கண்கள் நீர் சொரிய - தனது கண்கள் நீரைப் பெருக்க, இனைந்து - சோகித்து, நைந்து - வாடி, அழுது அழுது - மிகப்புலம்பி, இரங்கி- இரக்கமுற்று, என்று அருள் மதலை தனை தழீஇ - சூரியன் பெற்ற பிள்ளையான அக்கன்னனைத் தழுவி, நிறுத்தி - (அங்கே அவனை) நிறுத்திவிட்டு [விடைபெற்று], யாதவன் இருந்த உழி சென்றாள் - கண்ணன் இருந்த இடத்துக்குப் போனாள்; (எ - று.) என்று- ஒளியையுடையதெனக் காரணப்பெயர்; எல் - ஒளி; பகுதி.(322) 263.-கண்ணன் மகிழ்ந்துமீண்டு பாண்டவரிடம் வருதல். கண்ணனுங்குந்திகன்னனோடுரைத்தகருத்தெலாந்திருத்தமாக் கேட்டாங், கெண்ணமுமுடிந்ததெனமகிழ்ந்தந்தவணங்கையுமில்லிடை யிருத்தித், தண்ணளியுடன்றன்பின்வருநிருபர்தம்மையுமுறைமுறை நிறுத்திப், பண்ணமைதடந்தேர்மீதுகொண்டன்றேபாண்டவருறை நகரடைந்தான். |
(இ -ள்.) கண்ணனும்-, குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் - குந்தி கர்ணனுடன்சொன்ன எண்ணங்களையெல்லாம், திருத்தம் ஆ கேட்டு - செவ்வையாக்கேட்டு, ஆங்கு எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து - அக் கன்னனிடத்திலுந் தான் எண்ணிய எண்ணம் நிறைவேறிற்றென்று சந்தோஷித்து,அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி - சிறந்தமகளாகிய அக்குந்தியையும்வீட்டிலிருக்கச்செய்து, தண் அளியுடன் தன் பின் வரும் நிருபர் தம்மையும்முறை முறை நிறுத்தி - குளிர்ச்சியான அன்புடனே தன் |