பக்கம் எண் :

படையெழுச்சிச் சருக்கம் 291

ஞானியர்க்குஅடைமொழி யாக்காமல் ஞானத்துக்கு அடைமொழியாக்கின்,
உலகத்தாரது அறிவினெல்லையின் மேம்பட்ட உண்மை யுணர்வென்க.
கடவுளர் - (இவ்வுலக சம்பந்தத்தைக்) கடத்தலையுடையவர்.  'ஞானியர்
கடவுளர்' என்ற தொடரில் உயர்வுசிறப்போடு எண்ணுப்பொருள் தரும்
உம்மைதொக்குநின்றது.  கழலிணை, நான்மறை, என்றவற்றின்பின்,
இனைத்தென்றறிபொருளில் வரும் முற்றும்மைகள் செய்யுள் விகாரத்தால்
தொக்கன.  செம்மை யென்னும் பண்பினடி விகாரப்பட்டுச் சிவப்பு எனத்
தொழிற்பெயராயிற்று.  கழலிணை சிவப்பேற - இடத்து நிகழ்பொருளின்
தொழில்இடத்தின் மேல் ஏற்றிக் கூறப்பட்டது.  உபசாரவழக்கு, நான்மறை -
இருக்கு,யசுர், சாமம், அதர்வணம் என்பன.  பந்நகதவஜன் என்னும்
வேற்றுமைத்தொகை, வடநூல் முடிபு.  பந்நகமென்னும் வடசொல்லுக்கு -
கால்களால் நடவாதது [மார்பினால் ஊர்ந்து செல்வது] என்றாவது,
வக்கிரகதியாய் வளைந்து செல்வது என்றாவது பொருள் கொள்க.
'பந்நகதுவசன்' என்றது, அவன்கொடியே அவனது கொடுந்தன்மையையும்,
நாவிரண்டுடைமையையும், நன்றி யறிவின்மையையும், எப்போதும்
வக்கிரகதியிற்செல்லுந் தன்மையையும் விளக்கும் என்றற்குப் போலும்.
பன்னகம் - அதன்வடிவுக்கு ஆகுபெயர்; அடுத்த கவியில் 'முரசு' என்பதும்
அது.

     பக்திமிகுதியால் எம்பெருமானது உருவெளிப்பாட்டை எங்கும் என்றும்
காண்பே னென்பார், 'என்னயனம்விட்டகலாதே' என்றார்.  'கமலக்கண்ண
னென்கண்ணினுள்ளான் காண்ப னவன் கண்களாலே, அமலங்களாகவிழிக்கு
மைம்புலனு மவன்மூர்த்தி' என்ற ஆழ்வாரருளிச்செயலின் பொருளை இங்கே
அறிக.

    ஆசீர்வாதம், நமஸ்காரம், வஸ்துநிர்த்தேசம் என்ற மூன்று வரை
மங்களங்களுள் இது ஈற்றதன்பாற்படு மென்க.  படர்ந்த கான் - (தாம்) சென்ற
காடு.  தொடர்ந்த நான்மறை - (சொற்கள் ஒன்றோடொன்று) தொடரப்பெற்ற
வேதம் எனப் பொருள் கொள்வாரும் உளர்.

    இதுமுதற் பதின்மூன்றுகவிகள் - பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும்,
ஆறாஞ்சீர் மாங்காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்.

2.-தருமபுத்திரன் தனதுநண்பரான அரசர்க்குச் செய்தி
தெரிவித்தல்.

முகுந்தன்வாசகங் கேட்பதன்முன்னமே முரசுயர்த்தவன்முன்னி
மிகுந்தகோபமோ டிக்கணமுடிப்பன்யான் வெம்பகையினி யென்னாத்
தகுந்தராதிபர் தன்னுடனியைந்தவர் தமக்குவெஞ்சமர் மூளப்
புகுந்தவாறெலாந் தூதரிற்போக்கினானோலையின் புறத்தம்மா.

     (இ -ள்.) முகுந்தன் - கண்ணனது, வாசகம் - வார்த்தையை, கேட்பதன்
முன்னமே - கேட்பதற்கு முன்பே [கேட்டவுடனே விரை