பக்கம் எண் :

படையெழுச்சிச் சருக்கம் 299

தார்மன்னவர் இருந்தபின் - வண்டுகள்மொய்க்கும் பூமாலையை யணிந்த
அவ்வரசர்கள் (தக்க ஆசனங்களில்) வீற்றிருந்தபின்பு, சென்று - (அவரருகிற்)
சென்று, அவர் முகம் நோக்கி - அவர்களது முகத்தைப் பார்த்து,- 'யான்-,
வணங்கி - பணிந்து, மா மாயனை தூது விட்டு - மிக்கமாயையுடைய
கண்ணபிரானைத் தூதனுப்பி, எனது பார் எனக்கு என்ன - யான் முன்
ஆண்டுவந்த இராச்சியம் (இப்பொழுது) எனக்கு (த் தரத்தக்கது) என்று
கேட்க,- வான் வணங்கினும் வணங்கலா முடியினான் - தேவர்கள் (வந்து
தன்னைப்) பணிந்தாலும் எதிர்பணியாத சிரத்தையுடைய துரியோதனன்,
மறுத்து- (சிறிதுங்கொடேனென்று என்வேண்டுகோளை) உபேட்சித்து, அமர்
புரிகஎன்றான் - (வல்லவராயின்) போர்புரிவாராக என்று கூறிவிட்டான்;
(எ - று.)

    இப்பாட்டில் இரண்டாமடியில் 'நோக்கி' என்ற வினையெச்சம், அடுத்த
கவியிறுதியில் 'என்றான்' என்ற முற்றொடுமுடியும்.  தேன் - வண்டின் ஓர்
சாதி; அது - நல்லமணத்தேசெல்வது.  இனி, தேன் வணங்கு தார் -
தேனொழுகும் மலை யென்றுமாம்.  'வணங்கு', என்பதற்குச் சந்தர்ப்பத்திற்கு
ஏற்பப் பொருள்கொள்ளப்பட்டது.  'தார்' என்றதில், போர்வெற்றிக்குரிய
பூமாலையும் அவரவர்க்குரிய அடையாளப் பூமாலையும் ஆக இரண்டும்
அடங்கும்.  சென்றவர் என ஒரு சொல்லாக எடுத்து,
வந்தவரெனக்கொள்ளலுமாம்.  வணங்கி என்றதற்கு - கண்ணனை நமஸ்கரித்து
என்றாவது, கீழ்ப்படிந்து துரியோதனனோடு சாமவுபாயத்திற்பொருந்தி
யென்றாவது கருத்துக்கொள்க.  மாயையாவது - கூடாததையும் கூட்டுவிக்குந்
திறம்.  அகடிதகடநா சாமர்த்தியம்; பிரபஞ்சகாரணமான பிரகிருதியுமாம்;
ஆச்சரியகரமான குணங்களுஞ் செயலுமாகலாம்.  மாயவன் - மாயைபோற்
கருநிறமுடையா னெனினுமாம்.  வான் - அதிற்சஞ்சரிக்குந் தேவர்க்கு
இடவாகுபெயர்.துரியோதனனுக்கு 'வணங்கா முடிமன்னன்' என்று ஒருபெயர்.
'மன்னவன்'என்றும் பாடம்.                                (333)

10.-இதுவும் அது.

கேண்மையாலெனதரசுநீதருகெனக்கேட்கவுமதியாமல்,
ஆண்மையாலவன்மறுத்தமையெனக்குயிரனையநீரறிமின்கள்,
வாண்மையால்வரிவின்மையான்மேன்மையால்வலியுரைக்கலனுங்கள்,
தோண்மையாலமர்தொலைத்தடல்வாகையுஞ்சூடுவனினியென்றான்.

     (இ -ள்.) கேண்மையால் - சினேகதருமத்தால் [சமாதானவழியால்
என்றபடி], எனது அரசு நீ தருக என - எனக்கு உரிய இராச்சியத்தை நீ
கொடுப்பாயாக வென்று, கேட்கவும் - (யான் கண்ணனைக் கொண்டு
வேண்டிக்) கேட்டிடவும், அவன் - அத்துரியோதனன், மதியாமல் -
இலட்சியஞ் செய்யாமல், ஆண்மையால் - (தனது) பராக்கிரமத்தால்,
மறுத்தமை- (இராச்சியங் கொடுக்கமாட்டேனென்று) மறுத்துவிட்டதை,
எனக்கு உயிர்அனைய நீர் - எனக்கு உயிரைப் போலச் சிறந்த ஆதாரமான
நீங்கள்,அறிமின்கள் - அறிந்திருங்கள்; வாண்மையால் - வாளின்தொழில்
வன்மையாலும், வரி வின்மையால் - கட்டமைந்த வில்லின்
தொழில்வன்மையாலும், மேன்மையால் -