பக்கம் எண் :

298பாரதம்உத்தியோக பருவம்

சோனைமாமுகிலேழுமொத்ததிர்ந்தன துந்துபிக்குலம்வந்த,
தானைமன்னரைத்தனித்தனிமுறைமையாற்றருமனுமெதிர்கொண்டான்.

     (இ -ள்.) யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் - கஜ ரத துரக
பதாதியென்னும் வகையினால், இலக்கணத்து எண்பட்ட - (அகௌஹிணி)
இலக்கணத்தில் வைத்துக் கணக்கிடப்பட்ட, சேனை ஏழுஉம் அக்குரோணிகள்
- ஏழு அகௌஹிணி சேனைகளும், திரை கடல் ஏழு என்ன -
அலைகளையுடைய ஏழுகடல்கள்போல, திரண்டன -  ஒருங்குகூடின;துந்துபி
குலம் - (அவற்றிலே அடிக்கப்படுகிற) ரணபேரிகையின்கூட்டங்கள், சோனை
மா முகில் ஏழும் ஒத்து -இடைவிடாப்பெருமழைபொழியும் பெரியமேகங்கள்
ஏழையும் போன்று,அதிர்ந்தன - ஒலித்தன; வந்த - (இவ்வாறு தனக்குப்
படைத்துணையாக) வந்த,தானை மன்னரை - சேனைகளையுடைய
அரசர்களை, தருமனும் -தருமபுத்திரனும், முறைமையால் - (அவரவர்க்குரிய)
முறைப்படி, தனி தனி -,எதிர்கொண்டான்-எதிர் சென்று அழைத்துவந்து
உபசரித்தான்;(எ - று.)

    தருமத்தினின்றுந் தவறினவர்களுக்குத் தகுந்த தண்டனை செய்து
தருமத்தைக்காத்தலால், எமனுக்குத் தருமனென்று பெயர்; 'தந்தையே
மைந்தனாகப் பிறக்கிறான்' என்னும் நூல்வழக்குப்பற்றி, தருமபுத்திரனை
'தருமன்' என்றது.  இலக்கணம் - லக்ஷணம்.  அக்குரோணி -
அகௌஹிணீ. அக்குரோணி - யானை இருபத்தோராயிரத்
தெண்ணூற்றெழுபது, தேர்இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது, குதிரை
அறுபத்தையாயிரத்துஅறுநூற்றுப்பத்து, காலாள் - லட்சத்தொன்பதினாயிரத்து
முந்நூற்றைம்பது; ஆகஇரண்டு லட்சத்துப் பதினெண்ணாயிரத்து எழுநூறு
கொண்டது.  (இத்தொகை,வியாசபாரதத்தில் இரண்டாம் அத்தியாயத்திற்
கண்டது.) கடலேழ் - உவர்நீர்,கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர்
என இவற்றின் மயமானவை.ஏழ் என ழகரமெய்யீற்றுப்பெயரென்பது,
ஆசிரியர் தொல்காப்பியனார் மதம்;ஏழு என முற்றியலுகர
வீற்றுப்பெயரென்பர், நன்னூலார்.  முகிலேழ் -சம்வர்த்தம், ஆவர்த்தம்,
புட்கலாவர்த்தம், சங்காரிதம், துரோணம், காளமுகி,நீலவர்ணம் என்பன.
'துந்துபிக் குல மார்ப்ப' என்றும் பாடம்.

9.-தருமன் தனக்குஅரசுரிமைகொடாமல் துரியோதனன்
மறுத்ததை அரசர்கட்குக் கூறுதல்.

தான்வணங்குநர் தன்கழல்வணங்குநர் தங்களைத்தழீஇக்கொண்டு
தேன்வணங்குதார் மன்னவரிருந்தபின்சென்றவர்முகநோக்கி
யான்வணங்கி மாமாயனைத் தூதுவிட்டெனதுபாரெனக்கென்ன
வான்வணங்கினும் வணங்கலாமுடியினான் மறுத்தமர்புரிகென்றான்.

இதுவும், அடுத்த கவியும் - ஒருதொடர்.

     (இ -ள்.) (தருமபுத்திரன்) தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர்
தங்களை - தன்னால் வணங்கத்தக்கவரும் தனது பாதங்களை வணங்குபவரும்
ஆகிய அவ்வவ்வரசர்களை, தழீஇக்கொண்டு - (அவரவர் தகுதிக்கு ஏற்ப)
ஆதரித்து உபசரித்து, - தேன் வணங்கு