3.-ஐந்துகவிகள் -பலதேசத்தரசர்கள் வந்து திரளுதலைக் கூறும். எட்டுத்திக்கினுமுள்ள மன்னவருடன் யாகசேனனும் வந்தான், திட்டத்துய்மனுந்திட்டகேதுவும் விறற்சிகண்டியுமுறைவந்தார், ஒட்டிப்போர்பொருமுத்தமோசாவும் வேலுதாமனுமுடன்வந்தார், பட்டப்போதகந்தேர்பரியாளெனும் படையுடைப்பாஞ்சாலர். |
(இ -ள்) (அதனாற் செய்தியறிந்தவுடனே), - பட்டம் - நெற்றிப்பட்டத்தைத்தரித்த, போதகம் - யானையும், தேர் - இரதமும், பரி - குதிரையும், ஆள் - காலாளும், எனும் - என்கிற, படை - (நால்வகைச்) சேனையையும், உடை - உடைய, பாஞ்சாலர் - பாஞ்சாலதேசத் தரசர்களுள், யாகசேனனும் - துருபதராசனும், எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் - எல்லாத் திக்குக்களிலுமுள்ள அரசர்களுடனே, வந்தான் - (உபப்பிலாவியத்துப் பாண்டவரிடம்) வந்தான்; திட்டத்துய்மனும் - திருஷ்டத்யும்நனும், திட்டகேதுவும் - திருஷ்டகேதுவும், விறல் சிகண்டியும் - வலிமையையுடைய சிகண்டியும், முறை வந்தார் - முறையே வந்தார்கள்; ஒட்டி - (முன்னமே) சபதஞ்செய்து, போர் பொரும் - (அங்ஙனமே) போர்செய்து முடிக்க வல்ல, உத்தமோசாவும் - உத்தமோஜஸ் என்பவனும், வேல் உதாமனும் - வேலையேந்திய யுதாமந்யுஎன்பவனும், உடன்வந்தார் - உடனே வந்தார்கள்; (எ - று.) யாகசேனன் - திரௌபதியின் தந்தை. திருஷ்டத்யும்நன், சிகண்டி - யாகசேனனது புதல்வர். திருஷ்டத்யுமநனது மகன் திருஷ்டகேது வென ஸ்ரீ விஷ்ணுபுராணத்தால் விளங்கும். அங்கிவேச முனிவனிடத்தில் துரோணாசாரியருடன் வில்வித்தையைக் கற்றுவந்தபொழுது 'எனக்கு இராச்சியங் கிடைத்தபின்னர்ப் பாதி உனக்குப் பங்கிட்டுக் கொடுப்பேன்' என்றுவாக்குத்தத்தஞ்செய்திருந்த பாஞ்சாலாராசனாகிய துருபதன், பின்பு ஒருகாலத்தில் அத்துரோணன் தன்குழந்தைக்குப் பாலுக்காகப் பசுவேண்டுமென்று சென்றுகேட்டபொழுது, முகமறியாதவன்போல 'நீயார்?' என்று வினவிச் சில பரிகாச வார்த்தைகளைச் சொல்லிச் சபையிற் பங்கப்படுத்த, அப்பொழுது அவன் 'என்மாணாக்கனைக்கொண்டு உன்னை வென்று கட்டிக் கொணரச்செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்' என்று சபதஞ்செய்துவந்து, பின் அங்ஙனமே அருச்சுனனைக்கொண்டு பங்கப்படுத்தி அந்தப்பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவிட, அவ்யாகசேனன் துரோணன்மீது மிகக்கறுக்கொண்டு அவனைக் கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும், அருச்சுனனது பலபராக்கிரமங்களைக் கண்டு மகிழ்ந்து அவனுக்கு மணஞ் செய்து கொடுக்கும் பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல் வேண்டுமென்று புத்திரகாமயாகஞ் செய்விக்க, அவ்வோமத்தீயினின்றும் திரௌபதியுடன் தோன்றின புத்திரனே திட்டத்துய்மனென அறிக. இவன் கௌரவ பாண்டவர்க்கு வில்லாசிரியனும் மிக்க ஆற்றலுடையவனுமான துரோணனைக் கொல்லும் வல்லமையுடையா னாதலால், இவன் பெயரைமுதலில் எடுத்துக் கூறினார், 'விறற்சிகண்டி' எனச் சிகண் |