பெருமையாலும், வலி உரைக்கலான் - (நான்) பராக்கிரமங் கூறிக் கொள்கிறேனில்லை; இனி - இனிமேல், உங்கள் தோண்மையால் - உங்களது புஜபலத்தால், அமர் தொலைத்து - போரில் (பகைவரை) ஒழித்து, அடல் வாகையும் சூடுவன் - அவ்வெற்றிக்கு அடையாளமான காட்டுவாகைப் பூமாலையையுந் தரிப்பேன், என்றான் - என்று (தருமன் அரசரை நோக்கிக்) கூறினான்; (எ - று.) கேண்மை - (ஒருவர்க்கொருவர் யோகக்ஷேமசமாசாரங்களைக்) கேட்குந் தன்மை யென நண்புக்குக் காரணப்பெயர்: வினைப்பகுதியடியாகப் பிறந்த பண்புப்பெயர். ஆண்மை - ஆண்தன்மை: பௌருஷம்; அரசாளுந் தன்மையுமாம். உயிருவமையால் இன்றியமையாமை கூறி அவரைப் புகழ்ந்தபடி. வாண்மை, வின்மை என்றவற்றில், 'மை' விகுதி தன்மைப் பொருளை யுணர்த்தும். அடல் - (பகைவரைக்) கொல்லுதல். வாகை யென்னும் ஓர் மரத்தின் பெயர் - அதன் மலரினாலாகிய மாலைக்கு இருமடியாகுபெயர். வாகைப்பூமாலை பகைவரை வென்றோர் சூடுவதாதலை "வெட்சிநிரை கவர்தல் **** மிக்கோர், செருவென்றது வாகையாம்" என்றதனாலும் அறிக. (334) 11.-வந்த அரசர்கள்தருமனுக்குத் தைரியங்கூறுதல். வெங்கண்மாமுரசுயர்த்தவனிம்மொழிவிளம்பலும்விளக்கஞ்செய் திங்கள்சூழ்தருதாரையின் கணமெனச் சேர்ந்தமன்னவரெல்லாம் எங்களாவியுமெம்பெருஞ்சேனையும் யாவையுநினவென்றார் தங்கள்வீரமுமானமுமரபுநல்வாய்மையுந்தவறில்லார். |
(இ -ள்.) வெம் - (பகைவர்க்குப்) பயங்கரமான, கண் - தன்மை யையுடைய, மா முரசு - பெரிய முரசத்தின் வடிவத்தையெழுதின கொடியை, உயர்த்தவன் - உயர எடுத்தவனான யுதிட்டிரமகாராசன், இ மொழி விளம்பலும்- இந்த வார்த்தையைக் கூறினவுடனே,- தங்கள் வீரமும் மானமும் மரபும் நல்வாய்மையும் தவறு இல்லார் - தங்களது பராக்கிரமமும் மானமும்குலப்பெருமையும் சிறந்த சத்தியமும் (என்றும்) பிறழ்தலில்லாதவராகிய,விளக்கம் செய் திங்கள் சூழ்தரு தாரையின் கணம் என சேர்ந்த மன்னவர்எல்லாம் - பிரகாசத்தைச் செய்கிற பூர்ணசந்திரனைச் சூழ்ந்துள்ளநட்சத்திரங்களின் கூட்டம்போல (த் தருமனை)ச் சூழ்ந்துள்ள அவ்வரசர்கள்யாவரும்.- எங்கள் ஆவியும் எம் பெருசேனையும் யாவையும் நின என்றார் -'எங்கள் உயிரும் எங்கள் பெரிய சேனைகளும் ஆகிய எல்லாப் பொருளும்உனக்கே உரியனவாம்' என்று (தருமனுக்கு) உறுதி கூறினார்கள்; (எ - று.) விளம்பலும் என்றார் என இயையும். சந்திரன் நட்சத்திரங்களுக்கு அதிபதியாதல்போல, இவ்வரசரெல்லாம் தருமனைத் தமக்குத் தலைவனாகக் கொண்டதனால் இங்கே இவ்வுவமை கூறினார். "யாமெய்யாக் கண்டவற்றுளில்லை யெனைத்தொன்றும், வாய்மையினல்ல பிற" என்பவாதலால் 'நல்வாய்மை' எனப்பட்டது. சொன்ன வார்த்தை தவறாமல் பராக்கிரமங் கொண்டு பகைவென்று மானங்காக்கவல்ல உயர்குடிப்பிறப்பினரென்பார் 'தங்கள்வீரமுமானமு |